|
|
|
1. இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான் : செசாமியா இன்பெரன்ஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்
- இலைச் சுருள்களில் புழுக்கள் தங்கி, நடு இலைகளை உண்ணுவதால் துவாரங்கள் ஏற்படும்.
- அடி இலைகள் பச்சையாக இருந்தாலும், நடுக்குருத்து மட்டும் பழுப்பு நிறமாக மாறி, பிறகு காய்ந்து விடும்.
- துளையிடப்பட்ட துவாரங்களில் பூச்சிகளின் கழிவுகள் அடைத்துக்கொண்டிருக்கும்.
- கதிர் வெளிவரும் பருவத்தில் வெண்கதிர் அறிகுறி தோன்றும். கதிர் மணிகள் நிரம்பாமல் வெள்ளை நிறத்தில் தெளிவாகத் தெரியும். இதனால் இந்த கதிர்களை வயலில் எளிதாக கண்டறிய முடியும்.
பூச்சியின் விபரம்
- முட்டை : இலைகள் மற்றும் தண்டுகளில் பால் வெள்ளை நிறத்தில், உருண்டையான வடிவத்தில் கொத்து கொத்தாக முட்டைகள் காணப்படும். முட்டை வளர்ச்சி காலம் 8 நாட்கள் ஆகும்.
- புழு : இளஞ்சிவப்பு பழுப்பு நிறத்தில் மென்மையாக உருளை வடிவத்தில், கருஞ்சிவப்பு நிறத் தலையுடன் கூடிய புழுக்கள் காணப்படும். புழுப்பருவத்தின் காலம் 22 நாட்கள் ஆகும்.
- கூட்டுப்புழு : தண்டுகளில் அடர் பழுப்பு நிறத்தில், தலையில் ஊதா புள்ளியுடன் கூடிய கூட்டுப்புழுக்கள் காணப்படும். கூட்டுப்புழுக்களின் காலம் 8 நாட்கள் ஆகும்.
- முதிர் பூச்சி : நடுத்தர அளவிலான, மங்கிய மஞ்சள் பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் பயிரில் காணப்படும். முன் இறகுகள் லேசான பழுப்பு நிறத்தில், இரண்டு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். பின் இறகுகள், வெள்ளை நிறத்தில், நரம்புகளில் மஞ்சள் நிற செதில்களுடன் காணப்படும்.
|
|
|
துளைக்குழிகள் பூச்சிகளின் கழிவுகளால் அடைக்கப்பட்டிருக்கும் |
காய்ந்த நடுக்குருத்து காணப்படும் |
|
|
தண்டில் மிகச்சிறிய ஓட்டைகள் காணப்படும் |
வெண்கதிர் அறிகுறி |
|
|
|
|
|
முட்டை |
புழு |
கூட்டுப்புழு |
முதிர் பூச்சி |
|
|
|
|
|
பயிறு வகைகளுடன் பயிர் சுழற்சி |
காய்ந்த நடுக்குருத்துகளை பிடுங்கவும் |
டிரைகோகிராமாஅட்டையை கட்டிவிடவும் |
இனக்கவர்ச்சி பொறி |
|
கட்டுப்படுத்தும் முறைகள் :
- பூச்சித் தாக்கத்தின் துவக்கத்திலேயே காய்ந்த குருத்துகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.
- குறுகிய கால, தானிய வகையல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்.
- சரியான அளவு தழைச்சத்து உரங்களை முறையாக பகிர்ந்து அளிக்க வேண்டும்.
- மிதைல் பாரத்தியான் 50 EC 1 மில்லி/லிட்டர் அல்லது பாஸ்பமிடான் 85 WSC 0.5 மில்லி/லிட்டர் அல்லது டைமேத்தோயேட் 30 EC 1.7 மில்லி/லிட்டர் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும்.
- கார்பரில் 50 WP @ 1 கிலோ/எக்டர் தெளிக்க வேண்டும்.
- உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகளான டிலோனோமஸ், டிரைகோகிராமா மைனூடம் (முட்டை ஒட்டுண்ணிகள்), அபன்டிலஸ் பிலேவிபெஸ், பிரேகன் டிரைனென்சிஸ் (புழுப்பருவ ஒட்டுண்ணி) மற்றும் டெட்ராஸ்டைகஸ் அய்யரி (கூட்டுப்புழு ஒட்டுண்ணி) போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
- விளக்குப்பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறியினை வைக்கவேண்டும்.
|
|
2. கதிர்நாவாய் பூச்சி: காலோகோரிஸ் அன்குஸ்டேட்டஸ் |
தாக்குதலின் அறிகுறிகள் :
- பூச்சிகள் பூக்கும் பருவத்திற்கு முன் தோன்றி, பால் பருவம் வரை இருக்கும்.
- பால் பருவத்தில் கதிர் இருக்கும் பொழுது குஞ்சுகளும், முதிர் பூச்சிகளும் தானியத்தில் உள்ள சாற்றை உறிஞ்சி விடுகிறது.
- இந்த தாக்கத்தினால் தானியத்தின் தரம் குறைவதோடு, பாதிக்கப்பட்ட தானியம் உண்ண தகுதியற்று போகிறது.
- பூச்சித்தாக்கம் தீவிரமடையும் பொழுது கதிர் பதராகிறது.
- பூச்சியின் பாதிப்பு முளைப்புத் திறனை குறைப்பதோடு, தானியங்களை பூசணத் தாக்கத்திற்கு ஏதுவாக்குகிறது.
|
|
|
கதிர்கள் பதராக மாறும் |
இலைகளில் பூச்சிகள் காணப்படும் |
|
பூச்சி விபரம் :
- முட்டை : கொம்பை மற்றும் மத்திய மலர் பிரிவுகளுள் நீல நிறத்தில், சிகார் வடிவத்தில் முட்டைகள் காணப்படும்.
- குஞ்சுகள் : மெலிதாக பச்சை நிறத்திலிருக்கும்.
- முதிர் பூச்சிகள் : ஆண் பூச்சி பச்சை நிறத்தில் இருக்கும். பெண்பூச்சி பச்சை நிறத்தில், பழுப்பு நிற விளிம்புகளுடன் காணப்படும்.
|
|
|
முட்டை |
குஞ்சுகள் |
|
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பருவத்திற்கு முன்னர் நடவு செய்தால் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
- பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும்.
- கார்பரில் 50 SP @ 3 கிலோவை 500 லிட்டர் தண்ணீர்/எக்டர் மருந்தை கதிர்களின் மேல் தெளிக்க வேண்டும்.
|
|
|
பயிர் சுழற்சி முறை |
கார்பரில் தெளிக்க வேண்டும் |
|
|
4. வேர் அசுவினி:டெட்ரானியூரா நைகிரி அப்டோமினாலிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்
- அசுவினி செடியின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன.
- தாக்கப்பட்ட செடிகள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறி குன்றிவிடும்.
- ஆங்காங்கே செடிகள் திட்டுதிட்டாக, வாடி காய்ந்து காணப்படும்.
- செடிகளில் தேன்துளி, தத்துப்பூச்சி கழிவுப் பொருட்களும், எறும்புகளும் காணப்படும். புல்களிலும் இந்த அறிகுறி காணப்படும்.
- குஞ்சுகளும், முதிர்ப்பூச்சிகளும் செடியின் அடிப்பாகத்தை தாக்கி செடிகளின் வேரில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் செடிகள் வலுவிழந்து வாடிவிடும்.
பூச்சியின் விபரம் :
- குஞ்சுகள் உருண்டையாக, அழுக்கு (அ) பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- முதிர்பூச்சி சிறிதாக, முட்டை வடிவத்தில் இருக்கும். இதன் நிறம் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு, வெள்ளை, மஞ்சள், அடர் ஆரஞ்சு நிறம் என பரவி இருக்கும்.
- முதிர் பூச்சி இரு வகைகளில் இருக்கும். இறகு உள்ளவை மற்றும் இறகு இல்லாதவை ஆகும். இறகு உள்ளவை 1.5-2.3 மி.மீ நீளத்துடன், இறகு இல்லாதவை 1.5-2.5 மி.மீ நீளத்துடன் இருக்கும். எல்லா முதிர் அசுவுணிகளும் பெண் இனமாகவே இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பாசன நீரில் குரூட் ஆயில் கலந்து விட வேண்டும்.
- டைமெத்தோயேட் 30 EC பூச்சிக்கொல்லி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து, வேர்ப்பகுதியை நனைத்துவிட்டு வேர் அசுவினியைப் கட்டுப்படுத்தலாம்.
- டைமெக்ரான் 100 EC (200 மில்லி/எக்டர் - 1000 லிட்டர் தண்ணீா்) தெளிக்க வேண்டும்.
- கார்பரில் 50 WP @ 1 கிலோ/எக்டர் (500 லிட்டர் கரைசல்/எக்டர்) தெளிக்க வேண்டும்.
|
|
|
செடியின் அடிப்புறத்தில் அசுவினிகள் காணப்படும் |
தேன் சுரப்பு மற்றும் எறும்புகள் |
|
செடிகள் வாடி காய்ந்துவிடும் |
|
|
|
முதிர் பூச்சி |
இளம் பூச்சி |
|
|
6. வெட்டுக்கிளி : குரோட்டோகோனஸ் டிரேக்கிப்டிரஸ் |
தாக்குதலின் அறிகுறிகள் :
- வெட்டுக்கிளியின் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகளும் அதிக அளவில் இலைகளை உண்ணும்.
- இலைகளின் விளிம்புகளை கடித்து ஓட்டைகளை ஏற்படுத்தும்.
- பாதிப்பின் நிலை தீவிரமடையும் பொழுது, இலைகள் உதிர்ந்து வயல் முழுவதும் மேயப்பட்டது போல தோற்றமளிக்கும்.
|
|
|
பூச்சி கடித்த இலைகள் |
இலை விளிம்புகள் கடிக்கப்பட்டிருக்கும் |
|
|
இலை விளிம்புகள் கடிக்கப்பட்டிருக்கும் |
இலைகளில் பூச்சிகள் இருக்கும் |
|
பூச்சியின் விபரம் :
- முட்டை: வெட்டுக்கிளிகள் மண்ணில் கொத்து கொத்தாக முட்டையிடும். நீளமான வளைந்த மண் கூடுகளில் முட்டைகள் இடப்படுகின்றன. வெள்ளை,மஞ்சள் பச்சை, அழுக்குநிறம் மற்றும் பல்வேறு பழுப்பு நிறத்தில் முட்டைகளைக் காணலாம்.
- குஞ்சுகள் : புதிதாக பொறித்த குஞ்சுகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். பிறகு சூரிய ஒளியில் வெளிப்படும் பொழுது, எடுப்பான நிறம் மற்றும் கோடுகளுடன் தோன்றும். வெட்டுக்கிளியின் குஞ்சுக்காலம் 30-50 நாட்கள் ஆகும்.
- முதிர்பூச்சி : தடித்த, பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும்.
|
|
|
இளம் பூச்சி |
முதிர்பூச்சி |
|
|
|
|
|
முட்டைகளை உண்ணும் பாச்சை |
நொசிமா லோசஸ்டே வெட்டுக்கிளி உயிர்ப்பொறி |
அறுவடைக்கு பின்னர்
உழவு
செய்யவும் |
வெட்டுக்கிளியை உண்ணும் சிலந்தி |
|
கட்டுப்படுத்தும் முறைகள் :
- அறுவடைக்குப்பின் நிலத்தை சுத்தமாக, நன்றாக உழுது விடுவதன் மூலம், வெட்டுக்கிளியின் முட்டைகளை அழிக்கலாம். முட்டைகள் மண்ணில் மேற்பரப்பிற்கு வருவதால் அவை உலர்ந்து காய்வதுடன், பறவைகள் மற்றும் பிற பூச்சிகள் சாப்பிடுவதற்கு ஏதுவாகிறது.
- பருவத்திற்கு முன்பே விதைத்து அறுவடை செய்யவேண்டும். கோடை உழுவு செய்ய வேண்டும்.
- கார்பரில் 50 WP 400 கிராம் தெளிக்கவேண்டும்.
- சிலந்திகள் வெட்டுக்கிளி குஞ்சுகளையும், முதிர்ப்பூச்சிகளையும் உண்கின்றன.
- கொப்பு வண்டு, தரை வண்டு மற்றும் பாச்சைகள் வெட்டுக்கிளியின் முட்டைகளை உண்கின்றன.
- வெதுவெதுப்பான, ஈரப்பதமான சூழலில் எண்டமாப்தோரா கிரிலி பூஞ்சாணம் வெட்டுக்கிளியின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
- நொசிமா லோசஸ்டே என்ற ஒட்டுண்ணி, முட்டை எண்ணிக்கை மற்றும் பூச்சி நடமாட்டத்தைக் குறைத்து, வெட்டுக்கிளி எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.
|
|
7. இலை சுருட்டுப்புழு : நெப்லோகுரோசிஸ் மெடினேலிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழுக்கள் இலைகளை ஒட்டும் தன்மையுடன் நீளவாக்கில் சுருட்டி குழாய் போன்று அமைத்துக் கொள்ளும்.
- இலையின் மடிப்பிற்குள் இருந்து கொண்டு புழுக்கள் பச்சைப்பகுதியை சுரண்டித் திண்ணும்.
- சுரண்டப்பட்ட இலைகள் நரம்பு போல் ஆகி பின்பு வெண்மையாகி உதிர்ந்துவிடும்.
- பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடிவில் மகசூல் குறையும்.
|
|
|
இலைகளின் உள்ளே புழுக்கள் இருக்கும் |
இலைகள் நீளவாக்கில் சுருட்டபட்டிருக்கும் |
|
|
புழுக்கள் பச்சைப்பகுதியை சுரண்டித் திண்ணும் |
சுரண்டப்பட்ட இலை பகுதிகள் உதிர்ந்துவிடும் |
|
பூச்சியின் விபரம் :
- முட்டை : ஒவ்வொரு பெண் பூச்சியும் இலையின் இரு பக்கங்களிலும் சுமார் 300 முட்டைகள் இடும் தன்மையுடையது. முட்டைகள் நீளமாகவும், வெண் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். முட்டைக்காலம் 4-6 நாட்கள் ஆகும்.
- புழு : மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில், பழுப்பு அல்லது கருப்பு நிறத் தலையுடன் புழுக்கள் இருக்கும். நடுப்பகுதியின் மேற்புறத்தில் இரு புள்ளிகள் காணப்படும். புழுப்பருவம் 15-20 நாட்கள் ஆகும்.
- கூட்டுப்புழு : கூட்டுப்புழு முதலில் பழுப்பு நிறத்தில் தோன்றி பின்னர், அடர் பழுப்பு நிறத்திற்கு மாறும். இலை மடிப்பில் கூட்டுப்புழு உண்டாகிறது. கூட்டுப்புழுக்காலம் 6-10 நாட்கள் ஆகும்.
- முதிர்பூச்சி : வெண் மஞ்சள் அல்லது தங்க மஞ்சள் நிறத்தில் முன் இறகுகளில் மூன்று கரும்கோடுகளுடன் காணப்படும். பூச்சியின் பின் பகுதி அகன்று காணப்படும். முதிர் பூச்சிப் பருவம் ஒரு வாரம் ஆகும்.
|
|
|
முட்டை |
புழு |
|
|
கூட்டுப்புழு |
முதிர்பூச்சி் |
|
|
|
|
|
சரிவிகித உரங்களை பயன்படுத்தவும் |
நெருக்கமாக நடுவதை தவிர்க்கவும் |
டிரைக்கோகிராமா அட்டையை கட்டிவிடவும் |
இனகவர்ச்சிப் பொறி |
|
கட்டுப்படுத்தும் முறைகள் :
- தானிய வகையல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சி முறையை கடைபிடித்தல்.
- வயலைச் சுற்றிலும் உள்ள புல்வெளியை பராமரிக்கவேண்டும்.
- மிக அருகில் நடவு செய்வதை தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவேண்டும்.
- மோனோகுரோட்டோபாஸ் 1.6 மில்லி, குளோர்பைரிபாஸ் 2.5 மில்லி அல்லது, குயினெல்பாஸ் 2.5 மில்லி அல்லது அசிபேட் 1 கிராம் அல்லது கார்பரில் 3 கிராம் அல்லது கார்டாப் ஹைடிரோகுளோரைடு 2 கிராம்/லிட்டர் போன்ற பூச்சிக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை 10 நாட்கள் இடைவெளியில், இருமுறை தெளிக்கவேண்டும். பின்னர் கார்டாப் ஹைடிரோகுளோரைடு 4 G 10 கிலோ/ஏக்கர் இடவேண்டும்.
- 5% வேப்பங்கொட்டை கரைசல் அல்லது 0.5% வேப்பெண்ணெய் அல்லது பிற உயிரியற் பூச்சிக் கொல்லியை 300 பிபிஎம் @ 1.5 லிட்டர்/எக்டர் அல்லது 1500 பிபிஎம் 1.5 லிட்டர்/எக்டர் என்ற அளவில் தழைகளில் தெளிக்கவேண்டும்.
- நடவு செய்த 15 ஆம் நாளில் இருந்து டிரைகோகிராமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை @ 1 லட்சம்/எக்டர் என்ற அளவில் 7-10 நாட்கள் இடைவெளி விட்டு, 5 முதல் 6 முறை வயலில் வெளியிடவேண்டும்.
- பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் சார்ந்த உயிரியற் பூச்சிக் கொல்லிகளை @ 1 கிலோ அல்லது 1 லிட்டர்/எக்டர் (டைபெல், டெல்பின், பையோடார்ட், துரிசைடு, பையோஸ்ப், ஹில் பிடிகே) 7-10 நாட்கள் இடைவெளியில் மாலை நேரத்தில் தெளிக்கவேண்டும்.
- விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சிப் பொறி வைக்கவேண்டும்.
- வயலின் குறுக்கில் கயிறு போட்டு இழுத்து, இலைச் சுருள்களில் இருக்கும் புழுக்களை கீழே விழ வைக்கலாம்.
|
|
8. கதிர்நாவாய்ப் புழு : யூப்ரோக்டிஸ் சப்நொட்டேட்டா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- கதிர்நாவாய் பூச்சி கதிர் பருவத்தில் பயிரை தாக்குகிறது.
- உருவாகும் கதிர் மணிகளை உண்டு கதிரினுள் உள்ள தானியங்களை அழிக்கிறது.
- கதிரில் பட்டு போன்ற நூலினால் வளை பிண்ணுகிறது.
- நெருக்கமான கதிர்கள் அதிகம் பாதிக்கப்படும். தாக்கப்பட்ட கதிர்கள் பூச்சிகளின் கழிவுகளோடு காணப்படும்.
|
|
|
பகுதி உண்ட கதிர்கள் |
கதிர்களில் வலை பின்னப்பட்டிருக்கும் |
|
பயிரின் மீது புழுக்கள் காணப்படும் |
|
பூச்சியின் விபரம் :
- முட்டை : உருண்டையான, ஒளி புகக்கூடிய வெள்ளை நிற முட்டைகள் (6-24 எண்ணிக்கை) கூட்டமாக காணப்படும். ஆரஞ்சு மஞ்சள் நிற முடிகளால் சூழப்ப்பட்டிருக்கும்.
- புழு : கம்பளி புழு சிறியதாக, அடர் பழுப்பு நிறத்தில், மஞ்சள் வளையத்துடன் குறைவான முடிகளுடன் காணப்படும். மஞ்சள் வளையத்தில் ஆரஞ்சு சிவப்பு நிற கோடுகள் இருக்கும். புழுக்காலம் 15-40 நாட்கள் ஆகும்.
- கூட்டுப்புழு : மண்ணில் கூட்டுப்புழு உருவாகிறது. இதன் காலம் ஒரு மாதம் ஆகும்.
- முதிர் பூச்சி : முதிர் பூச்சிகள் பழுப்பு நிறத்தில் அடர் செதில்களுடன் கூடிய முன் இறகுகளை கொண்டிருக்கும். பின் இறகுகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
|
|
|
முட்டை |
புழு |
|
|
கூட்டுப்புழு |
முதிர்பூச்சி் |
|
|
கட்டுப்படுத்தும் முறைகள் :
- ஊடுபயிரிடுதல், விதைப்பு காலம், இடைவெளி, நீர்/ஊட்டச்சத்து மேம்பாடு போன்ற உழவியல் கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும்.
- மாலத்தியான மற்றும் 0.1% கார்பரில் தெளிக்க வேண்டும்.
- நள்ளிரவு வரை விளக்குப்பொறி வைத்து முதிர் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
- இனக்கவர்ச்சிப் பொறிகளை @ 12/எக்டர் என்ற அளவில் வைத்து, பூக்கும் பருவம் முதல் கதிர் முதிரும் வரை கதிர் நாவாய் புழுவின் ஆண் அந்துப்பூச்சிகளை கவரலாம்.
|
|
9. வெள்ளை தண்டு துளைப்பான் : சலுரியா இன்பிசிடா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- மற்ற தண்டுத் துளைப் பான்களின் தாக்குதல் போன்றே இருக்கும். ஆனால், இதன் புழுக்கள் வேர்ப்பகுதியைத் தாக்கும்.
- தாக்குதல் அதிகமாகும் போது, நடுக்குருத்து காய்ந்து போகும். தாக்குதல் ஒரளவு இருந்தால், பயிர்கள் மஞ்கள் நிறமாக மாறிவிடும்.
- மண்ணிற்கு அருகில் உள்ள தூர்களின் அடிப்புறத்தில் புழுக்கள் காணப்படும். இவை பயிரின் அடிப்பகுதியில் சேதம் ஏற்படுத்தும்.
|
|
|
பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் |
நடுக்குருத்து காய்தல் |
|
பூச்சியின் விபரம் :
- முட்டை : முட்டைகள் ஒரு குழுவாக 100 முட்டைகள் வரை இடப்படும். இவை சாம்பல் நிற மயிரிழைகளுடன் காணப்படும். இவை பார்ப்பதற்கு மஞ்சள் தண்டுத்துளைப்பானின் முட்டைகள் போன்றே இருக்கும். அடைகாக்கும் காலம் 8 நாட்கள் ஆகும். பெண் பூச்சி இலை வரப்பின் நுனிப்பகுதிக்கு அருகில் முட்டைகள் இடுகின்றன.
- புழு : பால் வெள்ளை நிறத்தில் மஞ்கள் நிறத் தலையுடன் காணப்படும்.
- கூட்டுப்புழு : பழுப்பு நிறத்தில் தண்டின் உட்பகுதியில் கூடு கட்டியிருக்கும்.
- முதிர் பூச்சி : அடர்பழுப்பு நிறத்தில், முன் இறக்கைகளின் ஓரங்களில் வெள்ளை நிறப்பட்டையுடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- கார்பைரில் 50 WP ஒரு எக்டருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
- மித்தைல் பாரத்தியான் 50 EC 1 மில்லி/லிட்டர் (அ) பாஸ்போமிடான் 85 WSC 0.5 மில்லி/லிட்டர் (அ) டைமெத்தோயேட் 30 EC 1.7 மில்லி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
|
|
|
முட்டை |
புழு |
|
|
கூட்டுப்புழு |
முதிர்பூச்சி் |
|
|
10. துள்ளும் வண்டு : கிட்டோக்னீமா ப்யூசனேன்சஸ் |
தாக்குதலின் அறிகுறிகள:
- இளம் செப்புகளின் இலைகளை வண்டு கடித்து, துளைகள் ஏற்படுத்துகின்றன. இவை நாற்றங்கால் மற்றும் நடவு செய்த பயிர்களின் வீரியத்தைக் குறைக்கின்றன.
பூச்சியின் விபரம் :
- முதிர் பூச்சி : அடர் நீல நிறத்தில், பெரிய பின்னங்காலுடன் காணப்படும்.
|
|
|
முதிர் பூச்சி |
இளம் இலைகளில் ஓட்டைகள் |
|
கட்டுப்படுத்தும் முறைகள் :
- வயலைச் சுற்றிலும் களைகளைக் கட்டுபடுத்துவதால் புழுக்களுக்குத் தேவைப்படும் உணவைத் தடுக்கலாம்.
- கடந்த கால பயிரின் குப்பை மற்றும் இதர குப்பைக் கூளங்களை அகற்ற வேண்டும்.
- துள்ளும் வண்டுக்கு எதிராக விதை முழுவதும் பூச்சிக் கொல்லிகளை பரப்பவேண்டும்.
- கார்போ சல்பான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 6.25 கிராம் (3.88%) எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இமிடாகுளோபிரிட் ஒரு கிலோ விதைக்கு 6 கிராம் மற்றும் 3 கிராம் (4.66 மற்றும் 5%), தையோமெத்தோசேம் ஒரு கிலோ விதைக்கு 3.5 கிராம் (6.13%) எடுத்து
விதைகளின் மீது முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.
|
|
|
களைகளற்ற வயல் |
பயிர்க் குப்பைகளை எரித்தல் |
|
|
11. கேழ்வரகு தத்துப்பூச்சி : சிக்காடுலினா பைபங்டெல்லா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் இலைகள் மற்றும் தண்டின் அடிப்பகுதியில் சாற்றை உறிஞ்சி விடும்.
- இலைகள் மஞ்சளடைந்து செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
- கேழ்வரகு தேமல் வைரஸ் நோயை பரப்புகிறது.
பூச்சியின் விபரம் :
- குஞ்சு: வெளிர் பச்சை நிறத்தில் கண்ணாடி போன்று இருக்கும். குறுக்காக நடந்து கொண்டிருக்கும். குஞ்சுக்காலம் 7-9 நாட்கள் ஆகும்.
- முதிர் பூச்சி : சிறிய, பழுப்பு நிறத்தில், உளி வடிவத்தில் குஞ்சுகள் இருக்கும். முதிர் பூச்சி 2-3 வாரங்கள் வரை இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
- டைமெத்தோயேட் 30 EC @ 1.7 மில்லி/லிட்டர் (அ) பாஸ்பமிடான் 100 ணிசி 0.5 மில்லி/லிட்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 EC 2 மில்லி/லிட்டர் தெளிக்க வேண்டும்.
|
|
|
செடியில் தத்துப்பூச்சி காணப்படும் |
இலைகள் மஞ்சளாகி வளர்ச்சி குன்றி காணப்படும் |
|
முதிர் பூச்சி |
|
|
12. மஞ்சள் அசுவினி : சைசபீ்ஸ் கிராமினம் |
தாக்குதலின் அறிகுறிகள் :
- குஞ்சுகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சும்.
- இலைகள் மஞ்சளடைந்து, பயிர்கள் வளர்ச்சி குன்றி விடும்.
- பயிர்கள் ஆங்காங்கே, வாடி, காய்ந்து விடும்.
- அசுவுணி தேன்துளி கழிவுப்பொருள் மற்றும் எறும்புகள் பயிர்களில் இருக்கும்.
|
பூச்சியின் விபரம் :
- முதிர் பூச்சி : பச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
- மீதைல் டெமட்டான் 25 EC @ 20 மில்லி/எக்டர் (அ) டைமெத்தோயேட் 30 EC @ 20 மில்லி/எக்டர் தெளிக்க வேண்டும்.(10 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிக அளவு கொண்ட தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
|
|
|
|
|
பயிர்கள் வளர்ச்சி குன்றிவிடும் |
இலைகள் மஞ்சளாகிவிடும் |
தேன் சுரப்பு மற்றும் எறும்புகள் |
முதிர் பூச்சி |
|
Updated on May 7, 2014 |
|