பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

நத்தைப் புழு: பாரசா லெப்பிடா மற்றும் கான்த்தியெலா ரொட்டன்டா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இப்பூச்சியின் புழுக்களே ஓலையைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றது. இளம் புழுக்கள் தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சயத்தை சுரண்டி உண்ணும். இவை வளரும்போது ஓலையின் நடு நரம்புகள் மட்டுமே இருக்கும். இதனால் அதிகளவில் தாக்கப்பட்ட ஓலைகள் காய்ந்து விடும்.
அறிகுறி பூச்சி

பூச்சியை அடையாளம் காணுதல்:

  • முட்டை: இதன் முட்டைகள் ஓலையின் அடிப் பரப்பில் தட்டையாக ஒட்டிக்கொண்டு பளப்பளப்பாகக் காணப்படும்.
  • இளம்புழு: இளம்புழுவின் பச்சை நிற உடலில் வெள்ளை நிறக் கோடுகள் காணப்படுவதோடு, நான்கு வரிசை சிறிய கறுப்பு நிற மயிர்க்கற்றைகள் காணப்படுகின்றன. இவை தோலில் பட்டால் எரிச்சல் மட்டும் வலி ஏற்டுகிறது.
  • கூட்டுப்புழு: நெருக்கமாக அமைந்த, அடர் பழுப்பு நிற பட்டுக் கூட்டினுள் காணப்படுகின்றன. (இக் (கக்கூன்கள்) இப்பட்டுப் போன்ற கூடுகள் மேற்பகுதி குவிந்தும் அடிப்பகுதி இலைப்பரப்பில் ஒட்டிக்கொள்ள ஏற்றவாறு தட்டையாகவும் இருக்கும். இக்கூடுகளைச் சுற்றிலும் அரிப்பை ஏற்படுத்தக் கூடிய மயிர்கள் அமைந்திருக்கும்.
  • முதிர்ந்த பூச்சி: பட்டாம் பூச்சி போன்ற வளர்ந்த பூச்சியின் பச்சை நிற இறக்கைகளின் கீழ்புறம் அடர்ந்த நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன.

மேலாண்மை:
இரசாயன முறை:

  • தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும்,
  • கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
  • டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை 2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

இயந்திர முறை:

  • பொறி அமைத்தல்: விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம். ஒரு ஹெக்டருக்கு 5 பொறிகள் தேவைப்படும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015