பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
காண்டாமிருக வண்டு: ஒரைடக்ஸ் ரைனோசெரஸ்
இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
|
|
|
துவாரம்
|
நடுக்குருத்தில் துளைகளுடன் மென்றுதின்ன மரச்சக்கைகள் ஒட்டியிருத்தல் |
முக்கோண வடிவில் இலைகள் |
- இவ்வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப்பாகத்தில் துளையிட்டு, மரத்தின் உள்ளே சென்று வளரும் மொட்டுப்பகுதியை மென்று விடுகிறது.
- தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குருத்து விரியும்போது, தென்னை மட்டை முக்கோண வடிவில், சீராக கத்தரியால் வெட்டியதுபோல் தோற்றமளிக்கும்.
- இவ்வண்டு தாக்குவதால் 10-15% மகசூல் குறையும்.
- மொட்டுப்பகுதியை மென்றபின் மீதியாகும் மரச்சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது.
பூச்சியை அடையாளம் காணுதல்:
|
|
காண்டாமிருக வண்டு புழு |
காண்டாமிருக வண்டு |
- முட்டை: வெள்ளை நீள்வட்ட வடிவமுடைய முட்டைகள் எருக்குழி, மக்கிய உரத்தின் அடிப்பகுதி போன்ற பகுதிகளில் 5-15 செ.மீ ஆழம் வரை காணப்படும். முட்டைப்பருவம் 8-18 நாட்கள். ஒரு பெண் வண்டானது 140 லிருந்து 150 முட்டைகள் வரை இடும்.
- புழு: தடித்து , மந்தமான, வெள்ளை நிறத்தில் சி ("C") போன்று வளைவுடன் இலேசான பழுப்பு நிற தலையுடன் 5-30 செ,மீ ஆழத்தில் எருக்குழியினுள் காணப்படும்,
- கூட்டுப் புழு: இவை மண்ணினுள் 0.3-1 மீ ஆழத்தில் காணப்படும்,
- வளர்ச்சியடைந்த வண்டுகள்: இது நன்கு தடித்து பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில், தலையில் நீண்ட கொம்புகள் நீட்டிக் கொண்டிருக்குமாறு அமைந்திருக்கும். பெண் வண்டுகளில் கொம்புகள் குட்டையாகவே இருக்கும்.
மேலாண்மை:
உழவியல் முறைகள்:
- தாக்கப்பட்ட மடிந்துபோன மரங்களை தோப்பிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும். தோப்பை சுத்தமாக வைக்க வேண்டும்.
- கம்போஸ்ட் மற்றும் உரக்குழிகளில் இருந்து காண்டாமிருக வண்டின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்களை பொறுக்கி அழிக்கவும்.
இயந்திர முறை:
- வண்டின் தாக்குதல் அதிகரிக்கும் போது, மரத்தின் குறுத்துப் பாகத்தில் வளர்ந்த வண்டு உள்ளதா என்று பார்த்து, இருந்தால் கம்பி அல்லது சுளுக்கியால் அதைக் குத்தி வெளியில் எடுத்துக் கொன்று விட வேண்டும்.
- கோடை மற்றும் மழைக்காலங்களில் அந்தி நேரங்களில் விளக்கு பொறிகளை தோப்புக்குள் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
இராசயன முறை:
- காண்டாமிருக வண்டின் வாயில் பேக்குலோ வைரஸ் ஒரைகடஸ் என்ற வைரஸை ஊசிமூலம் செலுத்தி 15 வண்டுகள் / 1 ஹெ என்ற அளவில் தென்னந்தோப்பில் விட்டால் அது மற்ற வண்டுகளுடன் கலந்து நோயினைப் பரப்பி அவற்றை அழிக்கின்றது.
நடுக்குருத்துப்பாகத்தில் (கொண்டை) ன்று மட்டை இடுக்குகளில் கீழ்க்கண்ட
ஏேதனம் ஒரு மருந்திடுவதன் மூலம் அவ்வண்டின் தாக்கத்தை தடுக்கலாம்.
அ) செவிடால் 8 (குருனைகள்) 25 கி +200 கி கொழு மணல் கலவையை மட்டை இடுக்குகளில் ஆண்டிற்கு 3 முறை அதாவது ஏப்ரல் - மே, செப்டம்பர்-அக்டோபர் மற்றும் டிசம்பர்-ஜனவரி போன்ற பருவங்களில் இடவும்.
ஆ) 10-5கி அளவுள்ள அந்து உருண்டையை மணலால் மூடவும் இதனை 45 நாட்களுக்கு ஒரு முறை இளம் நாற்றகளுக்கு மட்டை இடுக்குகளில் வைக்கவும்.
- 5 கிராம் 10 கி போரேட் மருந்தினை துனைகளுடன் கூடிய பொட்டலமாக எடுத்து 6 மாத இடைவெளியில் ஆண்டிற்கு ஒரு முறை வைக்ககவும்.
- காண்டாமிருக வண்டுகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் காப்பரில் 0.1 (50% WP) கலவையை 6 மாதத்திற்க ஒரு முறை தெளிக்க வேண்டும்.
பொறி அமைத்தல்:
|
|
காண்டாமிருக வண்டு
|
பிடிபட்ட காண்டாமிருக வண்டு |
உயிரியல் முறை:
- மழைக் காலங்களில் முதல் மழையினைத் தொடர்ந்து விளக்கும் பொறிகளை அமைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
- மெட்டாரைசியம் அனிசோபிலே பச்சைமஸ்கார்டைன் பூஞ்சையினை ஒரு மீற்கு 5 10 ஸ்போர்கள் என்ற அளவில் 250 மில்லி மெட்டாரைசியம் + 750 மில்லி நீர் சேர்த்து எருக்குழியில் தெளிப்பதனால் வண்டுகளின் இளம்புழுக்களை அழிக்கலாம்.
- ஒரு மண்பானையில் 5 லி நீருடன் 1 கி.கி அமணக்கு புண்ணாக்கு சேர்த்த கலவையை தோப்பினில் வைத்தும் கவரலாம்.
- வேப்பங்கொட்டைத் துாளையும், மணலையும் 1.2 என்ற விகிதத்தில் கலந்து, மரம் ஒன்றிற்கு 150 கி வீதம் நடுக்குருத்தின் 3 மட்டை இடுக்குகளில் வைக்கலாம்,
|
|