பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு

அல்டர்னேரியா கருகல்: அல்டெர்னேரியா ரிசினி
அறிகுறிகள்

  • இந்நோய்க்கான அறிகுறிகள் வட்ட வடிவ வளையங்களாக இலைகளில் காணப்படுகின்றன.
  • செடிகளில் இந்நோய், தண்டு, இலை, காய்களில் காணப்படுகிறது.
  • இந்த இலைப்புள்ளிகள் முதலில் பழுப்பு நிறமாகவும், பின்பு நீலம் கலந்த பச்சை நிறமாகவும் காணப்படுகிறது.
  • இந்நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தால் இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய கருகல் தோற்றத்தைக் கொடுத்து, பின்பு இலைகள் இறுதியில் உதிர்ந்துவிடுகின்றன.
  • பாதி முதிர்ச்சியடைந்த காய்களில், உடனடியாக வாடிவிடுகின்றன. பழுப்பு நிறமாகவும் மாறியும் இலைகள் மற்றும் காய்கள் தொங்கியும் காணப்படுகின்றன.
  • பாதிக்கப்பட்ட செடிகளில் விதைகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படுகிறது.

கட்டுப்பாடு

  • விதையை ஏதாவது ஒரு உயிரியில் ஊக்கியுடன் ஒரு டி.விரிடி / சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் நேர்த்தி செய்யலாம்.
  • விதையை கேப்டான் அல்லது திரம் 4 கிராம் / கிலோ அல்லது மேங்கோசெப் 2.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் விதைத்த 90 நாட்களில் 15 நாள் இடைவெளியில் நேர்த்தி செய்யலாம்.

 

Castro Castro