பயிர் பாதுகாப்பு :: நெல்


தானியங்களை தாக்கும் நூற்புழுக்கள்

நெல்

1. வேர் முடிச்சு நுாற்புழு : மெலாய்டோகைன் கிரேமினிகோலா

அறிகுறிகள் :

  • வேர்களின் மேல் தனிச்சிறப்பு கொண்ட கொக்கி போன்ற முடிச்சுகள் காணப்படும்.
  • புதிதாக வெளிவந்த இலைகள் வடிவம் சிதைந்து இலை ஓரங்கள் சுருங்கிக் காணப்படும்.
  • பசுமை சோகை மற்றும் பயிர்குட்டையாகுதல்.
  • தீவிரமாகத் தாக்கப்பட்ட பயிர்களில் முன்னரே பூத்தல் ஏற்பட்டு விரைவாக முதிர்ச்சியடைந்துவிடும்.
  • துார்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.
  • கதிர்களின் அளவு குறைந்து தானியங்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும்.

கட்டுப்பாடு :

  • தொடர்ச்சியான நீர்த்தேக்கம், வெள்ளப்பாசனம் செய்யப்பட்ட மண்ணில் நெற்பயிர் நாற்றுக்களை வளர்த்தல் மற்றும் பயிர் சுழற்சி ஆகியவை உழவியல் கட்டுப்பாட்டு முறைகள்.
  • 50-100µm தடிமன் பாலீதின் தாள்கள் பரப்பி, 3 வாரங்களுக்கு மண் வெப்பமூட்டம் மேற்கொள்ள வேண்டும். பின்பு வயலைத் தயாரித்தல் வேண்டும்.
  • பாதுகாப்பற்ற தரிசு நில காலம் மற்றும் மண் மூடி பயிர்களான எள், தட்டைப்பயறு, ஆகியவற்றை பயிரிடுவதன் மூலம் நுாற்புழுக்களைக் குறைக்க முடிகிறது.
  • நுாற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்தி மண்ணை நனைத்தல், நாற்றுக்களின் வேர்கள் மற்றும் விதைகளை ஊற வைத்தல் ஆகியவை நுாற்புழுத் தொகைக் கட்டுப்படுத்துகிறது.
  • விதைகளை ஈபிஎன் மற்றும் கார்போஃபூரான் உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • ஊடுருவும் தன்மைபெற்ற ஆக்ஸமைல் (அ) ஃபென்சல்ஃபோதியான், போரேட், கர்போஃபூரான் மற்றும் டீபீசிபி ஆகியவற்றில் நாற்றின் வேர்களை ஊற வைத்து பின் நடவு செய்தல் வேண்டும்.
  • பயிர் நடவு செய்வதற்கு முன் மண்ணில் 'டீலோன்' ஐ உட்செலுத்த வேண்டும்.

2. நெல் வேர் நூற்புழு:

அறிகுறிகள் :

  • பாதிக்கப்பட்ட வேர்கள் வெற்றிட பகுதியுடனும் நிறமாற்றத்துடனும் காணப்படும்.
  • இதனால் நீர் மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளுதல் பாதிக்கிறது.
  • பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • தூர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.

கட்டுப்பாடு :

  • நாற்றங்காலில் கார்போபூரான் @ 1.0 கிலோ ai / ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

3. வெண் இலைநுனி நுாற்புழு

அறிகுறிகள் :

  • நெற்பயிர் இலை நுனிகளை தாக்கி, இலைகளின் மேல்பகுதியில் 3-5 செ.மீ வரை வெள்ளை நிறமாக மாறி பின் காய்ந்து விடுகிறது. இதுவே 'வெண்நுனி'
    எனப்படுகிறது.
  • வளர்ச்சியடையும் இலைகளின் நுனிகளில் முறுக்கு ஏற்பட்டு சுருண்டு காணப்படும்.
  • நோய் தாக்கிய பயிர்கள் வளர்ச்சி குன்றியும், (குட்டையாக) வீரியம் இழந்தும் காணப்படும். மேலும் சிறிய கதிர்களையே உருவாக்கும்.
  • நோய் தாக்கப்பட்ட கதிர்களில் மலட்டுத் தன்மை ஏற்பட்டு, வடிவம் சிதைந்த உமிச்செதில்கள் மற்றும் சிறிய சிதைந்த அரிசிகளுடன் காணப்படும். தீவிரதாக்குதலின் போது நோய் தாக்கப்பட்ட நெல்மணிகள் பதராக, சப்பையாக மாறிவிடுகின்றன.
  • நுாற்புழு தாக்கப்பட்ட விதைகளை விதைத்தால், முதிர்ச்சியற்ற தன்மையில் இருக்கும் நுாற்புழுக்கள் செயல் ஊக்கம் பெற்று மெல்லிய ஈரப்படலம் மூலமாக பயிரின் மேல்பகுதியை நோக்கிச் சென்று இலை பகுதிகளில் புற ஒட்டுண்ணிகளாக இருந்து இலை முழுவதையும் தின்றுவிடும்.
இலை நுனிகள் வெண்மையாகி, காய்ந்துவிடும் முறுக்கி, சுருண்ட இலைநுனிகள் பாதிக்கப்பட்ட வயல்

 

கட்டுப்பாடு :

  • நுாற்புழு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான டிபிஎஸ் 1, டிபிஎஸ் 2, ஆகிய இரகங்களை பயிரிட வேண்டும்.
  • விதைகளை விதைக்கும் முன்பு, அதிலுள்ள நுாற்புழுவின் தன்மையை அழிக்க விதை விதைப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன்பு இரவு முழுவதும் விதைகளை நன்கு ஊற வைத்து வெயிலில் ஒரு நாளுக்கு 6 மணி நேரம் என்ற கணக்கில் 2 நாட்கள் 12 மணி நேரம் நன்கு உலர விட வேண்டும்.
  • விதைகளை 52-53° செ வெப்ப அளவு உள்ள வெந்நீரில் 15 நிமிடங்கள் நன்கு ஊறவைத்தல் வேண்டும்.
  • நாற்று நடவு செய்வதற்கு 7 நாட்களுக்கு முன்னர், நாற்றங்காலில் ‘கார்போஃபியூரான் 3 ஜி’ @ 30 கிலோ(அ)1.0 கிலோ செயற்கூறு (எ.ஐ)/எக்டர் அளவில் அளிக்க வேண்டும்.
  • நடவு செய்து 45 நாட்களில் 'கார்டாஃபைடிரோக்ளோரைடு' 4 ஜி' @ 25 கிலோ (அ)1.0 கிலோசெயற்கூறு (எ.ஐ)/எக்டர் அளித்தல் வேண்டும்.
  • 'அப்லங்காய்டஸ் பெசீயீ' தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு, நுாற்புழுவற்ற விதைகளையும், நுாற்புழு தாக்குதலற்ற நாற்றுக்களையும் பயன்படுத்த வேண்டும்.
  • பயிர் அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சியிருக்கும் நுாற்புழுப் பிறப்பிடமான தாக்கப்பட்ட விதைகள், களைகள், பயிர்த்துார்கள் ஆகியவற்றை வயலிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும்.
  • ‘பெனோமைல்’ அல்லது ‘தியாபென்டஜோல்’ ஆகியவற்றுடன் விதைநேர்த்தி மேற்கொள்வது நுாற்புழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • நுாற்புழு தாக்கப்பட்ட பயிர்களின் மேல் 'பாரத்தியான்' (0.25 சதவிகிதம்) மற்றும் டிரைக்லோரோபாஸ் (0.03 சதவிகிதம்) ஆகியவற்றை மூன்று முறைகன் தெளிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.
கார்போப்யூரான் இடவும் பினோமைல் கொண்டு விதை நேர்த்தி செய்க

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013