வாடல் நோய்: பர்கொல்டேரியாகேரியோபில்லி
அறிகுறிகள்:
- செடியின் மேல்பகுதி வெளிர் நிறமாக் மாறி வாடத் தொடங்கும். இதன் தண்டுப் பகுதியில் நிறம் மாறிய கோடுகள் மற்றும் பிளவுபட்டிருத்தல் இந்நோயின் தன்மையாகும்.
- வேரின் ஒரு பகுதி அழுகுதல் மற்றும் புறத் திசுக்கள் ஒட்டிக் கொள்ளுதல் மற்றும் நிறம் மாறிக் காணப்படுதல், வளைந்திருப்பதற்கு பதிலாக நேராக இருத்தல்.
- இலைகள் முறுக்கி காணப்படும். வேர்கள் பொதுவாக ஒரு பக்கம் இல்லாதிருத்தல் மற்றும் நிறம் மாறுதல். துண்டு நுனியின் அடிப்பகுதி நிறம் மாறி பழுப்பு நிறம் மேல் நோக்கி பரவும்.
 |
 |
|
|
வாடல் நோய் |
நிறம் மாறிய கோடுகள் |
|
|
மேலாண்மை:
- தாவரத்தின் மேற்பகுதியில் உள்ள நோயற்ற குறைந்த பாதிப்புள்ள பகுதிகளை உபயோகித்து நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
- பாதிக்கப்பட்ட செடிகளை சேகரித்து, எரித்து விடவும். செடியின் மேல் பூவாளி கொண்டு தண்ணீர் தெளித்தல் (அ) தூவுதல் தவிர்க்கப்பட வேண்டும்
- நோயற்ற நடவு பொருட்களை உபயோகிக்க வேண்டும். எலிகண்ட்ஸ், நார்த்லேண்ட் மந்றும் ஸ்டார்லைட் போன்ற இரகங்கள் வாடல் நோயினால் குறைந்த அளவே பாதிக்கப்படுகின்றன.
Image source: University of Agricultural Science, GKVK, Bangalore |