பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் நோய்கள் |
அடித்தண்டழுகல் நோய்: கேனோடெர்மா லூசிடம் மற்றும் கேனோடெர்மா அப்பிளனேட்டம் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- தஞ்சாவூர் வாடல் (கேனோடெர்மா வாடல்) நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் வாடல், ஓலைகள் மஞ்சள் நிறமடைதல், வெளிச்சுற்று இலைகள் தொங்கி விடுதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது.
- அதைத்தொடர்ந்து தண்டின் அடிப்பாகத்தின் வெடிப்புகள் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசிந்து, அது மேல்நோக்கி பரவும். கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும்.
- சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி, தண்டின் அடிப்பகுதியும் அழுகிவிடும்.
- மரப்பட்டை எளிதில் உடையக்கூடியதாக மாறி, அடிக்கடி செதில்களாக உரிந்து திறந்தவெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும். மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து, சிதைந்து, துர்நாற்றம் வீசும்.
- தண்டின் அடிப்பகுதியில் அரைத்தட்டு காளான் வித்து தோன்றும். கடைசியில் மரம் மடிந்து விடும்.
|
|
|
|
|
தண்டு கசிவு |
பறவைக் கண் நோய |
தொங்கிய இலைகள் |
பூஞ்சானின்பெரிய பழம்தரும் அமைப்பு |
|
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறை:
- நோய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்து விட வேண்டும்
- பசுந்தாள் உரங்களை வளர்த்து தென்னை பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை உழுது விட வேண்டும்.
- ஒரு மரத்திற்கு, ஒரு வருடத்திற்கு மரத்தை சுற்றி 4 அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்த வேண்டும்.
உயிரியல் முறை
- சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் (பிஎஃப் -1) ஐ மரத்திற்கு 200 கி வீதம், 200 கி டிரைகோடெர்மா விரிடி உடன் சேர்த்து இடலாம்.
- 200 கி பாஸ்போபாக்டா், 200 கி அசோட்டோபாக்டர் ஐ 50 கி.கி தொழு உரத்துடன் கலந்து இடலாம்.
- தொழு உரம் 50 கி.கி வேப்பம்புண்ணாக்கு 5 கி.கி வீதம் 6 மாதத்திற்கு ஒரு முறை இடலாம்.
இரசாயன முறைகள்
- தண்டின் சாறு கசியும் பகுதிகளை செதுக்கி டிரைடிமார்ஃப் 5% கொண்டு பாதுகாக்கலாம் அதைத் தொடர்ந்து சூடானதாரை ஊற்றலாம்.
- ஆரியோபங்கின் 2 கி + காப்பர் சல்பேட் 1 கி + 100 மில்லி தண்ணீரில் கலந்து அல்லது 2 மில்லி டிரைடிமார்ஃப் + 100 மில்லி தண்ணீர் அல்லது 1 மில்லி ஹெக்சகோனசோல் + 100 மில்லி தண்ணீர் கலந்து வேர் மூலம் செலுத்தலாம் (பென்சில் தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்டவேண்டும். மருந்தை பாலித்தீன் பை அல்லது பாலித்தீன் பாட்டிலில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும்.
- மரத்தை சுற்றி 1.5 மீட்டர் துாத்தில் 1% போர்டோ கலவையை 40 லி என்ற அளவில் ஊற்றி மண்ணை நனைக்க வேண்டும்.
|
|