பயிர் பாதுகாப்பு :: கோக்கோ பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பூச்சிகள் அல்லாத உயிரினங்களின் தாக்குதல் :

எலி (  ரேட்டஸ் ரேட்டாஸ் ) மற்றும் அணில் ( புயூனாம்புலஸ் டிரிஸிரியேட்டஸ் மற்றும் பு. பல்மாரம் ) ஆகியவை கோக்கோவில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் கொறிப்பனவைகள்.
பொதுவாக எலிகள் தண்டுக்கு அருகே உள்ள காய்களை கடித்து துண்டுத் துண்டாக்கும். ஆனால் அணில்கள் காயின் நடுப்பகுதியை கடித்துத் துண்டாக்கும்.


மேலாண்மை:

  • புரோமோடையோலோன்  (0.005%) 10 கிராம் மெழுகு கேக்குகள் (அல்லது) கார்போபியூரான்னை பழுத்த பழங்களினுள் வைத்து, பின் கோக்கோ மரத்தின் மரக்கிளைகளில் 10-12  நாட்கள் இடைவெளியில் 2 முறை வைக்கவும்.
  • மரத்தாலான பொறிகள் (அல்லது) கம்பிவலை கொண்ட பொறியில் முத்தின தேங்காய் வைத்து அணிலைக் கட்டுப்படுத்தலாம்.



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016