வாடல்நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம்
அறிகுறிகள்
- இலைகள் மடங்கியும், தொங்கியும் நுனியில் மட்டும் இலைகள் இருக்குமாறு காட்சியளிக்கும்.
- செடிகள் வாடியும், வேர்கள் மாற்றமடைந்தும், திசுக்கள் இறந்தும், இறுதியில் செடிகளே இறந்துவிடுகின்றன.
- இலையின் நுனியில் கருகியும், இலையின் நரம்புப் பகுதிகளுக்கு இடையில் பரவியும், பின்பு இலை முழுவதும் கருகி காணப்படும்.
- தண்டுப் பகுதியை பிளந்து பார்த்தால் பழுப்பு நிறத் தோற்றம், மற்றும் வெண்மையான பூசண வளர்ச்சியும் காணப்படும்.
கட்டுப்பாடு
- நோயற்ற விதைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
- நோய் எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களான ஜோதி, ஜீவாலா, ஜிசிஹச்-டி, டிசிஹச்-30 மற்றும் எஸ்ஹச்பி 145, ஆகியவை பயிரிடலாம்.
- முன் பயிரின் கழிவுகளை எரிக்கவேண்டும்.
- பசுந்தாள் உரம் மற்றும் ஊடுபயிராக துவரையையும் பயன்படுத்தலாம்.
- விதையை திரம் 3 கிராம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியின் மூலம் நேர்த்தி செய்யலாம்.
- 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை தொழு உரத்துடன் கலந்து டபெருகச் செய்து, தண்ணீர் தெளித்து பாலித்தீனால் 15 நாள் மூடிவைத்து பின்பு இரண்டு கால்களுக்கு அல்லது கரைகளுக்கு போட்டால் இந்நோய் பாதிப்பதை சிறிது தடுக்கலாம்.
|
|