அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: வாழை

சுருட்டு வகை முனை அழுகல்: வெர்ட்டிசீலியம் தியோப்ரோமா

அறிகுறிகள்:

  • இந்த நோய் முதிராத பழத்தின் நுனியில் தோன்றி, மேற்புறம் நோக்கி பரவும்
  • அழுகிய பகுதிகளில் சாம்பல் நிற பூஞ்சாண் மற்றும் பூசண வித்துக்கள் காணப்படும்
  • எரிந்த சாம்பல் போன்ற சுருட்டு நுனி தோற்றத்துடனும் அடர் நிற விளிம்புடனும் காணப்படும்
  • பழத்தின் ஒன்றில் மூன்று பகுதிகள் அழுகிவிடும். ஆனால் உட்புற திசுக்கள் உலர் அழுகல் நோயை உருவாகும்
  • பூசண வித்துக்கள் நிறமில்லாத, நீள்வட்டம் முதல் நீள் உருளை வடிவத்தில், கூர்முனை பியலிடிஸ் வழியாக தோன்றி வட்டமாக ஒன்று சேர்ந்த, வழவழப்பான தலை உடையதாகும்.
  • பூஞ்சான்கள் – செடியின் சிதைக்கூளம் – சிறு வழிப்புறம்
  • நோய் தாக்கிய செடியின் பகுதிகள் – நீர்ப்பாய்ச்சல் – பண்ணை கருவிகள்
பழம் முனையில் பிளாக்நசிவு தோல்கருப்பாதல் சாம்பல் இருத்தல்

கட்டுப்பாடு:

  •  இறந்த பூவின் பகுதிகள் மற்றும் நோய் தாக்கப்பட்ட  பழங்களை கைகளாலே  எடுத்து எரித்தால் நோயைக்  கட்டுப்படுத்தலாம்
  •  பூசணக் கொல்லியைப் பயன்படுத்தினால் நோயைக் கட்டுப்படுத்தலாம்
  •  நோய் தாக்கப்பட்ட பழங்களை பக்குவமாகக் கையாள வேண்டும். இதை உடனடியாக அகற்றிவிட வேண்டும். இல்லையென்றால் பூசணவித்துகளால் பழங்களைக் கழுவும் தண்ணீர் மாசுபடும், இதனால் மூட்டைக்கட்டும் இடத்தில் இருந்து தாக்கப்பட்ட பழங்களை அகற்ற வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015