முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: கொண்டக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்
கழுத்துப்பட்டை அழுகல் நோய்:
ஸ்கிரோடியம்ரோல்ஃப்சி
தாக்குதலின் அறிகுறிகள்
இது விதைப்பு ஆரம்பத்திலிருந்து ஆறு வாரங்களில் வருகிறது.
இதன் இலைகள் வாடுவதற்கு முன் சற்று மஞ்சளான மாற்றமும் வயலின் சிதறியும் காணப்படும் .
நாற்றின் நிறம் மாறிவிடும்.
தண்டு மற்றும் வேர் சற்று மென்மையானதாகவும் சிதைவுடனும் காணப்படும்.
நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுப்புவெள்ளை நிறமாக காணப்படும்.
வெள்ளை நிறமான பாதிக்கப்பட்ட பயிர்களில் கடுகு வடிவில் கருப்புபுள்ளிகள் போன்று காணப்படும் இவை இழைமுடிச்சுக்கள் என அழைக்கப்படும் .
கட்டுப்படுத்தும் முறை
கோடை காலத்தில் ஆழமான உழுதல் வேண்டும்.
அதிக ஈரப்பதம் காலத்தில் விதைப்பை தவிர்க்க வேண்டும்.
நாற்றுகளை அதிக ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
விதைப்பதற்கு முன் மற்றும் அறுவடைக்குப் பிறகு முன்னால் பயிர் செய்தவைகளின் எச்சங்கள் மற்றும் களைகளை அழிக்க வேண்டும்.
நிலம்தயாரிப்பின் முன் நிலத்தில் இருந்து மக்காத பொருட்களை நீக்க வேண்டும்.
கார்பன்டாசிம் 1 கிராம்/ ஒரு கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015