பயிர் பாதுகாப்பு :: கனகாம்பரம் பயிரைத் தாக்கும் நோய்கள்

வாடல் நோய் : ப்யூசேரியம் சொலானி
தண்டு அழுகல் நோய் : ரைசோக்டோனியா சொலானி
இலைக் கருகல் நோய் : கொல்லட்டொ டிரைக்கும் க்ரோஸேண்டேரே
ஆல்டர்னேரியா இலைப்புள்ளி நோய் : ஆல்டர்னேரியா அமராந்தி வகை குரோசேலண்டரே

1. வாடல் நோய், ப்யூசேரியம் சொலானி
அறிகுறிகள்:

  • வாடல் நோய் செடிகளில் ஆங்காங்கே காணப்படும். நடவு முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்நோயின் தாக்குதல் தோட்டத்தில் தெரியும்.
  • பாதிக்கப்பட்ட செடியின் இலைகள் வெளிர் நிறத்திலும், தொங்கியும் காணப்படும்.
  • இலை விளிம்புகள் செம்பழுப்பு நிறமாக நிறம் மாறிக் காணப்படும்.
  • இந்த நிறமாற்றம் 7 முதல் 10 நாட்களுக்குள் நடு நரம்பு வரை பரவிவிடும்.
  • தண்டுப் பகுதி சுருங்க ஆரம்பிக்கும். வேர்ப் பகுதிகளில் காயங்கள் காணப்படும். அவை புறத் திசுக்கள் வரை பரவுகின்றன.
  • இந்நோய் நூற்புழுக்களின் தாக்கதலுக்கு சாதகமாக அமைகிறது.

மேலாண்மை:

  • பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்படுத்துவதன் மூலம் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
  • நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த போரேட்டை 1கி/ செடி என்ற வீதத்தில் நடவு செய்த 10 வது நாள் அளிக்க வேண்டும்.
  • கார்பன்டசிம் 0.1% அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25% ஐ 30 நாட்கள் இடைவெளியில் மண்ணில் அளிக்க நோய் கட்டுப்படும்.
  • தேவைப்பட்டால் 3-4 வாரங்களுக்குப் பிறகும் இந்தக் கரைசலை மண்ணில் இடலாம்.

மேலே

2. தண்டு அழுகல் நோய், ரைசோக்டோனியா சொலானி

அறிகுறிகள்:

  • நாற்றுக்கள் மண்ணிலிருந்து வெளிவருவதற்கு முன்னரே அழுக ஆரம்பிக்கும்.
  • மண்ணிற்கு சற்று மேலே உள்ள தண்டுப் பகுதியில் பழுப்பு முதல் கருப்பு நிறப் புள்ளிகள் தோன்றி, பின் தண்டுப்பகுதி வெட்டுப்பட்டுக் காணப்படும்.
  • இந்தப் புள்ளிகள் தண்டின் மெற்பகுதி வரை பரவும்.
  • முடிவில் நாற்றுகள் மடிந்துவிடும். வேர்களும் அழுகும்.

மேலாண்மை:

  • பாஸிட்டைல் 1- ஏ1  மண்ணில் அளிப்பதன் மூலம் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

மேலே

3. இலைக் கருகல் நோய், கொல்லட்டொ டிரைக்கும் க்ரோஸேண்டேரே

அறிகுறிகள்:

  • இலைகள் பழுப்பு நிறத்திலும் நுனிப்பகுதி சிவப்பு நிறத்திலும் மாறிவிடும்.
  • ஆரம்பத்தில் புள்ளிகள் பழுப்பு நிறத்திலும் அது விரிவடையும் போது அடர் நிறமாகவும் காணப்படும்.
  • பாதிப்பு இலையின் அடிப்பகுதியிலும் மற்றும் நுனி வரை பரவுகிறது.
  • பாதிக்கப்பட்ட இலைகள் சுருண்டு, கீழே விழுகின்றன. இளம் இலைகள் செடியின் மேல் பகுதியில் காணப்படும்.

மேலாண்மை:

  • பெனோமில் 0.1% (அ) மேன்கோசெப் 0.2% (அ) கார்பென்டசிம் 0.1% தெளிப்பதன் மூலம் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

மேலே

4. ஆல்டர்னேரியா இலைப்புள்ளி நோய் : ஆல்டர்னேரியா அமராந்தி வகை குரோசேலண்டரே

அறிகுறிகள்:

  • இந்த நோய் முதலில் தமிழ்நாட்டில் 1972-ல் கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட இலைகளின் மேல் பரப்பில் சிறய வட்ட அல்லது ஒழுங்கற்ற வடிவில் மஞ்சள் நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன.
  • இந்தப் புள்ளிகள் மேலும் பெரிதாகி பழுப்பு மற்றும் அடர் பழுப்பு வளையங்களாக மாறுகின்றன.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மாறி முதிர்வதற்கு முன்பே விழுந்து விடுகின்றன.

மேலாண்மை:

  • பெனோமில் 0.1% (or) மேன்கோசெப் 0.2% (or) கார்பென்டசிம் 0.1% தெளிப்பதன் மூலம் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

மேலே

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013