முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: எள்

எள்       

பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு

  • பூச்சியினால் ஏற்படும் அழிவு மற்றும்  தாக்கத்தினை ஏராளமாக கண்டறியலாம்.
  • பூச்சியை கண்காணிப்பு அமைப்பையும் மற்றும்  ஒவ்வொரு 5 முதல் 10 கி.மீ தூரத்தில் உயிர் கட்டுப்பாடு திறன் மதிப்பீடுகளை ஒரு 1 எக்டர்க்கு 12  புள்ளிகள்  மற்றும்  5 தாவரங்களுக்கு  ஒன்று என  தோராயமாக தேர்ந்தெடுக்க வேண்டும். .
  • விளக்குப் பொறிகளை சூரிய  அஸ்தமனத்திற்கு பிறகு 2 மணி நேரம்   வைத்து அந்துப்பூச்சி மற்றும் மற்ற பூச்சிகளை கண்டறியலாம்.

விதைக்கும் முன் நிலை

  • ஆழமான உழுதல் மூலம் பூச்சி மற்றும் நூற்புழுக்கள் பெருக்கத்தை குறைக்கலாம்.
  • ஒரே மாதிரியான விதைப்பினை பின்பற்றுதல்.
  • சரியான அளவுள்ள விதைகளை சரியான நேரத்தில் பயிரிட வேண்டும்  (5 கிலோ விதை / எக்டர் )
  • எதிர்ப்பு / சகிப்புத்தன்மை வகைகளான பயிர்கலையும்  வளர்க்கவேண்டும்.
  • சரியான நேரத்தில் பாசனம் மற்றும் நல்ல பயிர் நிலைப்பாட்டை பராமரிக்க வேண்டும்.
  • டிரைகோடெர்மா விரிடி  4 கிராம் / கிலோ விதைக்கு   விதை நேர்த்தி செய்தல் நல்லது.
  • பரிந்துரைக்கப்பட்ட உயிர் உரங்களான அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை பயன்படுத்த வேண்டும்.
  • அக்ரிமைசின் - 100(250 பிபிஎம்) கொண்டு விதை நேர்த்தி அல்லது  பாக்டீரியா இலை புள்ளி நோயை நீக்க  0.05% ஸ்டிரிப்டோமைசினை பயன்படுத்தவேண்டும்.

விதைக்கும் நிலை

  • பயிரை களை  இன்றி பராமரிக்க வேண்டும்.
  • உலர் வேர் அழுகல் நோய்க்கு இலைவழித் தெளிப்பு மூலம் மேன்கோஷெப் 1.125 -1.5கிலோ/எக்டர்க்கு     750 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  • நோயுற்ற  பயிர்களை நீக்கவேண்டும்.

வளர் பருவ நிலை

  • புழுக்களை அழிக்க வேண்டும்.
  • இறக்கையுடைய பூச்சிகளை கண்காணிக்க விளக்குப் பொறிகளை பயன்படுத்தவும்.
  • பாக்டீரியா அழுகல் மற்றும் இலை புள்ளி நோயை கட்டுப்படுத்த ஸ்டிரிப்டோமைசினை (500 பி.பி.எம்) இலைவழித் தெளிப்பு மூலம் தெளிக்கவும்.
  • நாற்று கருகல் நோய் மற்றும் இலைப்புள்ளி  நோயை கட்டுப்படுத்த 0.2% மேன்கோசிப் அல்லது கார்பன்டாசிம் 0.05% தெளிக்க வேண்டும்.
  • சாம்பல் நோயை கட்டுப்படுத்த 0.2% சல்பர் தெளிக்க வேண்டும்.

பூக்கும் பருவ நிலை

  • காழ்ப்பு மற்றும் உலர்ந்த மொட்டுகளை அழிக்கவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களை நீக்க வேண்டும்.
  • டைமீதேயேட் 0.03% கொண்டு மொட்டு அரும்பும் நேரத்தில்  தெளிக்க வேண்டும்.

காய்ப்பு நிலை

  • பாதிக்கப்பட்ட பயிரின் பகுதிகளை நீக்க வேண்டும்.
  • குயின்னால்பாஸ் 0.05%  அல்லது டைமீத்தோட் 0.03% தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015