கரையான்: ஓடன்டோடெர்மஸ் ஒபிஸஸ்
இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- கன்றுகளை நட்ட இளம் பருவத்தில் கரையானின் தாக்குதல் அதிக அளவில் இருக்கும்.
- மரத்தின் அடிப்பாகங்களில் மணல் கலந்த மண்ணினால்் ஆன வரிகள் ஓடியிருப்பது இதன் அறிகுறியாகும்.
|
|
|
மண்ணினால் ஆன வரிகள் |
சேதமடைந்த மரப்பட்டை |
பாதிக்கப்பட்ட மரம் |
பூச்சியை அடையாளம் காணுதல்:
- முதிர்ந்த கரையான்கள்: சிறிய மஞ்சள்-வெள்ளை நிறத்தாலான பூச்சிகள் பெருங்குழுவாக வசிக்கும். இக்குழுவானது அரசன், அரசி ராணி, வேலையாட்கள் மற்றும் போர்வீரர்கள் போன்ற பலவகைப் பூச்சிகளைக் கொண்டிருக்கும்.
மேலாண்மை:
உழவியல் முறைகள்:
- தென்னந்தோப்பிற்குள்ளோ அல்லது அருகிலோ கரையான் கூடுகள் இருந்தால் கண்டுபிடித்து அழிக்கவும்.
- அங்கக உரங்கள் மட்காமல் இருப்பின் அவற்றை அகற்றி சரியான வடிகால் வசதி அமைத்தல் வேண்டும். அத்துடன் நாற்றங்காலில் வளரும் நாற்றுகளின் காய்கள் மணல் கொண்டு மூடப்படவேண்டும்.
இராசயன முறை:
- காப்பர் சல்பேட் 1% (அ) முந்திரி ஓட்டு எண்ணெய் 80% (அல்லது) குளோர்பைரிபாஸ் 3 மி.லி / லி நீரில் கலந்து வேப்ப எண்ணெய் 5% (அ) வேம்புகாய்பொடி 20% கலந்து தெளிப்பதன் மூலம் தென்னை ஓலைகளைக் கரையான் தாக்காமல் தடுக்கலாம்.
- மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு கரைசலைப் பூசுவதன் மூலமும் தடுக்கலாம்.
- வேப்ப எண்ணெய் கலந்து வளர்ந்த மரத்தில் தரையிலிருந்து 2 மீ உயரம் வரை தண்டுப்பாகத்தில் பூசுவதன் மூலமும் கரையான் தாக்காமல் தவிர்க்க இயலும்.