பயிர் பாதுகாப்பு :: கேள்வி - பதில்

நெல்பயிரில் குருத்து பூச்சி அதை எப்படிக் கட்டுபடுத்தலாம்?
நெல்பயிரில் தோன்றும் குருத்து பூச்சியை கட்டுபடுத்த

 • இலைகளின் அடியில் சந்தனபொட்டு போன்று காணப்படும் முட்டை குவியலை சேகரித்து அழிக்க வேண்டும்.
 • 2.த்ர்ய்கோக்ராம்மா ஜபநிகிம் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு ஒரு லட்சம் என்ற அளவில் மூன்று முறை 15 நாட்கள் இடைவெளியில் நடவு நட்ட
  25, 40, மற்றும் 55 வது நாட்களில் விட வேண்டும்.
 • கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம்
  மாநோச்ரோடோபாஸ் 300 மி.லி/ ஏக்
  குவினல்பஸ் 400 மி.லி/ஏக்
  ச்லோர்ப்ய்ரிபாஸ் 400 மி.லி/ ஏக்.

நெல்பயிரில் இலையில் மஞ்சள் கலந்த சிவப்பு ஏற்பாடுகிறது. அதை எப்படிக் கட்டுபடுத்தலாம்?
இலையில் மஞ்சள் கலந்த சிவப்பு காணப்படுவதற்கு நுன்நூடசத்து பற்றாகுறை காரணமாக இருக்கலாம் . உங்கள் பகுதியில் பொதுவாக துத்தநாக பற்றாகுறை காணப்படுகிறது . துன்க்ரோ நச்சுயிரி தாக்குதலாலும் இலைகளில் இவ்வாறு ஏற்படும். எனவே அருகில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தை அணுகி பயன் பெறலாம்.

மாணவரி நிலக்கடலையில் இலை சுரட்டு புழுவை கட்டு படுத்த என்ன செய்ய வேண்டும்?

 • இரவில் 8 மணி முதல் 10 வரை விளக்கு பொறி வைத்து தை பூச்சிகளை கவர்ந்தழிக்கலாம்.
 • ஏக்கருக்கு ப்பசலோன் 4 சத தூள் 10 கிலோ அல்லது டைகுலோரோவாஸ் 200 - 300 மி லி மருந்தை தெளிக்கலாம்.
 • நிலக்கடலை விதைக்கும் பொழுதே தட்டைபயிறு (1 : 4 ) அல்லது கம்பு (1 : 6 ) ஊடுபயிராக பயிரிடலாம்.
 • பி.கெச்.சி. 50 % பி.கெச்.சி.10 % இவைகளுக்கு இணையான இரசாயன மருந்துகளின் பெயரை தெரிவிக்கவும்.
 • பி.கெச்.சி. 50 % பி.கெச்.சி.10 % இவைகளுக்கு இணையான லின்டேன் என்ற பூச்சி கொல்லி மருந்து, குருணை, தூவும் தூள் மற்றும் திரவ மூன்று வடிவங்களில் கிடைக்கிறது.

நெல் பயிரை தாக்கும் இலை உறை அழுகல் நோய், இலை உறை கருகல் நோயை கட்டுபடுத்த இயற்கையான தடுப்பு முறை உண்டா ?.
நெல்லில் இலை உறை அழுகல் நோய், இலை உறை கருகல் நோயை கட்டுபடுத்த, சூடோமோனஸ் ப்லோரசன்ஸ் என்ற பாக்டீரியா எதிர் உயிர்கொல்லி சிறப்பாகப் பயன்படுகிறது.

நெல் பயிரில் கதிர் நாவாய் பூச்சியை எவ்வாறு கட்டுபடுத்தலாம் ?
கதிர் நாவாய் பூச்சியை கட்டுபடுத்த பூக்கும் பருவத்தில் 100 கதிர்களுக்கு 5 பூச்சிகள் அல்லது பால் பிடிக்கும் தருணத்தில் 100 கதிர்களுக்கு 10 பூச்சிகள் எனும் அளவில் காணப்படும் பொழுது ஏக்கருக்கு பெந்தியான் 200 மி லி தெளிக்க வேண்டும்.

மஞ்சள் செடியில் இலை நுனி பழுத்து சருகு போல் கருகி காய்ந்து காணபடுவது ஏன் ?
மஞ்சள் பயிரிடும் நிலத்தில் காரத்தன்மை அதிகரித்தல் நுனிகருகள் ஏற்படும். பாசன நீரையும் மண்ணையும் மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி மஞ்சள் பயிரிட எற்றனவா என்று தெரிந்து பயிரிடுங்கள்.

மஞ்சள் செடியில் விரலி ஓட்டம் இல்லாமல் ஏன் குட்டையாக, சொத்தையாக உள்ளது ?
ஆண்டுதோறும் மக்கிய தொழு எரு அல்லது கம்போஸ்ட் எரு இடுவது கலர் - உவர் தன்மைகளை குறைத்து விரலி ஓட்டம் நன்றாக அமையும்.

தக்காளி செடியில் பூ கொட்டுகிறது. அதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்?
தக்காளி செடியில் பூக்கள் உதிர்வதை தவிர்பதர்க்கு பூக்கள் தோன்றும் தருணத்தில் 50 பி.பி.எம். என்.ஏ. ஏ என்னும் வளர்ச்சி ஊக்கியை செடியில் நன்கு படும்படி தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

மல்லிகை மொட்டுக்கள் கருகுதலை எவ்வாறு கட்டுபடுத்த வேண்டும். அரும்புகள் வளர்ச்சி இன்றி இருக்கின்றன. இதற்கு என்ன செய்ய வேண்டும் ?
மல்லிகையில் ஊட்டசத்து மற்றும் நீர் பற்றாக்குறையினால் மொட்டுக்கள் கருகலாம். ஒரு செடிக்கு தொழு எரு ௧௦ கிலோ, யூரியா ௧௩௦ கிராம், ௭௫௦ கிராம் சூப்பர் பாஸ்பேட் , ௨௦௦ கிராம் மிஉரெட் ஆப் பொட்டாஷ் உரங்களை இரண்டாக பிரித்து காவது செய்தவுடன் ஒரு முறையும் ஜூன் - ஜூலை மாதத்தில் ஒருமுறையும் இட்டு நன்றாக நீர் பாய்ச்சவேண்டும்.பூச்சிகளின் பாதிபினாலும் பூ மொட்டு மற்றும் மலர்ந்த பூக்கள் கருகலாம்.

தக்காளி இலைகள் மஞ்சள் நிறமாகி நிலத்தின் அருகிலுள்ள தண்டுப் பகுதியில் வெள்ளை நிற பூசனம் தோன்றி செடிகள் காய்ந்து விடுகின்றன. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தக்காளி இலைகள் மஞ்சள் நிறமாவது நூர்புழுவின் தாக்குதலாக இருக்கலாம். இதனை கட்டுபடுத்த கார்போபூரன் குருணை மருந்தை ஒரு ஏக்கருக்கு 1 /2 கிலோ அளவில் இட்டு நன்றாக நீர் பாய்ச்சவேண்டும்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013