பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆல்டர்நேரியா இலைக்கருகல் நோய் : ஆல்டர்நேரியா மேக்ரோஸ் போரா

அறிகுறிகள்

  • எல்லா பருவத்திலும் பாதிக்கக்கூடியது.  ஆனால் 45-60-ம் நாளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளில் வெளிர்ப்பழுப்பு நிறத்தில் வட்ட வடிவத்தையோ ஒழுங்கற்ற வடிவத்தையோ கொண்ட சிறு சிறு புள்ளிகள் காணப்படும்.
  • ஒவ்வொரு புள்ளியின் நடுவிலும் அழுக்காக வளையங்கள் காணப்படும்.
  • புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து இலை முழுவதும் பாதிக்கின்றன.
  • பாதிக்கப்பட்ட இலைகள் நொறுங்கி உதிர்ந்துவிடும்.
  • சிலநேரங்களில், தண்டுகளிலும் நோயின் அறிகுறி காணப்படும்.
  • தீவிர நிலையில், புள்ளிகள் பூவடிச்செதில்களிலும் காய்களிலும் காணப்படும்.

மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும்.
  • ஆரம்ப நிலையில், மான்கோசெப் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ / எக்டர் தெளிக்கவும்.
  • 15 நாட்கள் இடைவெளியில் 2 - 3 முறை தெளிக்கவும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016