பயிர் பாதுகாப்பு :: கோதுமை பயிரைத் தாக்கும் நோய்கள்

கோதுமையின் இலைத்துரு / பழுப்பு துரு நோய் : பக்னீசியா ரீகாண்டியா
தண்டுத்துரு அல்லது கருந்துரு நோய் : பச்சினியா கிராமினிஸ் எஃப்பிசிஸ்
கோதுமை உதிரிக் கரிப்பூட்டை : உஸ்டிலாகோ ட்ரிடிசி
வரி துருநோய் /மஞ்சள் துரு நோய் : பச்சினியா ஸ்ட்ரைபார்மிஸ்

1. கோதுமையின் இலைத்துரு / பழுப்பு துருநோய் : பக்னீசியா ரீகாண்டியா

  1. நோயின் முதல் அறிகுறியாக இலைகளின் மீது ஆரஞ்சு நிறத்தில் யுரிடோ வித்து காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல பகுதிகளிலும் தென்படும்.
  2. இலை தடித்த கூடுகள் காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல் பகுதிகளிலும் தென்படும்.
  3. இவை தடித்த புள்ளிகளாகத் தோன்றும். இவை உடைந்து யுரிடோ வித்துக்கள் வெளிப்படும்.
  4. இதன் பின்பு கருநிறமுடைய டீலியோ வித்துக்கூடுகள் தோன்றுகின்றன.
  5. இது வயலில் உள்ள குச்சிகளிலும், தேவையற்ற செடிகளிலும் தங்கி இருக்கும்.
  6. இதனுடைய மற்றொரு உயிர் வாழி தாவரம்: தாலிக்டிரம் வகையைச் சார்ந்தது.
  7. மலைகளிலிருந்து வரும் யுரிடோஸ்போரிஸின் மூலம் இந்நோய் பரவுகிறது.
Wheat

கட்டுப்பாடு

  1. பயிர் சுழற்சி மற்றும் கலப்பு வகை பயிர் முறை பின்பற்றலாம்.
  2. அதிகமான தழைச்சத்தை தவிர்க்கவேண்டும்.
  3. கந்தகத்தை 35-40 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிக்கலாம் அல்லது மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.
  4. நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான லெர்மாரோஜா, சேபெட் லெர்மா, சொனாலிகா மற்றும் சோடிட்டிலெர்மா ஆகியவை பயன்படுத்தலாம்.

மேலே

2. தண்டுத்துரு அல்லது கருந்துரு நோய்: பச்சினியா கிராமினிஸ் எஃப்பிசிஸ்
அறிகுறிகள்

  1. இந்நோய் இலை, இலையுறை, தண்டு, பூப்பகுதிகள் ஆகியவற்றைத் தாக்கும். தாக்கப்பட்ட பகுதிகளில் வெளிர்ப்பச்சைப் பகுதிகள் ஆரம்பித்தல் காணப்படும். வெளிர் பச்சை பகுதியில் யுரிடோ வித்துக்கள் உண்டாகின்றன. இலை பரப்பு பார்க்கும் பொழுதே பழுப்பு நிறத்தோற்றத்தை அளிக்கின்றன. தாக்கப்பட்ட பாகங்கள் விரைவில் காய்ந்துவிடுகின்றன.
  2. நோய் தீவரமாகும் பொழுது நோயுள்ள செடிகள் வளர்ச்சிக் குன்றிக் குட்டையாக இருப்பதால் நீண்ட தொலைவிலிருந்தே அவற்றைக் கண்டு கொள்ளலாம்.
  3. பாதிக்கப்பட்ட பயிர்களில் சிறுசிறு கதிர்களே தோன்றுகின்றன. கதிர்களில் மணிகள் இருப்பதில்லை. அவை இருப்பினும் சுருங்கிச் சிறியவையாகக் காணப்படும்.
  4. பழுப்பு, தடித்த சுவருடையதாகவும் காணப்படுகிறது.
  5. மாற்று வழி உயிர் தாவரம்: பெர்பெரிஸ் வகையைச் சார்ந்தது.
  6. மலைவாழ் யுரிடொவித்துக்கள் மூலம் பரவுகிறது.
Wheat

கட்டுப்பாடு

  1. நோயின் முதல் அறிகுறியாக இலைகளின் மீது ஆரஞ்சு நிறத்தில் யுரிடோ வித்து காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல பகுதிகளிலும் தென்படும்.
  2. இலையில் தடித்த கூடுகள் காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல் பகுதிகளிலும் தென்படும்.
  3. இவை தடித்த புள்ளிகளாகத் தோன்றும். இவை உடைந்து யுரிடோ வித்துக்கள் வெளிப்படும்.
  4. இதன் பின்பு கருநிறமுடைய டீலியோ வித்துக்கூடுகள் தோன்றுகின்றன.
  5. இது வயலில் உள்ள குச்சிகளிலும், தேவையற்ற செடிகளிலும் தங்கி இருக்கும்.
  6. இதனுடைய மற்றொரு உயிர் வாழி தாவரம்: தாலிக்டிரம் வகையைச் சார்ந்தது.
  7. மலைகளிலிருந்து வரும் யுரிடோஸ்போரிஸின் மூலம் இந்நோய் பரவுகிறது.

மேலே

3. கோதுமை உதிரிக் கரிப்பூட்டை : உஸ்டிலாகோ ட்ரிடிசி

அறிகுறிகள்

  • கதிரிலுள்ள தானியங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு கறுப்பு நிற பூசண வித்துக்கள் அடங்கிய கரிப்பூட்டையாக மாறுகின்றது.
  • பாதிக்கப்பட்ட செடியில் பொதுவாக கதிர் பிரியும் வரை அறிகுறிகள் வெளித்தெரிவதில்லை.
    ஆனாலும் சோனலிக்கா என்ற இடத்தில் இரகத்தில் பாதிக்கப்பட்ட செடிகளின் கதிருக்கும் அடியிலள்ள இலை மஞ்சள் நிறமடைகிறது.
  • இவ்வாறான அறிகுறிகள் கதிர்கள் பிரிந்து கரிப்பூட்டை தோன்றுவதற்கு முன்பாகவே காணப்படுகின்றன.
  • இந்த இரகத்தில் பாதிக்கப்பட்ட செடி வளர்ச்சி குறைந்துவிடுகிறது.
  • பாதிக்கப்பட்ட கதிர்களில் தானியங்கள் இருப்பதில்லை.
  • சிலவகைகளில் பாதிக்கப்பட்ட சில தூர்களிலிருந்து வெளிப்படும் கதிர்களில் மட்டுமே கரிப்பூட்டையின் அறிகுறிகள் வெளிப்படும்.

கட்டுப்பாடு

  1. கார்பாக்சின் 2 கிராம் / கிலோ அல்லது விட்டாவேக்ஸ் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.
  2. குளிர்ந்த நீரினில் விதைகளை 4 மணி நேரம் நனைத்து வைத்திருத்தல்.
  3. வெந்நீரில் 132 டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட் வெப்பநிலையில் 10 நிமிடங்கள் வைத்திருந்து நிழலில் உலரவைத்து பின்பு விதைக்கப் பயன்படுத்தலாம்.
  4. கடும் வெய்யிலில் நாட்களில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை நீரில் விதைகளை அமிழ்த்து வைத்திருந்து பின்பு 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெய்யிலில் சிமெண்ட் தரையில் விதைகளை உலர்த்தவேண்டும்.

மேலே

4. வரி துருநோய் /மஞ்சள் துரு நோய் : பச்சினியா ஸ்ட்ரைபார்மிஸ்

அறிகுறிகள்:
Cereals - Wheat

  • துருநோயி வித்துக்கள் மஞ்சள் (அ) ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் காணப்படும். இலைகளில் நேரான கோடுகள் காணப்படும்.
  • ஸ்போர் வித்துக்கள் இலை உறைகள், கதிரின் கழுத்துப்பகுதி, கதிர்களின் காணப்படும்
  • பயிர்க் குப்பைகள், வேண்டாத செடிகளில் உயிர் வாழும்
  • ஓம்புயிரி: அறிப்படவில்லை
  • பரவுதல்: பயிர்க்குத்துக்களிலிருந்து யூரிடோஸ்போர்கள் மூலம் பரவும்



மேலே

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014