| பயிர் பாதுகாப்பு  :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                  | 
                பொதுப்பெயர்   :   பருத்தி 
                   அறிவியல் பெயர் :   காஸிப்பியம் வகை 
                   குடும்பம் :   மால்வேஸியே  | 
               
             
               
               
              
                
                  | காய் உண்ணும் பூச்சிகள் | 
                 
                
                  | அமெரிக்கன்    காய் புழு, ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | இளஞ்சிகப்பு    காய்ப் புழு, பெக்டினோபோரா கொச்பியெல்லா | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | காய்    புழுக்கள் | 
                 
                
                  | எரியாஸ்    வைட்டெல்லா,                    எரியாஸ்    இன்சுலேனா  | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | பருத்திக்    கூன்வண்ட பூச்சி, பெம்பெருலஸ் அபினிஸ் | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | தண்டு    கூண்வண்டு, அலிசிடோடஸ் அபாஸர் | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | தண்டுத்    துளைப்பான், ஸ்பெனோட்ரா காஸ்ஸிபி | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | இலை சுருட்டு    புழு, ஸைலெப்ட்டா டெரோகேட்டா  | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | இலையைத் தாக்கும் பூச்சிகள் | 
                 
                
                  | புகையிலை    புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | சாம்பல் நிற    வண்டு, மில்லோசெரஸ் யன்டிசிம்பஸ்டுலேட்டஸ் மாக்குலோசஸ்  | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | சாறு உறிஞ்சும் பூச்சிகள் | 
                 
                
                  | தத்துப்பூச்சி, அம்ராஸ்கா பிகூட்டுலா பிகூட்டுலா | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | பருத்தி    அசுவினி, ஏபிஸ் கொசப்பி | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | இலைப்பேன், திரிப்ஸ் டபேசி | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | வெள்ளை    ஈ, பெமிசியா டேபேசி | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | சிவப்பு    பருத்தி நாவாய்ப்பூச்சி, டைஸ்டெர்கஸ் சிங்ககுலேட்டஸ் | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | சாம்பல்    நிற நாவாய்ப்பூச்சி, ஆக்ஸிகார்னியஸ் ஹையாலிபென்னிஸ் | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
                
                  | மாவுப்பூச்சி  பீனோகாக்கஸ் வகை, பெரிசா விதை, மாக்னோ நெல்லிகாக்கஸ் வகை | 
                  அறிகுறிகள் | 
                  அடையாளம் | 
                  கட்டுப்பாடு | 
                 
               
                
              
                
                  | காய் உண்ணும் பூச்சிகள் | 
                 
                
                  |  1. அமெரிக்கன்  காய் புழு, ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா | 
                 
                
                  தாக்குதலின் அறிகுறிகள் 
                   
                    
                      - புழு பருத்தி காயினை வளைத்து உள்ளே சென்று  உட்பகுதியை சாப்பிடும்.
 
                      - இப்புழு, காயினைத் துளைத்து தலைப்பகுதியை  மட்டும் உள்ளே செலுத்தி, உடலின் பாதி பகுதியை வெளியே வைத்துக் கொண்டு உண்ணும்.
 
                   
                    பூச்சியின் விபரம் 
                    
                      - முட்டைகள் - அந்துப்பூச்சி மஞ்சள் நிற  முட்டைகளை இலைகளின் மேற்பரப்பில் தனித்தனியே இடும்.  
 
                      - புழு பச்சை நிறத்திலும் அல்லது பழுப்பு  கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்
 
                      - கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 
                      - அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்.  முன் இறக்கையில் V- வடிவ கோடு இருக்கும். பின் இறக்கையின் ஓரப்பகுதி பழுப்பு நிறத்தில்  இருக்கும்.
 
                   
                    கட்டுப்பாடு: 
                    
                      - தொடர்ச்சியாக பருத்தி பயிரிடுவதைத்  தவிர்த்து மாற்று பயிர்களை பயிரிடலாம்.
 
                      - தாக்கப்பட்ட பயிர் சேதங்களை சேகரித்து  அகற்ற வேண்டும்.
 
                      - தேவைக்கு அதிகமாக பசுந்தாழ் உரங்கள்  பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.
 
                      - தேவையான அளவு நீர் நிர்வாகம் செய்ய வேண்டும்.
 
                      - விதைப்பு செய்த 7வது மற்றும் 12வது வாரங்கள்  கழித்து நீயுக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் வைரஸை (3X102 POB) பயன்படுத்தி காய்  புழுவினை அழிக்கலாம்.
 
                      - விதைப்பு செய்த 45 நாட்கள் கழித்து முட்டை  ஒட்டுண்ணியான ட்ரைக்கோக்ரைமா ஐ பயன்படுத்தி அந்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
 
                      - இயற்கை எதிரியான கிரைசோபெர்லா கார்னியா  ஐ எக்டர்க்கு 1 லட்சம் என்ற எண்ணிக்கையில் வெளியிட்டு காய்ப்புழுவை அழிக்கலாம்.
 
                      - இயற்கை எதிரிகளுக்கு பாதிப்பு விளைவிக்காத  பூச்சி மருந்தான பாசலோன்  தெளிக்க  வேண்டும்.
 
                      - ULV மற்றும் அகேலா முறையில் மருந்துகளைத்  தெளிக்க கூடாது.
 
                      - மருந்துகளை சரியான அளவிலும், சரியான அளவு  தெளி திரவத்துடனும் கலந்து தெளிக்க வேண்டும்.
 
                      - காய்கள் உருவாகும் தருவாயில் கீழ்காணும்  ஏதேனும் ஓர் மருந்தினை எக்டர்க்கு 1000 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.
                        
                          - பாசலோன் 35 EC 2.5 லிட்டர்
 
                          -  குயினால்பாஸ் 25 EC 2.0 லிட்டர்
 
                          -  கார்பரில்  50 wp 2.5 கிலோ/எக்டர்
 
                         
                       
                    | 
                                      
                    
                        | 
                      முட்டைகள்       | 
                     
                    
                        | 
                      புழு     | 
                     
                    
                        | 
                      கூட்டுப்புழு  | 
                       
                    
                        | 
                       அந்துப்பூச்சி | 
                       
                                        | 
                 
               
                
                  | காய் உண்ணும் பூச்சிகள் | 
                 
                
                  | 2. இளஞ்சிகப்பு காய்ப் புழு, பெக்டினோபோரா கொச்பியெல்லா | 
                 
                
                  தாக்குதலின் அறிகுறிகள் 
                   
                    
                      -  முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் கப்பைகளையும்,  மொக்குகளையும் , பூக்களையும் மற்றும் இளம் காய்களையும் தாக்கி அழிக்கும்.
 
                      -  தாக்கப்பட்ட மொட்டுகள் உதிர்ந்து விடும்.
 
                      -  தாக்கப்பட்ட மலர்கள் நெருக்கமாய் குவிந்து காணப்படும்.
 
                      -  வளர்ச்சியடைந்த புழு காயினைத் துளைத்து உள்ளே சென்று  உண்டு சேதம் விளைவிக்கும்,விதைகளையும் தாக்கும்.
 
                      -  இதனால் தாக்கப்பட்ட பஞ்சுகள் கரைபடிந்து காணப்படும்.
 
                     
 கட்டுப்பாடு 
                    
                      - பயிர் சேதங்களை அகற்றி வயல்களை சுத்தமாக  வைத்து கொள்ள வேண்டும்.
 
                      - நிலத்தை ஆழமாக உழுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை  அழிக்கலாம்.
 
                      - சரியான பருவத்தில் விதைப்பு செய்வதன்மூலம்  இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
 
                      - தண்ணீர் தேங்குதலைத் தவிர்க்க வேண்டும்.
 
                      - இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார  சேத நிலையைத் தாண்டும் பொழுது எக்டர்க்கு ட்ரைசோபாஸ் 2.5 லிட்டர்  மருந்தைத் தெளித்து இளஞ்சிகப்பு புழுவின் தாக்குதலைக் குறைக்கலாம்.                      
 
                      | 
                                        பூச்சியின்  விபரம்  
                  
                    -  புழு இளஞ்சிகப்பு நிறத்திலும்,  பழுப்பு நிற தலையையும் கொண்டிருக்கும்.
 
                    -  அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். இரண்டு  இறக்கையிலும் வரிவரியாய் கோடுகளும்,    புள்ளிகளும் காணப்படும்.
 
                    | 
                 
               
 
              
                
                  | காய் புழுக்கள் | 
                 
                
                  | 4. பருத்திக் கூன்வண்டு  பூச்சி, பெம்பெருலஸ் அபினிஸ் | 
                 
                
                   தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - நில மட்டத்திற்கு சற்று மேலே தாக்கப்பட்டத்  தண்டுகளில் முடிச்சுகள் காணப்படும்.
 
                      - இளம் பயிர் இப்பூச்சியினால் தாக்கப்பட்டால்  மடிந்து விடும்.
 
                     
                    
                    பூச்சியின் விபரம் 
                    
                      - புழு - வெள்ளை நிறமாக, கால்கள் இல்லாமல் காணப்படும்.
 
                      - வண்டு - சிறியதாக, கருமை நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்.
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - எக்டர்க்கு 30 கிலோ கார்போபியுரான் மருந்தினை மண்ணில் தூவ வேண்டும்.
 
                      - நடவு செய்த 20 நாட்கள் கழித்து மண் அணைக்க வேண்டும்.
 
                      - அடி உரமாக தொழு எருவை எக்டர்க்கு 25 டன் அல்லது வேப்பம் புண்ணாக்கு 250 கிலோவை தூவ வேண்டும்.
 
                      | 
                 
               
              
                
                  |   | 
                 
                
                  | 5. தண்டு கூண்வண்டு,  அலிசிடோடஸ் அபாஸர் | 
                 
                
                   தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - தாக்கப்பட்டத் தண்டின் நுனிக்குருத்தில்  முடிச்சுகள் காணப்படும்.
 
                      - தாக்கப்பட்டத் தண்டுகளில் சிறியத் தாவரங்கள்  காணப்படும்.
 
                     
                    பூச்சியின் விவரம் 
                     
                    
                      - கூன்வண்டு - கருமைக் கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும், மேலும் உடலின் மேற்பரப்பில் குறுக்காக கோடு காணப்படும்.
 
                    | 
                 
               
                
                  |   | 
                 
                
                  | 6. தண்டுத் துளைப்பான்,  ஸ்பெனோட்ரா காஸ்ஸிபி | 
                 
                
                   தாக்குதலின் அறிகுறிகள் 
                     
                    
                      - தாக்கப்பட்ட தண்டுகளில் சிறியத் துளைகள் காணப்படும்
 
                      - இலைகள் உதரிந்துவிடும்.
 
                      - தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து மடிந்துவிடும்.
 
                     
                    பூச்சியின் விபரம் 
                    
                      - வண்டு பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 
                    | 
                  
                    
                        | 
                        | 
                     
                    
                      | தாக்கப்பட்ட தண்டு | 
                      தாக்கப்பட்ட செடிகள் | 
                     
                    | 
                 
               
 
              
                
                  
                    
                      |   | 
                     
                    
                      | 7. இலை சுருட்டு  புழு: ஸைலெப்ட்டா டெரோகேட்டா | 
                     
                    
                      அறிகுறிகள் 
                        
                          -  குழாய் போன்று இலைகள் சுருண்டு, முழுவதும் பட்டு  போன்ற நூல்களால் சுற்றியிருக்கும்
 
                          -  இலையின் விளிம்புகளை உண்டு விடும்
 
                          - தீவிர தாக்குதலின் போது, இலைகள் உதிர்ந்துவிடும்
 
                         
                        கட்டுப்பாடு 
                        
                          - தாக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை சேகரித்து,  அழிக்க வேண்டும்
 
                          - புழுக்களை கையால் சேகரித்து, அழிக்க  வேண்டும்
 
                          - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத்  தெளிக்க வேண்டும்
                            
                              - குளோர் பைரிபாஸ் 20 EL 2 லி /ஹெக்
 
                              - டைகுளோர்வாஸ் 76 WSC  1லி /ஹெக்
 
                              - பெனிடிரோதியான 50 EL  @625 மிலி
 
                             
                           
                          | 
                      பூச்சியின்  விபரம் 
                        
                          - புழு அடர்பச்சை நிறத்தில், அடர்ந்த தலையுடன்  காணப்படும்
 
                          - முதிர்ப்பூச்சி மஞ்சள் நிற இறக்கைகளுடன்  பழுப்புற்ற இலை போன்ற குறிகளுடன் காணப்படும்
 
                         
                        
                          
                              | 
                              | 
                              | 
                           
                          
                            | சுருண்ட  இலைகள் | 
                            புழு | 
                            முதிர்ப்பூச்சி | 
                           
                          | 
                     
                    | 
                 
               
              
                
                  | II. இலையைத் தாக்கும்  பூச்சிகள் | 
                 
                
                  | 8. புகையிலை புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா | 
                 
                
                  பூச்சியின் விபரம் 
                    
                      - முட்டைகள் - குவியலாய், பழுப்பு நிறத்தல்  இருக்கும்.
 
                      - புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும்.  கரும்புள்ளிகள் உடலின் மேற்பரப்பில் காணப்படும்.
 
                      - அந்துப்பூச்சி - அந்துப்பூச்சியின் முன்  இறக்கை பழுப்பு நிறமாகவும், வெள்ளை நிறக்கோடுகளைக் கொண்டிருக்கும்.
 
                      -  பின் இறக்கை வெள்ளை நிறமாகவும், பழுப்புநிறத் திட்டுகளையும்  கொண்டிருக்கும்.
 
                     
                    
                       | 
                   தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - புழு இலையை உண்டு சேதப்படுத்தும்.
 
                      - சேதம் அதிகமாகும் போது தாக்கப்பட்ட  பயிர்களில் இலை மற்றும் காய்கள் உருவாகாது. 
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - விளக்கு பெரறி அமைத்து அந்துப்பூச்சியினைக்  கவர்ந்து அழிக்கலாம்.
 
                      - இனக்கவர்ச்சி பொறியை எக்டர்க்கு 12  என்ற எண்ணிக்கையில் அமைத்து ஆண் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
 
                      - வயல் வரப்புகளில் ஆமணக்கை பயிரிடலாம்.
 
                      - முட்டைக்குவியலை பருத்தி மற்றும் ஆமணக்கு  பயிரிலிருந்து சேகரித்து அழிக்கலாம்.
 
                      - பயிர் சேதங்களுடன் வளர்ச்சியடைந்த புழுக்களைச்  சேகரித்து அழிக்கலாம்.
 
                      - இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார  சேத நிலையைத் தாண்டும் பொழுது கீழ்காணும் ஏதேனும் ஓர் மருந்தினைக் தெளித்து அந்துப்பூச்சியைக்  கட்டுப்படுத்தலாம்.
                        
                          - குளோர்பைரியாஸ்  20 EC 2.0 லி/எக்டர்
 
                          -  டைகுளோரோவாஸ் 76  WSC 1லிட்டர்/எக்டர்
 
                          -  பெனிட்ரோதையான் 50 EC 625மிலி/எக்டர்
 
                         
                       
                    | 
                 
               
                
                  |   | 
                 
                
                  | 9. சாம்பல்  நிற வண்டு: மில்லோசெரஸ் யன்டிசிம்பஸ்டுலேட்டஸ்  | 
                 
                
                  மாக்குலோசஸ் 
                      மி.ஸப்பேசியாட்டஸ் 
                      மி.விரிடானஸ் 
                      மி.டிஸ்கலர் 
                    அறிகுறிகள் 
                    
                      - இலை விளிம்புகளை வெட்டி உண்ணும்
 
                      - செடிகள் தொகுப்பாக மடியும்
 
                      - செடிகளை பிடுங்கும்போது எளிதாக வரும்
 
                      - புழுக்கள் வேர்களை உண்டு வரும்
 
                      | 
                  பூச்சியின்  விபரம் 
                    
                      - புழு - சிறியதாக, வெள்ளை நிறத்தில் காணப்படும்
 
                      - மில்லோசெரஸ் யன்டிசம்பஸ்டுலேட்டஸ் பச்சை நிற இறக்கைகளுடன்  அடர்ந்த வரிகளுடன் காணப்படும்
 
                      - மி.சப்பேசியேட்டாஸ் - பழுப்பு நிறத்தில் இருக்கும்
 
                      - மி.விரிடியேனஸ் - சிறியதாக, லேசான பச்சை நிறத்தில் காணப்படும்
 
                      - மி. டிஸ்கலர் - பழுப்புநிறத்தில் காணப்படும்
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - தாக்கப்பட்ட கிளைகள் செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
 
                      - குயினைல்பாஸ் 0.05 (அ) குளோர்பைரிபாஸ் 0.05 தெளிக்க  வேண்டும்
 
                    | 
                 
               
                
              
                
                  |   | 
                 
                
                  | 11. பருத்தி அசுவினி, ஏபிஸ் கொசப்பி | 
                 
                
                   தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின்  சாறை உறிஞ்சி உண்ணும்.
 
                      - தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி  சுருண்டு விடும்.
 
                      - தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சிக்  குன்றி காணப்படும்.
 
                      - குஞ்சுகள்  இலைகளின் மேற்பரப்பில் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை சுரக்க செய்வதால், இலைகள் பூஞ்சானத்தால்  கவரப்பட்டு கருமைநிறமாக மாறிவிடும்.
 
                   
                     | 
                  பூச்சியின்  விபரம் 
                    
                      - குஞ்சுகள் - மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.
 
                      - அசுவினி - பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - இமிடோகுளோர்பிட்  200 SL 100 மி.லி
 
                      - மெதில் டெமட்டான்  500 மி.லி
 
                      - டைமீதேயேட் 500 மி.லி
 
                      - பாஸ்போமிடான் 600  மி.லி
 
                      - மோனோகுரோட்டபாஸ் 1000 மி.லி
 
                    | 
                 
               
              
                
                  |   | 
                 
                
                  | 12. இலைப்பேன்  : திரிப்ஸ் டபேசி | 
                 
                
                  பூச்சியின்  விபரம் 
                    
                      - இளம்  பூச்சி : மிகச் சிறியதாக, தட்டையாக, மஞ்சள் நிறத்தில் காணப்படும
 
                      - முதிர்பூச்சி : சிறியதாக, தட்டையாக, மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - இமிடாகுளோபிரிட் 70ws@ 7 கி/ கிலோ என்ற அளவில்  விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்
 
                      - பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத்  தெளிக்கலாம்.
                        
                          - இமடாகுளோரிட் 200 SL  @100 மி.லி./ஹெக்
 
                          - மித்தைல் டெமட்டான் 25 EL மிலி/ஹெக்
 
                          - டைமெத்தாயேட் 30EL  500 மிலி/ஹெக்
 
                          - பாஸ்போமிடான் 40SL 600 மி.லி /ஹெக்
 
                          - மோனோகுரோட்டாமாஸ் 36 SL 1000 மிலி /ஹெக்
 
                          - வேப்பக் கொட்டைச் சாற 5% 2 கிலோ/ ஹெக்
 
                         
                       
                    | 
                   அறிகுறிகள்
                    
                      - இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள்  கருக்கங்களுடன் காணப்படும்
 
                      - நுனி மொட்டுகளை தாக்குவதால் ஒழுங்கற்ற  நுனிகளுடன் காணப்படும்
 
                      - இலையின் அடிப்புறத்தில் வெள்ளை நிறமாக  காணப்படும்
 
                     
                      
                     | 
                 
               
              
                
                  |   | 
                 
                
                  | 13. வெள்ளை  ஈ: பெமிசியா டேபேசி | 
                 
                
                   அறிகுறிகள் 
                    
                      - இலைகளில் பச்சையம் இழந்த புள்ளிகள் தோன்றி,  பின் இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலையில் உள்ள திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறும்
 
                      - தீவிர தாக்குதலால், முதிர்ச்சி அடைவதற்கு  முன் இலைகள் உதிர்ந்துவிடும்
 
                      - மொட்டுகள் மற்றும் காய்கள் உதிர்ந்து  விடும். காய்கள் ஒழுங்கற்ற முறையில் திறக்கும்
 
                      - இலை சுருள் நச்சுயிரி நோயை பரப்பும்  காரணியாக உள்ளது. 
 
                   
                    பூச்சியின்  விபரம் 
                     
                    
                      - இளம்பூச்சி பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில், முட்டை வடிவத்தில் இருக்கும்.
 
                      - கூட்டுப்புழு முட்டை வடிவத்தில், இலையின் அடிப்புறத்தில் காணப்படும்.
 
                      - முதிர்ப்பூச்சி மிகச் சிறியதாக. மஞ்சள் நிற உடலுடன், வெள்ளை நிற மெழுகு போல் இருக்கும்.
 
                     
                      
                    
                      
                          | 
                          | 
                          | 
                       
                      
                        |      இளம் பூச்சி  | 
                        கூட்டுப்புழு  | 
                        முதிர்ப்பூச்சி | 
                       
                   
                      
                     | 
                  கட்டுப்பாடு 
                    
                      - குளிர்       அல்லது கோடை பருவத்தில் பருத்தியை வருடத்தில் ஒரு முறை பயிரிட வேண்டும்
 
                      - பயிர்       சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும். சோளம், ராகி, மக்காச்சோளம் போன்ற பயிர்களுடன்       பயிரிடக் கூடாது
 
                      - மாற்று       கிளை ஒம்புயிரிகளான அடிடில்லான இண்டிகம், குரேலாசோபோர் பருவத்தில் விதைத்து,       பரிந்துரைக்கப்பட்ட பயிர் இடைவெளியை மேற்கொள்ள வேண்டும்
 
                      - அதிக இடைவெளி       விட்டு பயிரிடவேண்டும்
 
                      - பரிந்துரைக்கப்பட்ட       உரங்களின் அளவை அளிக்க வேண்டும்
 
                      - தாமதமாக       விதைக்கக் கூடாது
 
                      - வயல் சுகாதராமாக       இருக்க வேண்டும்
 
                      - மாற்று       ஓம்புயிரி பயிர்களான கத்திரி, வெண்டை, சூரியகாந்தி பயிரிடக் கூடாது
 
                      - மஞ்சள்       நிற ஒட்டு பொறி @12/ ஹெக் என்ற அளவில் வைக்கலாம்
 
                      - தாக்கப்பட்ட       செடிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்
 
                      - பின்வருவனவற்றும்       ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை தெளிக்கலம்
 
                      - வேப்பங்கொட்டைச்       சாறு 5% (50 கிலோ) , வேப்எண்ணெய் 5 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்
 
                      - மீன் எண்ணெய்       சோப்@ 25% மி.கி லிட்டர்
 
                      - நொச்சி       இலைசாறு 5 (50 கிராம் லிட்டர்)
 
                      - கத்தாரன்தஸ்       ரோஸியே சாறு 5%
 
                      - தாக்குதலின்       ஆரம்பத்தில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம் (500 மி.லி/ ஹெக்)
 
                      - மித்தைல்       எடமட்டான் 25 EL 500 மி.லி. (அ) பாஸ்போமிடான் 40 SL 600 மிலி/ ஹெக்.
 
                      - பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றை தாக்குதல் தீவிரமாக  இருக்கும் போது தெளிக்கலாம் 11000 மி.லி./ ஹெக்
                        
                          - பாஸயோன்       35 EL 2.5 லி /ஹெக்
 
                          - குயினைப்பாஸ்       25EL 2 லி/ ஹெக்
 
                          - மோனோகுரோட்பிபாஸ்       36SL 1.25 லி/ ஹெக்
 
                          - டிரை அசோபாஸ்       40EL 2 லி/ ஹெக்
 
                          - அஸிபேட்       75SP 1.30 கிலோ /ஹெக்
 
                         
                       
                     
                  குறிப்பு : செயற்கை பைரித்திராய்டுகள் பயன்படுத்துவதால்  பருத்தியில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகமாகும். சைப்பர் மெத்திரின், பென்வலேரேட், டெல்டாமெத்திரின்  வெள்ளைஈ, வளர்வதற்கு காரணமாகின்றன.  | 
                 
               
              
                
                  |   | 
                 
                
                  | 14. சிவப்பு  பருத்தி நாவாய்ப்பூச்சி, டைஸ்டெர்கஸ் சிங்ககுலேட்டஸ் | 
                 
                
                   அறிகுறிகள் 
                    
                      - பருத்தி நூல்கள் சிவப்பு நிறமாக, காய்கள்  அமுகி காணப்படும்
 
                      - காயின் உள்ளே காய்ந்த வளர்ச்சியுடன்  அல்லது நீரில் ஊறிய புள்ளிகள் காணப்படும்
 
                      - இளம் காய்கள் சரியாக உருவாகமாகல், அடர்  பழுப்பு நிறமாக மாறும்
 
                      - நெமட்டோஸ்போரா காஸிப்பி பாக்டீரியம்  தாக்குதல் ஏற்பட்ட இடத்தில் உள்ளே நுழைந்து சேதம் ஏற்படுத்தும் 
 
                   
                    பூச்சியின்  விபரம் 
                     
                    
                      - இளம் மற்றும் முதிர்ப்பூச்சி சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிற வளையம் வயிற்று பகுதியிலும், இறக்கைகளில் கருப்புநிற குறிகளுடனும் காணப்படும்.
 
                     
                     கட்டுப்பாடு 
                    
                      - வயலை உழுது முட்டையை வெளிக் கொண்டு வரவேண்டும்.
 
                      - பாஸ்போமிடான் 100 இ.சி. 250 மி.லி /ஹெக்.
 
                    | 
                    | 
                 
               
              
               
              
                |   | 
               
              
                | 15. சாம்பல்  நிற நாவாய்ப்பூச்சி, ஆக்ஸிகார்னியஸ் ஹையாலிபென்னிஸ்  | 
               
              
                பூச்சியின்  விபரம் 
                  
                    - முட்டை சிகர் வடிவத்தில், வெள்ளை நிறக்  கூட்டமாக 2-10 என்ற அளவில் பகுதி திறந்த காய்களின் உள்ளேயும், காயின் 
 
                    - இளம் மற்றும் முதிர்ப்பூச்சி சாம்பல்  நிற, பழுப்புநிற பூச்சிகள், கூர்மையான தலையுடன், கண்ணாடி போன்ற இறக்கைகளுடன் காணப்படும்
 
                   
                  கட்டுப்பாடு 
                  
                    -  பாஸ்போமிடான் 100 250 மிலி ஹெக் தெளிக்க வேண்டும்
 
                   
                     | 
                
                   அறிகுறிகள் 
                  
                    - திறந்த காய்களில் உள்ள விதைகளின் சாற்றை  உறிஞ்சி பஞ்சு முழுவதும் கருப்பு நிறமாக மாறும்
 
                    - விதைகள் நிறம் மாறி, கருங்கிக் காணப்படும்
 
                    | 
               
               
              
               
               
              
                |   | 
               
              
                | 16. மாவுப்பூச்சி  பீனோகாக்கஸ் வகை, பெரிசா விதை, மாக்னோ நெல்லிகாக்கஸ் வகை | 
               
              
                 அறிகுறிகள் 
                  
                    - அதிக கூட்டமாக இலையின் அடிப்புறத்தில்,  மெழுகு போன்று காணப்படும்
 
                    - இதனால் பூஞ்சாண் வளர்ச்சியும் காணப்படும்
 
                    - தாக்கப்பட்ட செடிகள் வாடி, கருப்பு நிறமாக  மாறும்
 
                   
                  கட்டுப்பாடு 
                     
                    பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத்  தெளிக்கலாம்  
                  
                    - கார்பரில்       50wp @ 1கிலோ/ ஏக்கர்
 
                    - தையோடிகார்ப்       75wp @  250 கிராம் /ஏக்கர்
 
                    - ப்ரோபெனோபாஸ்       50EC  500 மி.லி /ஏக்கர்
 
                    - அஸிப்பேட்       75SP@ 800 கிராம்/ ஏக்கர்
 
                    | 
                
                  
                      | 
                      | 
                   
                  
                    | தாக்கப்பட்ட  செடிகள் | 
                    மாவுப்பூச்சிகள்  தண்டுப்பகுதியில் | 
                   
                  | 
               
                              | 
           
         
  |