1.பிளாஸ்ட்
அறிகுறிகள்
- நோயின் தீவிர தாக்கத்தில் பயிர் காய்ந்தது அல்லது எரிந்தது போல் தோற்றமளிக்கும், அதனால் இப்பெயர்(பிளாஸ்ட்) பெற்றது.
- பூட்டை வெளிவந்த பின்பு இந்நோய் ஏற்பட்டால் பயிர் குட்டையாக வளரும்.
- பூட்டையின் கழுத்துப்பகுதியில் கருப்பு நிறமுடைய புள்ளிகள் தோன்றி உதிர்ந்து விடும் அல்லது பகுதி மட்டுமே பூட்டைப் பிடிக்கும், கழுத்துப் பகுதியில் பிளவு ஏற்பட்டு பூட்டை ஒடித்திவிடும்.
- கணு கருகல் : கணுப் பகுதியில் கருப்பாகி ஒடிந்துவிடும்.
கட்டுப்பாடு
- விதையை கேப்டான் / திரம் 4 கிராம் / கிலோ அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
- டிரைசைக்லசோல் 500 கிராம் அல்லது எடிபென்பாஸ் 500 மில்லி அல்லது கார்பன்டாசிம் 250 கிராம் / எக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
மேலே
2.தேமல் நோய் : போட்டி வைரஸ்
கீற்று தேமல் நோய் : நியூக்கிளியோரேப்டோவைரஸ்
நோய் பரப்பும் கிருமி : சிகாமுலினா பைபங்டெல்லா சி.சினைய்
அறிகுறிகள்
- கீற்று தேமல் நோயில் முதலில் அறிகுறியானது விதைத்த 45 நாள் கழித்து புனல் இலைகளில் சிறிய வெளிர் நிறமுடைய புள்ளிகளாகத் தோன்றும்.
- பின்பு இப்புள்ளிகள் சேர்ந்து சிறிய கீற்றுகளாகத் தோன்றும்.
- தீவிர நோய் தாக்கத்தில் பயிர் மஞ்சளாக மாறும்.
- நோய் தாக்கிய பயிர் கணுப்பகுதியில் கிளைகளைத் தோற்றவித்து, தூர்களில் கதிரின்றி காணப்படும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட பயிரில் கதிர் வெளிவராமலும், அப்படியே கதிரை தோற்றுவித்தால் அவை உமியாகவும் காணப்படும்.
கட்டுப்பாடு
- ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொலிலியான மீதைல் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டாபாஸ் 500 மில்லி / எக்டர் தெளிக்கலாம்.
- இம்மருந்தை அறிகுறி தெரிந்தவுடனும் தேவைப்பட்டால் 20 நாட்களுக்கு ஒரு முறையும் தெளிக்கலாம்.
மேலே
|