சேமிப்பு கிடங்குகளில் சேமிப்பு அமைப்புகள்


தானிய சேமிப்புக் கலன்கள்


அ). பண்ணைடய கால சேமிப்புக் கலன்கள்

சோளக்குழி
இது ஒர் நில த்தடி சேமிப்பு முறை, நிலத்தடி நீர் குறைவாக உள்ள இடங்களில் இம்முறை புழகத்தில் உள்ளது. நீர் தேங்காத இடத்தில் குழியை வெட்டி இக்குழியில் செங்கல்  சுற்றி வர வைத்து சாணி அல்லது மண் கலவையால் பூசப்படும். மேலும் ஈரக்கசிவைத்  தடுக்க சுற்றி வர வைக்கோலர் பரப்படும். இதனுள் நெல், ராகி, கம்பு, சோளம் முதலிய தானியங்கள் சேமிக்கப்படும். பொதுவாக விதை நெல் இம்மறையில் சேமிக்கப்படுவதில்லை. இதன் மேல் பகுதியில்  நொச்சி, வேப்பிலை, புங்க இலை போன்றவற்றைப் போட்டு மண்ணாலோ அல்லது கடப்பைக்கல் கொண்டுடோ மூடப்படும். அப்போது வெளிநீர் உட்செல்லது தடுக்கப்படும். சில இடங்களில் இவ்வமைப்பு வீட்டினுள்ளும் கட்டப்பட்டிருக்கும். இதில் சுமார் 15-30 டன் தானியம் சேமிக்கலாம். இவ்வமைப்பில் ஒவ்வொரு அறுவடைக்குப்பின்னும் பழுது பார்த்து சுண்ணாம்பு பூசியொ அல்லது வைக்கோலை உள்ளெ போட்டு எரித்தோ கிருமி நீக்கம் செய்யப்படும்.

பூரி அல்லது சேறு

அந்திர மாநிலத்தில் பெரும்பாலான விவசாயிகள் இம்முறையில் தான் தானியங்களைச் செமித்து வைக்கின்றனர். இதனை விவசாயிகள் புதிய வைக்கோல் கொண்டு தங்களது இல்லங்களில் அமைத்துக் கொள்கிறார்கள். நன்கு சாணம் பொட்டு மெழுகப் பட்ட தரையில் புதியதாக அறுவடை செய்யப்பட்ட வைக்கோலைப்ப பரப்பி 4-6” அளவு விட்டம் உள்ள கயிறு போல் வைக்கோலைத்திரித்து சுற்றி 3-20 மீட்டர் உயரம் வரை அமைக்கலாம். இதன் உள் விட்டமானது மேலே செல்லச் செல்ல அதிகரித்து பின் குறைக்கப்படும். இவ்வமைப்பினைச்  செய்யும் போதே தானியத்தையும் உள்ளே கொட்டி வரவேண்டும். தமிழ்நாட்டில் ஆந்திராவைப்போல் அல்லாது உள்ளே புதிய வைக்கோலை அமுக்கி வைப்பதன் மூலம் அதிக பாதுகாப்புச் செய்வர். இதன் மேற்பரப்பை பனை ஒலை அல்லது வைக்கோல் கொண்டு கட்டிவிட வேண்டும். இதில்  தானியங்களை 6 மாதம் முதல் ஒராண்டு வரை சேமித்து வைக்கப்படும்.

கோட்டை

இவ்வமைப்பும் சேறு போல் வைக்கோலால் ஆனது. எனினும் இதன் விட்டம் சேறுவை விடக் குறைவானது. இதில் சேறு போல் அல்லது தானியம் முழுவதும் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும். இது எளிதாகத் தூக்கிச் செல்லக் கூடிய அமைப்பாகும். இதைச் செய்த பின் வெளிப்பகுதியை சாணம், செம்மண கலவை கொண்டு பூசப்படும். பெரும்பாலும் விதைநெல் எடுத்துச் செல்லாம். இதில் சுமார் 50 - 200 கிலோ தானியம் சேமிக்கப்படுிகறது. இவ்வமைப்பு ஒவ்வொரு முறை தானியம் சேமிக்கும் பொழுதும் புதிதாகக் கட்டப்படும்.

மண்பானை

மண்பானை பொதுவாகப் பச்சைமண் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் மேற்பகுதி மண்ணினாலான மூடி கொண்டு மூடப்படும். பொதுவாக விதைத் தானியங்கள் இதில் சேமித்து வைக்கப்படுகிறது.

மண் குதிர

பச்சைக் களிமண் கொண்டு பல்வேறு கொள்ளளவுகளில் விவசாயிகள் தங்கள் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப மண்குதிர்களை செய்து கொள்கின்றனர். இதன் விட்டம் 4’ - 5’ நடுவிலும், 5’ விட்டம் மேலும் அடியிலும் இருக்கும் இதில் 50 முதல் 200 கிலோ வரை தானியங்களைச் சேமிக்கலாம்.

மூங்கில் குதிர்

இவ்வமைப்பு மூங்கிலால் நெருக்கமாகப் பின்னப்பட்டு சாணம் மற்றும் செம்மண் பூசப்பட்டிருக்கும். சில சமயங்களில் துவரஞ்செடிக் குச்சிகளால் நெருக்கமாகப் பின்னி கீழே மட்டமான பலாகை போல வைக்கப்பட்டு இருக்கும். இவ்வமைப்பின் மூலம் 2 - 5 டன் தானியத்தைச் சேமிக்கலாம்.

மூங்கில் தொம்பை

இது மூங்கில் கம்புகளால் பின்னப்பட்டிருக்கும். மேலே ஒடுக்கமாகவும், கீழே அகலமாகவும் இருக்கும். அதற்கு சாணம் கலந்த செம்மண் கலவை பூசப்பட்டிருக்கும்.

சிறப்பு அம்சங்கள்

1.விலை குறைவானது
2.எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களால் செய்யக் கூடியது
3.விவசாயிகள் தாங்களாகவே இவ்வமைப்பினைச் செய்து கொள்ளலாம்

மரப்பத்தாயம்

மரப்பத்தாயம் பொதுவாக மா, பலா மரங்களின் பலகைகளால் செய்யப்படுவதாகும். செவ்வகப் பெட்டி போன்ற வடிவமுள்ள இவ்வமைப்பினதை் தனித்தனி அறைகளாகச் செய்து, பின் ஒன்றின் மீது ஒன்றா அடுக்கி வைக்கப்படுகின்றது. இவ்வாறு அடுக்கி வைக்கப்பட்ட அறைகளை தேவையில்லாத பொழுது பிரித்து எடுத்துிவிடலாம். இதில் தானியத்தை வெளியே எடுப்பதற்கும், உள்ளே போடுவதற்கும் தனித்தனி வழிகள் உள்ளன. இதனைத் தேவைக்கேற்ற கொள்ளளவுகளில் செய்து கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

1.விவசாயிகள் தங்கள் நிலத்தில் வளரக்கூடிய மரங்களின் பலகையை எடுத்து இவ்வமைப்பினைச் செய்வதன் மூலம் செலவு குறைகிறது.
2.இது ஒரு நிலையான அமைப்பு நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கலாம்

களஞ்சியம்

சில விவசாயிகள் வீட்டின் ஒரு பகுதியை அறையாகத் தடுத்து தானியம் சேமிக்கப்பயன்படுத்துவர். இதனையே களஞ்சியம் என்று கூறுகிறோம். இவ்வமைப்பில் தானியத்தை உள்ளே போட, அறையின் மேல் பகுதியில் ஒரு துவாரம் விடப்பட்டிருக்கும். அதேபோல் வெளியில் எடுப்பதற்கு பக்கச்சுவரில் விடப்பட்டிருக்கும் வழியானது, பலகையால் மூடப்பட்டிருக்கும்

கோணிப்பைகள்

சணல் கொண்டு தயாரிக்கப்படும் இப்பைகள் விலை குறைந்தவை. எல்லா விவசாயிகளும் பயன்படுத்தக்கூடியது. போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக உள்ளது. இதில் 50 முதல் 60 கிலோ வரை தானியம் சேமித்து வைக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

1.விலை குறைவாக இருப்பதால் அனைத்துத் தரப்பு விவசாயிகளும் வாங்கிப் பயன்படுத்த முடிகிறது
2.ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தானியத்தை எடுத்துச் செல்வதற்கு வசதியதக உள்ளது
3.தானியம் சேமிப்பில் இல்லாதபொழுது இப்பைகளைச் சுருட்டி வைத்துவிடுவதன் மூலம் நிறைய இடம் தேவைப்படுவதில்லை

ஆ.நவீன சேமிப்பு கலன்கள்

நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களானது அவற்றில் சேமிக்கப்படும் தானியங்களின் தரத்தினை நிலை நிறுத்தவும், மக்கிளன் தானிய சேமிப்புத்தினை அதிகரிக்கவும். புழு பூச்சிகள், பூஞ்சக் காளான் மற்றும் எலிகளினின்றும் பாதுகாத்துப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக உள்ளது. இவை உணவு தானியங்கள் பாதுகாப்பாக சேமிக்கவும், அவற்றை சுலபமாகப் பராமரிக்கவும், குறைந்த செலவில் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இந்த சேமிப்புக் களஞ்சியங்களை இர வகையாகப் பிரிக்கலாம் அவை.

1.உட்புறக் களஞ்சியங்கள் - உதாரணம் - உலோகக்கதிர், பக்காகோத்தி
2.வெளிப்புறக் களஞ்சியங்கள் - உதாரணம் - ஊறதிப்படுத்தப்பட்ட செங்கல் களஞ்சியம் (Reinforce Brick Bin)

உறுதிப்படுத்தப்பட்ட சிமெண்ட கான்கிரிட் (Reinforced Cement Concrete)

நவீன செமிப்புச் சாதனங்களை அமைக்கத் தேவையான மூலப் பொருளை வதை்து அவற்றை உலோகக்கதிர்கள், அலோகக் கதிர்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்

உலோகக் கதிர்

இது 24 முதல் 28 காஜ் கனமள்ள துத்தநாகத் தகடு கொண்டு செய்யப்படுகிறது. இதனை 1000 கிலோ, 750 கிலோ, 500 கிலோ, 300 கிலோ, 240 கிலோ, 180 கிலோ, 150 கிலோ, 120 கிலோ, 80 கிலோ கொள்ளளவுகளில், வட்டம் மற்றும் சதுர வடிவங்களில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் பணிகள் கூட்டுறவு இணையானது மாவட்ட கூட்டுறவு விவசாய பொறியியல் சேவா சங்கம் மூலம் தயாரித்து வினியோகிக்கின்றது.

தற்சமயம் தானிய சேமிப்பு இயக்கம் ( Save Grain Campaign) ஒரு புதிய உலோகக் குதிரைக் கண்டுபிடித்துள்ளது. சக்கரம் பொருத்திய இக்கலம் தேவைப்படின் படுக்கையா உபயோகிக்கலாம்.இருவழிகளில் பயன்படக்கூடிய இது ஏழை, இடவசதி குறைந்த விவசாயிகளக்கு ஒர் வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமே இல்லை.

அலோகக் குதிர்

செங்கல், மண், சிமெண்ட் போன்ற அலோகப் பொருட்களை உபயோகித்து வீட்டின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் அமைக்கப்படும் களஞ்சியங்களே அலோகக் குதிர்கள் என அழைக்கப்படுகின்றன. உதாரணம் - பூசாகுதிர், பக்கா கோத்தி.

பூசா குதிர் என்பது மிகச் சாதாரணமாக குறைந்த செலவில் அமைத்துக் கொள்ளக் கூடிய  சேமிப்புக் களஞ்சியமாகம். இது வீட்டின் உள்பகுதியில் பல கொள்ளளவுகளில் செங்கல், சுடாதசெங்கல், மண் போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டப்படும் ஒரு அமைப்பாகும். முதலில் செங்கல், சிமெண்ட் கொண்டு ஒரு மேடை அமைத்து அதன் மீது 700 கேஜ் கனமள்ள பாலித்தீன் தாளைப் பரப்பி பின் நான்கு புறமும் சுவர்களை எழுப்ப வேண்டும். இதற்கு சுடாத செங்கற்களைப் பயன்படுத்த வேண்டும். இச்சுவற்றின் வெளிப்பாகத்திலர் பாலித்தீன் தாள் வைத்து மீண்டும் ஒரு சுவர் அதை ஒட்டியவாறெ எழுப்ப வேண்டும். இதற்கு சுட்ட செங்கற்களைப் பயன்படுத்த வேண்டும். சுவர்களின் மேற்பரப்பில் மரச்சட்டத்தாலான ஒரு பிரேம் செய்து வைத்து அதன்மீது செங்கற்களை அடுக்கி மூடவேண்டும். அடிப்பாகத்தில் தானியங்களை வெளியில் எடுக்க ஒரு வெளிமூடி பொருத்தப்படுகிறது. தானியத்தை நிரப்புவதற்கு இதன் மேல்பாகத்தில் ஒரு உள்மூடியும் வைக்கப்பட்டிருக்கும். உள்வழி தவிர முழுவதும் மண்பூச்சு செய்யப்பட்டிருக்கும்.

சிமெண்ட் களஞ்சியம் வீட்டின்  உள்பகுதியில் குறைந்த ஈரப்பதமுள்ள தானியங்களைச் சேமிக்கப் பயன்படுதம் ஒரு அமைப்பு, இது பல கொள்ளவுகளில் தேவைக்கேற்ப செங்கல், சிமெண்ட், இரும்புக்கம்பி, மணல் போன்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்படும் ஒரு நிரந்தரமான சேமிப்புக் களஞ்சியம். இதை வீட்டின் அமைப்பைப் பொறுத்து இரண்டு மூன்று அறைகளாகக்கூட அமைத்துக் கொள்ளலாம். இதனால் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று வகையான தானியங்களை சேமித்து வைக்கலாம்.

இதை அமைப்பதற்கு முன் தரையை செங்கல். கருங்கல், ஜல்லி, கண்ணாடித்துண்டுகள், சிமெண்ட் கொண்டு உறுதியானதாகச் செய்து கொள்ள வேண்டும். பின் செங்கல், சிமெண்ட் கொண்டு ஒரு மேடை அமைக்க வேண்டும். மேடைமீது 700காஜ் கனமுள்ள பாலித்தீன் தாள் பரப்பி மேற்பரப்பில் இன்னொரு அடுக்கு செங்கல் வைக்கவேண்டம். சுற்றிலும் நான்கு புறமும் சுவர் எழுப்ப வேண்டும். இச்சுவர் இரண்டு அடுக்குகளாக எழுப்பப்படுகிறது. இந்தச் சுவர்களுக்கிடையெ பாலித்தீன் தாள் வைக்கப்படுகிறது. தேவையான உயரம் வந்தவுடன் அதன் மேற்பகுதிக்க ஏற்படிழ சிமெண்ட் பலகை செய்து மூடிவிடவெண்டும். இப்பலகையில் தானியங்களை உள்ளே இட 50 செ.மீ. அளவுள்ள ஒரு வழி அமைக்கப்படுகிறது. அடிப்பகுதியில் தானியங்களை வெளியில் எடுக்க உலோகத்தால் செய்யப்பட்ட வெளிமூடி அமைக்கப்படுகிறது. அதன் பின் களஞ்சியத்தின் எல்லாப்பகுதியும் சிமெண்ட் கலவை கொண்டு பூசப்படுகிறது.

வெளிப்புறக்  களஞ்சியங்கள

வீட்டின் உட்புறத்தில் அமைக்கப்படும் உட்புறக்களஞ்சியங்கள் குறைந்த அளவே தானியங்களைச் சேமிக்கப் பயன்படுகின்றன.  விவசாயிகளுக்கு அதிக அளவில் தானியங்களைச் சேமிக்க வீட்டினுள் இடவசதி இருப்பதினால். அதே சமயம் தானியங்களை அதிக கவனமுடன் பாதுகாக்கவும் வேண்டும். இத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்யவெ பொதவாக வெளிப்புறக் களஞ்சியங்கள் அவசியமாகின்றன.

உறுதிப்படுத்தப்பட்ட செங்கல் களஞ்சியம்(Reinforced brick bin)

உறுதிப்படுத்தப்பட்ட செங்கள் களஞ்சியம் எனப்படுவது வீட்டின் வெளிப்புறத்தில் செங்கற்கள், சிமெண்ட், இரும்புக் கதிர்கள் போன்ற பொருட்களைக் கொண்டு 3 மெ. டன் முதல் 10 மெ.டன் வரை பல்வேறு கொள்ளளவுகளில் கட்ட்ப்படும் ஒரு உருளைவடிவ சேமிப்புக் களஞ்சியமாகும்.

இச்சேமிப்பு வடிவத்தில் செங்கல், சிமெண்ட் கலவையைக்கொண்டு உறுதியாக தரை அமைத்து, அதன் மீது இரு சுவர்கள் உறுதிப்படுத்த செங்குத்தாகவும். படுக்கையாகவும் கம்பிகள் கொடுத்து அமைக்கப்படுகிறது. தானியங்களை உள்ளே போடவும், வெளியில் எடுக்கவும் வெவ்வேறு வழிகள் பூட்டும் வசதியோடு உள்ளது. பின்பு களஞ்சியம் முழுவதும் சிமெண்ட்டால் பூசப்படுகிறது.

உறுதிப்படுத்தப்பட்ட சிமெண்ட் கான்கிரீட்  களஞ்சியம் (RCC Bin)

இத்தகை சேமிப்பு வடிவங்கள் வட்டமான சிமெண்ட் வளையங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து 10 மெ.டன் வரை பல்வேறு கொள்ளளவுகளில் கட்டப்படுபவை ஆகும்.

தேவையான அளவிற்கேற்ப வேண்டிய குறுக்களவு கொண்ட விட்டத்தில் வளையங்களைத் தனித்தனியாகச் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தரையை உறுதியானதாகச் செய்து அதன் மீது பாலிதீன் தாள் பரப்பி சிமெண்ட் பூசி முதல் வளையம் மட்டும் மேடையின் மேல் வைக்க வேண்டும். மற்ற வளையங்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து இறுதியாக கான்கிரீட்டினாலான சாய்வான கூரையை அமைக்க வேண்டும். களஞ்சியத்தின் அடிப்பாகத்தில் உலோகத்தினாலான தறிப்பு பொருந்தப்பட வேண்டும். வளையங்கள் உறுதியுடன் இருக்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதிக ஈரப்பத நெல் உலர்த்தும் சேமிப்புக் குதிர்

அறுவடை செய்தவுடனேயே நெல்மணிகளைக் காயவைக்காமல் ஈரத்துடனே இக்களஞ்சியத்தில் கொட்டி சேமித்தால் நாளடைவில் அதிலுள்ள ஈரப்பதம் சிறிது சிறிதாக குறைந்து விடகிறது. எனவே இது ஈரத்துடன் நெல்மிணகளைச் சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.

இக்களஞ்சியம் ஒன்றோடொன்று இணைப்பு இல்லாமல் இரு உருளை வடிவத்தில் துத்தநாக தகட்டினால் செய்யப்பட்டுள்ளது. உட்புற உருளை அமைப்பு சிறு சிறு துவாரம் இடப்பட்ட 22 கேஜ் கனமள்ள துத்தநாகத் தகட்டினால் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற உருளை 24 கேஜ் கனமள்ள துத்தநாகத் தகட்டினால் உட்புற உருளையில் இருந்து சுமார் 30 செ.மீ. இடைவெளியில் காற்றோட்டமுள்ளபடி அமைக்கப்பட்டள்ளது. மேலும் பக்கவாட்டில் காற்று உள்ளெ புகுவதற்கு வசதியாக ஒரு திறந்து மூடக்கூடியவழியும் பொருத்தப்பட்டுள்ளது. அடிப்பாகத்தில் சிறுசிறு துவாரங்கள் உள்ளன. இக்களஞ்சியம் 60 செ.மீ. உயரமள்ள நான்கு செங்கல் தூண்களின் மேல் கட்டப்படுகிறது. தானியத்தை உள்ளேபோட ஏதுவாக மேலே உள்மூடியும், வெளியே எடுப்பதற்கு வசதியாக அடிப்பாகத்தில் வெளிமூடியும் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் உள் உருளையில் நெல் கொட்டப்பட்டபின் நெல்லின் ஈரமும் வெளிக்காற்றின் ஈரப்பதத்தின் அளவும் ஒன்டோடொன்று இணைந்து சூழ்நிலைக்கேற்ப நெல்லின் ஈரம் குறைக்கப்படுகிறது. நெல்லில் இரந்து வெளிப்படும் ஈரக்காற்று களஞ்சியத்தின் மேல் பக்கவாட்டில் உள்ள சிறு துவாரங்கள் வழியாக வெளியேறுகின்றன. வெளிப்புற உரளையில் பக்கவாட்டில் அமைக்கப்பட்டள்ள கதவுகள் வெளியிலிரந்து உள்ளே செல்லமு் காற்றின் அளவை கூட்ட - குறைக்க உதவுகின்றன. இயற்கைக் காற்று உள்ளே புகுந்து வெளிவருதல் மற்றும் தானியங்களுக்கிடையே ஏற்படும் காற்றுச் சலனம் தத்துவத்தின் மூலம் நெல்லில் ஈரப்பதம் சீராகக் குறைகிறது. உஷ்ண நிலையும் சீராக வைக்கப்படுகிறது.

இதில் இயற்கைக் காற்று உள்ளே சென்று வெளிவருவதற்குப் பதிலாக செயற்கை முறையில் உஷ்ணப்படுத்தப்பட்ட காற்றை ஊதுஉலைா மூலமாக உள்ளே அனுப்புவதன் மூலமாகவும் ஈரப்பதத்தைக் குறைக்கலாம்
இம்முறையில் உட்புற உருளையின் நடுவில் துவாரம் இடப்பட்ட ஒரு உருண்டையான தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக விரைவாக அடியிலிரந்து வரும் உஷ்ணக்காற்று உள்சென்று தானியங்களுக்கிடையில் உடபுகுந்து தானியத்தின் இரத்தை உடனடியாக குறைநத்து களஞ்சயித்தின் மேல் உள்ள துளையின் வழியாக வெளியேறுகிறது. காற்றை உஷணப்படுத்தவேண்டிய எரிபொருளாக விவசாயிகளுக்கு மலிவாகக் கிடைக்கும் விவசாயக் கழிவுப்பொருட்களான நெல்உமி, கடலைத்தோல் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

  1. தானியங்களை மழைக்காலத்தில் பாதுகாப்பாக சேமிக்கலாம். தானிய மாதிரிகளை எடுத்து அவற்றின தரத்தினை ஆய்வு செய்ய பக்கவாட்டில் மூன்று சிறு இரும்புக்குழாய் துளைகள் பொருத்தப்பட்டுள்ளன.
  2. ஒரே சமயத்தில் தானியங்களை உலர்த்தவும், சேமிக்கவும் வசதி இருப்பதால் இடம் மிச்சப்படுகிறது.அதே சமயம் பராமரிப்புச் செலவும் குறைவு.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013