பயிர் பாதுகாப்பு :: சப்போட்டாவை தாக்கும் நோய்கள்

 • மென்மையழுகல் : பெஸ்டலோடியோப்சிஸ் மேன்கிஃபெர்ரா
 • பழம் அழுகல் : பி.பால்மிவோரா, பெட்டலோப்டியோப்சிஸ், பி.சப்போட்டே

மென்மையழுகல் : பெஸ்டலோடியோப்சிஸ் மேன்கிஃபெர்ரா

அறிகுறிகள்:

 • இந்நோய் பழங்களின் மேல் நீர் இருப்பது போன்ற புள்ளிகள்  தோன்றும். இந்தப் புள்ளிகள் 3-4 நாட்களுக்கள் முழு பழத்தையம் மூடி விடும்
 • அழுகிய பழங்கள் மென்மையாகவும், ஆழ்ந்த பழுப்பு நிறத்திலும் பின் அதிக கொப்புளங்கள் அழுகிய மண்டலங்களில் காணப்படும்
 • பூஞ்சாண் இருக்கும் பகுதிகள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் தோன்றும்
 • பூசணஇழை கிளையாகவும், சமமமாக பிரிக்கக்கூடிய ஒன்று
 • கொப்புளங்கள் கருப்பு நிறத்தில் பெரிய வட்டத்தில் இருந்து சிறிய வட்டத்தில் காணப்படும்
 • பூஞ்சாண் சிறியதாகவும், எளிமையாகவும் காணப்படும்
 • பூஞ்சாண் கதிர்வடிவத்தில் இருக்கும் 4- இடைச்சுவர்கள்
 • நடுவில் உள்ள மூன்று அணுக்கள் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்
 • இறுதி உயிர அணுக்கள் நிறமில்லாமலும் கூர்மையாகவும் காணப்படும்
 • 1-3 நுனி உயிரணுக்கள் நிறமில்லாமல் இருக்கும்

2.பழம் அழுகல் : பி.பால்மிவோரா, பெட்டலோப்டியோப்சிஸ், பி.சப்போட்டே

பைட்டோப்தோரா பால்மிவோரா, பெஸ்ட்டலோடியோட்சிஸ் வெர்சிகலர், பி.கிளான்டிகோலா, பி.சப்பேட்டே மற்றும் போட்ரிடிப்லோய்டியா தியோப்ரோமே இவைகள் தான் சப்போட்டாவின் பழம் அழுகல் இயக்கி ஆகும்.

 • நோய் தாக்கப்பட்ட பழந்தில் இருந்து நீர் போன்ற நைவுப்புள் 2-3 நாட்களுக்கு பழுப்பு நிறமாக மாறிவிடும்
 • பின் தொடர்ச்சியாக முழு பழத்தின் மேல் பூசண இழை தோன்றும்

கட்டுப்பாடு:

 • 0.25%மேன்கோசெப் தெளிக்கவும்
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014