பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் நோய்கள்

1.பழம் அழுகல் - ஃபோமோப்சிஸ் வெக்சன்ஸ்

  • செடியில் தரைப்பகுதிகள் முழுவதையும் நோய் தாக்கப்படும்.
  • நாற்றுக்களின் தண்டு அல்லது இலைகளின் மேல் முதன் முதலில் புள்ளிகள் தோன்றும்.
  • நாற்றைச் சுற்றி வளையம் போல் தோன்றி பின் நாற்றை அழித்து விடும்.
  • இலைப் புள்ளிகள் தெளிவாகத் தெரியும். அந்தப் புள்ளிகள் 1 அங்குலம் வட்டத்தின் குறுக்களவில் காணப்படும். பழுப்பு நிறத்தில் இருந்து சாம்பல் நிறத்தில் குறுக்கே ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் விளிம்புகள் தோன்றும்.
  • காயின் மேல் உள்ள புள்ளிகள் பெரியதாக இருக்கும். நோய் தாக்கப்பட்ட காய்கள் முதலில் மென்மையாகவும், நீர் கோத்தது போன்றும் காணப்படும். பின் கருப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும்.
  • நடுவில் உள்ள புள்ளிகள் சாம்பல் நிறத்திலும், கருப்பு நிற பூஞ்சாணும் தோன்றும்.

2. பழம் அழுகல் - அல்ட்டர்னேரியா சொலேனி:

  • இலைப்புள்ளிகள் வட்டமாகவும், ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து லேசான பழுப்பு நிறத்தில் தோன்றும், மற்றும் தெளிவாகத் தெரியக்கூடிய பொதுமைய வளையம் காணப்படும்.
  • புள்ளிகள் குறைவாகவும் அல்லது அதிக எண்ணிக்கைகளிலும் இலையின் மேல் தோன்றும். அது மஞ்சள் நிறத்தில் மாறி பின் பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.
  • தீவிர பாதிப்பு ஏற்படும் போது செடி முழுவதுமே உதிர்ந்து விடும். இதனால் பழங்களுக்கு சூட்டுப்புண் ஏற்படும்.
  • காய்கள் சிறியதாகவும், ஆழ்ந்த பழுப்பு நிற சூழ்வட்டம் மற்றும் ஆழ்ந்த புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகள் ஒன்றாகி முழு பழத்தையுமே மூடிவிடும்.
3. பழம் அழுகல் - பைட்டோப்தோரா நிக்கோடியானா:
  • 1.காய்கள் சிறுத்தும், நீர் கோத்தது போன்ற நைவுப்புண் காணப்படும்.
  • நோய் தாக்கப்பட்ட பழங்களின் தோல் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் நிறம் மாறிவிடும்.
  • பாதிக்கப்பட்ட காயின் சதைப்பகுதிகள் பழுப்பு நிறமாகவும், நீர் போன்றும், மென்மையான தோற்றத்தையும் உருவாக்கும்.
  • இறுதியாக காய்கள் விழுந்து, அழுகிவிடும்.
கட்டுப்பாடு
  • அக்ரோசன் (அ) செரிசின் 2 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்தால் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014