பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பொதுப்பெயர் : தக்காளி

அறிவியல் பெயர் : லைக்கோபெர்சிகம் எஸ்குலென்டம்

குடும்பம் : சொலனேசியே


தக்காளியின் முக்கியமான பூச்சிகள்


காய்ப்புழு : ஹெலிகோவெற்பா ஆமிஐிரா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இலை துளைப்பான் : லிரியோமைனசா ட்ரைஃபோலியை அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
புரோடினியா : ஸ்போடாப்டிரா லிட்ரா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
வெள்ளை ஈ : பெமீசியா டபாசி அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இலைப்பேன் : திரிப்ஸ் டபாசி அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
கோடுள்ள மாவுப்பூச்சி: பெர்ரீசியா விர்கோட்டா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
சிவப்பு சிலந்தி : டெட்ரானைக்கஸ் வகை அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு

1. காய்ப்புழு : ஹெலிகோவெற்பா ஆமிஐிரா

சேதாரத்தின் அறிகுறிகள்

  • இளம்புழுக்கள் இளந்துளிர்களை உன்னும்
  • முதிர்ந்தபுழுக்கள் வட்டவடிவில் காய்களில் துளையிடும்.
  • இப்புழுக்கள் காயிணைத் துளைத்து தலைப்பகுதியை உட்செலுத்தி உடலின் பாதிப்பின் பகுதியை வெளியே வைத்தக்கொண்டு சாப்பிடும்.
புழுவின் சேதம்
முதிர் பூச்சியின் சேதம்

பூச்சியின் விபரம்

  • முட்டை : பெண் அந்துப்பூச்சி சொரசொரப்பான வெள்ளைநிற முட்டைகளை தனித்தனியே இளம் இலையின் மேற்பகுதியில் இடுகின்றது.
  • புழு : பச்சை மற்றும் பழுப்பு நிற வேறுபாடுகளை தோற்றுவிக்கும். வளர்த்த புழுக்கள் பச்சை நிறமாகவும் உடலின் பக்கவாட்டில் சாம்பல் நிறக் கோடுகளுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு :  கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில், மண், இலை மற்றும் பண்ணைக் கழிவுகளில் காணப்படும்.
  • முதிர்பூச்சி :  பெண் அந்துப்பூச்சி வெளிர் பழுப்பு நிறமாக இருக்கும். ஆண் அந்துப்பூச்சி வெளிர் பச்சை நிறத்தில் V - வடிவக் கோடுகள் இருக்கும்.
  • முன் இறக்கை : பழுப்பு நிற முன் இறக்கையில் V - வடிவக் கோடு இருக்கும்.
  • பின் இறக்கை : ஓரப்பகுதி அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
முட்டை  
புழு
கூட்டுப்புழு
முதிர்பூச்சி

கட்டுப்படுத்தும் முறைகள்

  • தாக்கப்பட்ட பழங்கள் மற்றும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து அழிக்கவும்.
  • நாற்பது நாள் வயதுள்ள ஆப்ரிக்கன் உயர சாமந்தி பூச்செடிகளை கவர்ச்சிப்பயிராக 10 வரிசை தக்காளி செடிக்கு 1 வரிசை பூச்செடி பயிரிடலாம்.
  • இனக்கவர்ச்சிப் பொறி ஹெலியூர் ஹெக்டேர்க்கு 15 வைக்கவும்.
  • முட்டை ஒட்டுண்ணிப்பான ட்ரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 50,000 எனும் அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை விடவேண்டும்.
  • கிரைசோப்பெர்லா கார்னியா எனும் இரை விழுங்கிப் âச்சிகளை நட்ட 30 - ம் - நாள் முதல் வாரம் ஒரு முறை 50,000 முட்டைகள் அல்லது புழுக்களை விட வேண்டும்.
  • ஹெலிகோவெர்பா நிäக்ளியர் பாலிஹிட்ரோசிஸ் வைரஸ் [எச்.எ.என்.பி.வி ] திரவத்தினை ஹெக்டேருக்கு 500 புழு சமன் அளவுடன் பருத்தி விதை எண்ணெய் ஹெக்டேருக்கு 300 கிராம் அளவில் மாலை நேரத்தில் தெளிக்கவும்.
  • கார்பரில் 2 கிராம் / லிட்டர் அல்லது பெசில்லஸ் துருஞ்ஐியென்சிஸ் 2 கிராம் / லிட்டர் அளவில் தெளிக்கவும்.
  • காய்கள் கனிந்ததற்கு பிறகு பூச்சிக்கொல்லிகளை தெளிக்கக்கூடாது. 

 

பூச்சிகொல்லி அளவு
ஆசாடிராக்டின் 1.0 % EC (10000 ppm) 2.0 மி / லி
இன்டோக்சாகார்ப் 14.5 % SC 8 மி / 10 லி
ப்ளுபென்டையமைய்டு 20 WG 5 கி / 10 லி
நோவல்லுரான் 10 % EC 7.5 மி / 10 லி
போசலோன் 35 % EC 13 மி / 10 லி
குயின்னால்பாஸ் 25 % EC 1.0 மி / லி

2. இலை துளைப்பான் : லிரியோமைனசா ட்ரைஃபோலியை

சேதத்தின் அறிகுறிகள் :

  • இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்.
  • நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்.

இலைகளில் வெண்ணிற கோடுகள்

இலைகள் வாடிக் காய்தல்

பூச்சியின் விபரம்

  • புழு : பழுப்புநிற 2மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள்.
  • கூட்டுப்புழு : வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்.
  • முதிர்பூச்சி : வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.
  • வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.

மேலே

3.புரோடினியா : ஸ்போடாப்டிரா லிட்ரா

சேதத்தின் அறிகுறிகள்

  • இளம்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போல் ஆக்கியிருக்கும்.
  • வளர்ந்த புழுக்கள் இலைகள் அனைத்தையும் தின்று அழித்துவிடும்.
புழுவின் சேதம் 
இலைகளை அரித்தல்
இலைகள் சேதமடைதல்  
 பூக்கள் சேதமடைதல்

பூச்சியின் விபரம் :

  • முட்டை : தாய்ப்பூச்சி இலையில் சந்தனப் பொட்டு போன்று குவியலாக முட்டையிட்டு உரோமத்தால் மூடும்.
  • புழு : இளம்புழுக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்கும். புழு கருமை கலந்த பச்சையாகவும், தலைப்பகுதிக்குச் சற்று பின்புறத்தில் இரண்டு கருப்புப் புள்ளிகளுடனும் உடம்பில் திட்டுத் திட்டான கரும்புள்ளிகனும் இருக்கும். 
  • முதிர்பூச்சி : பழுப்பு நிறத்தில் இருக்கும்
  • முன்இறக்கைகள் : கருப்பு நிறப்பின்னியில் மஞ்சள் நிற குறுக்குக் கோடுகள் இருக்கும்
  • பின்இறக்கைகள் : வெண்மை நிறத்துடன் ஓரங்களில் பழுப்பு நிற பட்டையுடன் இருக்கும்.
புழு    
கூட்டுப் புழு     
முதிர்பூச்சி

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • நிலத்தை உழுது மன்னில் புதைந்துள்ள கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்கவும்.
  • வயில் வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராக பயிரிட்டு அதில் காணப்படும் இளம் புழுக்கள் மற்றும் முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்கவும்.
  • ஒரு ஹெக்டேருக்கு ஒரு விளக்கு பொறி அமைக்கவும்.
  • இனக்கவர்ச்சிப்பொறி (ஃபெரோடின் - எஸ்.எல்.) ஏக்கருக்கு 6 வைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.
  • வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
  • புரோடினியா என்.பி.வி வைரஸ் 100 புழு சமன் அளவு (ஏக்கருக்கு 300 நோயுற்ற புழுக்கள்) கிருமியுடன் 2.5 கிராம் வெல்லம் மற்றும் 0.1 சதம் பீபால் கலந்து மாலை நேரத்தில் தெளிக்கவும்.
  • நச்சுக்கவர்ச்சி உணவு :  ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அரிசித் தவிடு + 500 கிராம் வெல்லம் + 500 கிராம் கார்பரில் 50 சத நனையம் àள் கலந்து போதிய நீர் தெளித்து சிறுசிறு உருண்டைகளாக்கி நச்சுணவு வைக்க வேண்டும்.
  • ஹெக்டேருக்கு குளோர்வைரிஃபாஸ் 2 லிட்டர் அல்லது டைகுளோர்வாஸ் 1 லிட்டர் தெளிக்கவும்.

மேலே

4. வெள்ளை ஈ : பெமீசியா டபாசி

சேதத்தின் அறிகுறிகள் :

  • வெளிப்பச்சை புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
  • இலைகள் மஞ்சளாக மாறும்.
  • இலைகள் அடிப்புறத்தில் சுருண்டு பிறகு காய்ந்து விழுந்துவிடும்.
  • இப்பூச்சிகளின் தாக்கத்தினால் தக்காளி இலைச்சுருள் என்னும் வைரஸ் நோய் பரவுகின்றது.
பழங்களின் சேதம்
     வெண்ணிறத்திட்டுகள்

இலை சுருளுல்

பூச்சியின் விபரம் :

  • முட்டை : இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில் காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்.
  • இளம்குஞ்சுகள் : முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம் குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் âச்சி போன்று பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன் இருக்கும்.
  • முதிர்பூச்சிகள் : சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • இலைச்சுருள் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும்.
  • தேவையான அளவு தழைச்சத்து மற்றும் நீர்பாசனம் மேற்கொள்ள வேண்டும்.
  • மாற்று உணவுப்பயிரான துத்தி செடியை நீக்க வேண்டும்.
  • மஞ்சள் நிற தகரடப்பாக்களின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி பயிரின் உயரத்திற்கு குச்சிகளை நட்டு ஹெக்டேருக்கு 15 வைத்து கவரப்படும் பூச்சிகளை அழிக்கலாம். டப்பாக்களை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து புதிய எண்ணெய் தடவி வைக்கவேண்டும்.
  • மீன் எண்ணெய் ரோசின் சோப் [FORS] 2 சதம் அல்லது வேப்பம் எண்ணெய் 0.5 சதம் உடன் டீம்பால் 1மி.லி / லிட்டர் கலந்து தெளிக்கவும்.
  • மீத்தைல் டெமட்டான் 0.25 சதம் உடன் மீன் எண்ணெய் ரோசின் சோப் [FORS] கலந்து தெளிக்கவும் அல்லது கீழ் காணும் ஒரு பூச்சிகொல்லி மருந்தினை தெளிக்கவும்.
பூச்சிகொல்லி அளவு
டைமெத்தொயேட் 30 % EC 1.0 மி / லி 
மாலத்தியான் 50 % EC 1.5 மி / லி
ஆக்சிடெமட்டான் / மீத்தையில் 25 % EC 1.0 மி / லி
தையோமீத்தாக்சம் 4.0 மி / 10 லி 

 

மேலே

5.இலைப்பேன் : திரிப்ஸ் டபாசி
சேதத்தின் அறிகுறிகள் :

  • இலைகளின் மேற்பரப்பில் வெண்ணிறத்திட்டுகள் காணப்படும்.
  • மலர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக விழுந்துவிடும்
  • குருத்து காய்ந்துவிடும்.
  • புள்ளி வாடல் வைரஸ் நோயை பரப்புகிறது.

பூச்சியின் விபரம் :

  • இளம் குஞ்சு : மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
  • முதிர் பூச்சி : கருமையான, மயிரிழைகளால் ஆன இறகு காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • புள்ளி வாடல் நோயால் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்கவும்.
  • மஞ்சள் ஒட்டு பொறியை ஹெக்டேருக்கு 15 அமைக்கவும்.
  • கிரைசோப்பெர்லா கார்ணியா என்னும் இரை விழுங்கி பூச்சியை ஹெக்டேருக்கு 10,000 புழுக்களை விடவேண்டும்.
  • மீத்தைல் டெமட்டான் ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் அல்லது டைமெத்தோயேட் ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தெளிக்க வேண்டும்.

மேலே

6.கோடுள்ள மாவுப்பூச்சி : பெர்ரீசியா விர்கோட்டா
சேதத்தின் அறிகுறிகள்

  • வெள்ளை நிற மாவு போன்ற பூச்சிகள் இலை, தன்டு மற்றும் குருத்துப்பகுதிகளில் காணப்படும்.
  • இலை மற்றும் செடிகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • நாளடைவில் வளர்ச்சி குன்றி காய்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்

  • ஊர்ப்புழு : மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும்.
  • பூச்சி : பெண் பூச்சியானது இறகுற்றது, நீளமானது, அதன் உடல் முழுதும் வெண்ணிற மெழுகு பூச்சி காணப்படும்.


கட்டுப்படுத்தும் முறைகள்

  • மீன் எண்ணெய் ரோசின் சோப் [FORS] ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் அல்லது வேப்பம் எண்ணெய் 0.5 சதம் உடன் டீப்பால் 1 மி.லி / லிட்டர் கலந்து தெளிக்கவும்.
  • பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் :
    • இமிடகுளோஃபிரிட் 0.6 மி.லி / லிட்டர்
    • குளோர்பைரிஃபாஸ் 2 மி.லி / லிட்டர்
    • தைமீத்தாக்ஸ்ம் 0.6 மில்லிகிரம் / லிட்டர்
    • ஃபுரன்ப்பாஸ் 2 மி.லி / லிட்டர்.

மேலே

7. சிவப்பு சிலந்தி : டெட்ரானைக்கஸ் வகை
சேதத்தின் அறிகுறிகள்

  • இலைகளில் வெண்புள்ளிகள் தோன்றி பின்பு, தாக்கப்பட்ட இலைகள் செம்பழுப்பு மற்றும் வெண்கல நிறமாக மாறும்.
  • மிக மோசமாக தாக்கப்பட்ட செடிகளில் áலாம்படைகளால் இலைகள் பின்னப்பட்டு பிறகு உதிர்ந்து விடுகின்றன.
  • மலர்கள் மற்றும் காய்கள் உருவாவது பாதிக்கப்படுகின்றது.

பூச்சியின் விபரம்

  • முட்டை : வெளிர்நிற, உருண்டை வடிவ முட்டைகள் கூட்டமாக இடும்.
  • இளம்குஞ்சுகள் : முதல் நிலைக்குஞ்சுகள் மஞ்சள் கலந்த வெளிர் நிறமாகவும், மற்ற நிலைகள் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.
  • பூச்சி : சிவப்பு நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • நனையும் கந்தகத்தூள் 2 கிராம் / லிட்டர் அல்லது டைக்கோஃபால் 2.5 மி.லி / லிட்டர் தெளிக்க வேண்டும்.

ஆதாரம்
sites.aces.edu
www.colostate.edu
www.dpi.qld.gov.au                           

    மேலே

Updated on : 08.07.2013

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014