பயிர் பாதுகாப்பு :: ஓபியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
வெட்டுப்புழு: அக்ரோடிஸ் வகை
சேதத்தின் அறிகுறி:
- புழுக்கள் இளந்தாவரங்களை தரைமட்டத்திலிருந்து வெட்டிவிடும்
- புழுக்கள் தரையின் வெடிப்புகளில் ஒளிந்து இருக்கும் மற்றும் இரவில் சுறுசுறுப்பாக காணப்படும்
பூச்சியின் விபரம்:
- புழு கரும் பழுப்பு நிறத்திலும், சிவப்பு வண்ண தலையுடனும் காணப்படும்
- அந்துப்பூச்சி பழுப்பு நிறத்திலும், இறக்கைகளில் கரும் புள்ளிகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- புழுக்களை கையால் பொறுக்கி அழிக்கவும்
- வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிதம் தெளிக்கவும்
- நெல் தவுடு, வெல்லம் மற்றும் கார்பரில் கலந்து நச்சுப்பொறியாக பயன்படுத்தலாம்
|
 |
 |
புழு |
பூச்சி |
|
|