பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: மிளகாய்
சாம்பல் பூசணம்: போட்ரிடிஸ் சினேரியா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பழுப்பு நிறப் புள்ளிகள் மண் அருகே அல்லது வித்திலைகளில் தோன்றும்.
  • இலைகள் மீது நீர் நனைத்த புண்கள் தோன்றும்  மற்றும்  தண்டுகள் கருப்பாகி சரிந்து விடும்
  • நீர் நனைத்த புள்ளிகள் பெரிய மஞ்சள்-பச்சை அல்லது சாம்பல்-பழுப்பு புண்களாய் விரிவாகி  மென்மையாக பஞ்சுபோன்று இருக்கும்
  • வெல்வெட் போன்ற பூஞ்சை மற்றும் வித்திகள் சிதைவின் மேற்பரப்பில் குளிர் மற்றும் ஈரப்பதமான நிலைமைகளில் தோன்றும்

நோய் காரணி:

  • போட்ரிடிஸ் சினேரியா -  சாம்பல் நிற மரக்கிளை போன்ற கொநிடியோஸ்போர்களில் ஏராளமான கண்ணாடி போன்ற கொணிடியாக்கள் தோன்றும்.
  • குளிர்காலத்தில் ச்க்ளிரோசியா அல்லது வசந்த காலத்தில் மைசிலியாக்கல் மூலம்  இந்நோய் தோன்றும்.
  • காற்று மற்றும் மழை நீர் மூலம் கொணிடியாக்கள் பரவுகிறது

நோய் தோன்றும் சூழ்நிலைகள் மற்றும் பரவல்:

  • குளிர் மற்றும் ஈரமான வானிலையில் பூஞ்சைகள் தோன்றும்
  • வெப்பநிலை 17–23°C, ஈரப்பதம்- 90%
  • அளவுக்கதிகமான  நைட்ரஜன் பயன்பாடு
  • இரவில் இலை ஈரப்பதம், அடர்த்தியான பயிர் வளர்ப்பு மூலம் ஏற்படும். இதனால் நோய் கடுமை அடையும்.

 

 

 
சாம்பல் பூசணம  

 

கட்டுப்படுத்தும் முறை:
  • தோட்ட சுகாதாரம்-  பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி எரித்துவிட வேண்டும்
  • நடவின் போது நல்ல இடைவெளியில் செடிகளை நட்டு வயல்களுக்கு  இடையே நல்ல காற்றோட்டம் விட வேண்டும்.
  • காய்கறிகளை 38 ° C சூடான காற்றில் 48-72 மணி நேரம் அல்லது 50-53 °C சூடான நீரில் 2-3 நிமிடத்திற்கு பயன்படுத்தி  நோயை கட்டுப்படுத்தலாம்.
Source of Images:
http://www.worldofchillies.com/growing_chillies/chilli_pests_problems_diseases/chilli_diseases/chillidiseases.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015