முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: உளுந்து

உளுந்து

பூச்சி மற்றும் நோய் கண்காணித்தல்:

  • வாரம் ஒரு முறை தாவர வளர்ச்சி, பூக்கும் பருவம், மற்றும் காய்பிடிக்கும் பருவங்களில் ஹிரியோதிஸின் தாக்குதலை கண்காணிக்க வேண்டும்
  • ஹிரியோதியை கண்காணிக்க இனக்கவர்ச்சியை பொறியினை எக்டர்க்கு 5 என்ற எண்ணிக்கையில் வைக்கவும்

விதைக்கும் முன் பருவம்:

  • கனத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • முன்பாகவே விதைக்க வேண்டும்
  • எதிர்த்து வளரக்கூடிய அல்லது தாங்கி வளரக்கூடிய இரகங்களை வளர்க்கலாம்
  • சரியான நேரத்தில் நீர்பாய்ச்ச வேண்டும்
  • போரேட் அல்லது கார்போபியூரான் குருளைகள் எக்டர்க்கு 1 கிலோ வீதம் மண்ணில் போட வேண்டும்

விதைக்கும் பருவம்:

  • சரியான நேரத்தில் விதைப்பு, சரியான விதை அளவு மற்றும் உர மேலாண்மை இருந்தால் நம்முடைய விருப்பப்படி பயிர் விளைவிக்கலாம்
  • முதல் 4 - 6 வாரங்களில் இடைச்சாகுபடி மற்றும் கையால் களையெடுத்தால் களைகள் இல்லாமல் வைக்கலாம்

தாவர வளர்ச்சிப் பருவம்:

  • முதல் அல்லது இரண்டாவது பருவ புழுக்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்
  • கம்பளிப் புழுக்களுக்கு விளக்குப் பொறி மிகவும் நல்லது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015