முட்டைக்கோசு வண்ணத்துப்பூச்சி: பீரிஸ் ப். ரேப்வே
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகள் முழுவதும் சாப்பிட்டு அழித்துவிடும்
- புழுக்கள் முட்டைக்கோசை துளைத்துச் சேதப்படுத்தியிருக்கும்
பூச்சியின் விபரம்:
- புழு: வெல்வெட் நீலநிறத்தில் உடலில் கருப்புப் புள்ளிகளுடன் உடலின் பக்கவாட்டில் மஞ்சள் நிறக்கோடுகளுடன், வெண்மையான உரோமங்களுடன் காணப்படும்.
- கூட்டுப்புழு: இலை மற்றும் தண்டுப்பகுதியில் கூட்டுப்புழுக்கள் இருக்கும்.
- பூச்சி: வண்ணத்து பூச்சி வெண்மை நிறமானது. முன்னிறக்கையின் மேற்பகுதியில் கருப்பு நிற அடையாளங்களுடன் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- இளம் புழுக்களை சேகரித்து அழிக்கவும்
- கோட்டிசா கார்க்கிடோலோமியே ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்
- குயின்லாபாஸ் 25 EC @ 1000 மி.லி/ஹெக்டேர் தெளிக்கவும்
|
|

|
முட்டை |
புழு |

|

|
கூட்டுப்புழு |
பூச்சி |
|