பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் நோய்கள் |
குருத்தழுகல்நோய் : ஃபைட்டோப்தோரா பால்மிவோரா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளங்கன்றுகளில், குருத்துகள் பழுப்பு நிறமாக மாறும், மெதுவாக இழுத்தாலே கையோடு வந்துவிடும்.
- இலையின் அடித்திசுக்கள் விரைவில் அழுகி, உச்சியிலிருந்து எளிதில் பெயர்ந்து விடும்.
- நோய் முற்றிய நிலையில் குருத்துக்கள் வாடி, உதிர்ந்து விடும்.
- உச்சியில் உள்ள இளம் இலைகளின் அடிப்பகுதி மற்றும் உச்சியில் உள்ள மென்மையான திசுக்கள் அழுகி வழவழப்பாக மாறி துர்நாற்றம் வீச துவங்கும்.
- முடிவில் உச்சிப் பகுதி அடியோடு சாய்ந்து, மரம் மடிந்து விடும்.
- பெரிய மரங்களில், குருத்துகள் பழுப்பு நிறமாகி, அடிப்பகுதி பலமிலந்து தொங்கிவிடும். அழுகல் மெதுவாக கீழ்நோக்கி பரவி இறுதியில் நுனிப்பகுதியை பாதித்து மரத்தையும் அழித்து விடும். இதையடுத்து சுற்றியுள்ள இலைகள் தொங்கிவிடும். இருந்தாலும் மரத்தில் எஞ்சியிருக்கும் காய்கள் முதிர்ச்சியடையலாம்.
|
|
|
|
|
வெளிறிய இலை |
மஞ்சள் இலைகள் |
இளம் செடிகள் மஞ்சளாக |
உச்சிப் பகுதி காய்தல் |
|
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறை:
- போதுமான வடிகால்வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- நோய் அதிகம் உள்ள தோட்டத்தில் தகுந்த இடைவெளி விட்டு அதிக நெருக்கத்தை தவிர்க்க வேண்டும்.
இரசாயன முறைகள்
- நோய் தாக்கப்பட்ட கொண்டை பகுதியை அகற்றிவிட்டு, 0.25% காப்பர் ஆக்ஸிகுளோரைடை ஊற்றி கொண்டைப் பகுதியை நனைக்க வேண்டும். புதிய குருத்து வரும் வரை போர்டோ பசை தடவி மழைநீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும். (1 லி போர்டோ பசை தயாரிக்க 100 கி காப்பர்சல்பேட் மற்றும் 100 கி நீர்த்த சுண்ணாம்பை தனித்தனியே 500 மில்லி தண்ணீரில் கரைத்து, இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும்).
- தடுப்பு நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன் 0.25% காப்பர் ஆக்ஸிகுளோரைடை நோய் பாதித்த மரத்திற்கு அருகில் உள்ள மரத்தின் கொண்டையில் தெளிக்க வேண்டும். 1% போர்டோ கலவையை நோய் தாக்கப்பட்ட மற்றும் அருகில் உள்ள மரங்களின் மீது தடுப்பு நடவடிக்கையாக தெளிக்கலாம். காப்பர் பூஞ்சை கொல்லியால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மரங்களை (குட்டை ரகங்கள்) மேன்கோசெப் கொண்டு பாதுகாக்கலாம். சிறிய, துளையுள்ள பைகளில் 2 கிராம் மேன்கோசெப் வைத்து ஓலை தண்டுடன் இணையுமிடத்தில் கட்டி விடலாம். மழை பெய்யும்போது பையிலிருந்து மருந்து சிறிது சிறிதாகவெளிவரும். இதன் மூலம் மரத்தை பாதுகாக்கலாம்.
- உச்சியில் உள்ள நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி விட்டு அதன் பின்போர்டோ பசை தடவலாம் அல்லது 1 சதம் போட்டோ கலவையை உச்சியில் நன்கு படும்படி மழைக்கு முன் தெளிக்கலாம்.
- பருவமழைக்கு பின் 0.25 காப்பர் ஆக்ஸி குளோரைடை தெளிக்கலாம்.
|
|