பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்கள்

தண்டு நலிவு நோய் / விரைவு நலிவு நோய்: டிரைடிசா நச்சுயிரி

அறிகுறிகள்:

  • எழுமிச்சை நாற்றுகள் எளிதில் நோய் தாக்கக்கூடியவை
  • ஆனால் இனிப்பு ஆரஞ்சு வகை மற்றும் நாற்றுகள் அல்லது எழுமிச்சை, டிரைபோலியேட் ஆரஞ்சு, சிட்ரேன்சு, ரங்பூர் எழுமிச்சை வேர்கள் அதிகளவில் பாதிக்காது. புளிப்பான வேர் கொண்ட திராட்சை பழம் மற்றும் ஆரஞ்சு பாதிக்கக்கூடும்
  • இனிப்பு ஆரஞ்சு பழங்களின் வேர்ப்பகுதிகள் எளிதில் பாதிக்கப்படும் மற்றும் இலைகளில் நோயின் அறிகுறிகள் காணப்படும்
  • வேர்ப்பகுதி அழுகி, கிளைகள் அழிந்துவிடும். பழங்கள் குறைந்து செடி மட்டும் எலும்புக் கூடுப் பபோல் காணப்படும்
  • புளிப்பான ஆரஞ்சின் மரப்பட்டையின் பகுதி காய்ந்துக் காணப்படும்
  • திராட்சை பழங்கள் மற்றும் எலுமிச்சைகளின் வேர் பகுதிகள் எளிதில் பாதிக்கக்கூடும்
  • எலுமிச்சை இலைகளில் அதிகளவில் நரம்பு புள்ளி போன்று காணப்படும்
  • மரத்தின் வளர்ச்சி குறைந்து விடும் மற்றும் பழ சாகுபடி குறைந்துவிடும் பழங்கள் சிறிதளவில் காணப்படும்
  • மரப்பட்டையில் பாதிக்கப்பட்ட மொட்டுகள் மற்றும் டாக்சோப்டேரா சிட்ரைசிடா (அசுவினிப் பூச்சி) ஆகியவையால் பாதிக்கப்பட்டவைகளை உபயோகிக்கக் கூடாது

கட்டுப்பாடு:

  • இனிப்பு வகை ஆரஞ்சு மற்றும் கிச்சிலிப்பழ வகை ஆகிய பழங்களின் பாதிக்கப்பட்ட வேர் பகுதிகளை அகற்றி விட வேண்டும்
  • ட்ரிடிஸ்சா நச்சுயிரி செலுத்தப்பட்ட எழுமிச்சை நாற்றுகளை பயன்படுத்தவும்

 

 

 

 

 

 

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழ வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015