நூற்புழுக்கள் :: பழப்பயிர்கள்

கொய்யா மற்றும் மாதுளையில் நூற்புழு மேலாண்மை - வீடியோ ( தமிழில் )


பழப் பயிர்கள்:

வாழை:

அறிகுறிகள் :

  • வேர்களிலும், கிழங்குகளிலும் சாற்றை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் வேர்களிலும், கிழங்குகளிலும் கருமை நிறங்கள் காணப்படும். நூற்புழுக்கள் ஏற்படுத்தும் காயங்கள் வழியாக பாக்டீரியா மற்றும் பூசண நோய்க்கிருமிகள் எளிதில் நுழைந்து நோய்களை உண்டாக்க ஏதுவாகும். தாக்கப்பட்ட வாழைகள் வாடும்.

கட்டுப்பாடு :

  • நடவுக்கு வாழைக்கன்றுகளை நூற்புழுக்கள் தாக்காத இடங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
  • தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும்.
  • கிழங்கில் மருந்திடல் (Paring and Prolinage): வாழைக் கன்றுகளை நடுவதற்குமுன் கிழங்குப்பகுதியில் உள்ள வேர்கள் மற்றும் கருநிறப் பகுதிகளை கத்தியால் நன்கு சீவிவிட்டு, குழைந்த களிமண்ணில் கிழங்கை முக்கி எடுத்து அதன்மீது 40 கிராம் கார்போஃபியூரான் குறுணை மருந்தைப் பரவலாகத் தூவி, பின்னர் நட வேண்டும்.
பப்பாளி:

கோடையில் நிலத்தை ஆழ உழவு செய்து சுமார் 1 – 3 மாதக் காலம் தரிசாக வைத்திருத்தல் நூற்புழுக்களால் தாக்கப்படாத வளமான நாற்றுகளைப் பெற நாற்று தயாரிக்கப்படும். மண் கலவை அடங்கிய பாலிதீன் பைகளில் 25 மி.லி காப்பர் ஆக்சி குளோரைடு (1 லி தண்ணீருக்கு 1கி மருந்து) கரைசல் மற்றும் பியூரடான் 3ஜி குறுணை மருந்து 1 கி இடுதல் நாற்று நடுவதற்கு முன்பு 2 x 2 அடியில் எடுக்கப்பட்டிருக்கும் குழியிலும் பூக்கும் தருணத்தில் பியூரடான் 3ஜி குறுணை மருந்தினை தலா 33 கி வீதம் இடுதல்.

திராட்சை : மிலாய்டோகைனி இன்காக்னிட்டா

அறிகுறிகள் :

  • வேர்களில் தாக்குவதால் கொடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, இலைகள் சுருண்டு வெளிறிய மஞ்சள் நிறமாக்க் காணப்படும். பாதிக்கப்பட்ட கொடிகளின் வேர்களில் உருண்டையான முடிச்சுகள் இருக்கும்.

கட்டுப்பாடு :

  • கவாத்து செய்தவுடன் வேப்பம் பிண்ணாக்கு கொடிக்கு 200 கிராம் அல்லது கார்போஃபியூரான் குறுணை மருந்தை கொடிக்கு 60 கிராம் வீதம் இட வேண்டும்.

எலுமிச்சை : டைலங்குலஸ் செமிபெனிட்ரன்ஸ்

அறிகுறிகள் :

  • வேர்களில் சாறு உறிஞ்சப்படுவதால், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து போகும். நுனிக்குருத்து வளர்ச்சி குன்றியிருக்கும். பழ மகசூல் குன்றி, தரம் குறையும்.

கட்டுப்பாடு :

  • நூற்புழுவால் தாக்கப்படாத கன்றுகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.
  • மரம் ஒன்றிற்கு 100 கிராம் கார்போஃபியூரான் அல்லது 40 கிராம் ஃபோரேட் குறுணை மருந்தை 15 செ.மீ. ஆழத்தில் மண்ணிலிட்டு கலக்கி விட வேண்டும்.
ஆரஞ்சு :
இப்பயிர் நாரத்தை நூற்புழுவால் பாதிக்கப்படுகிறது. இந்த நூற்புழு தாக்கப்பட்ட மரத்தில் கிளைகள் குறைவாகவும், இலைகள் மஞ்சளாகி வெளுத்து கொஞ்சும் கொஞ்சமாக உதிர்ந்தும் சில கிளைகளின் நுனியானது வாழ காய்ந்தும், பழங்கள் எண்ணிக்கையில் குறைந்தும், அளவில் சிறியவைகளாகவும் ஆகி விற்பனைத் தரத்தை இழந்து விடுகின்றன. மரத்தைச் சுற்றி செண்டு மல்லிச்செடியை வளர்ப்பதன் மூலம் மண்ணில் இந்த நூற்புழுவின்  எண்ணிக்கையைக் குறைக்கலாம். ஒரு மரத்திற்கு 10 கிலோ தொழு உரம் 60 கிராம் போரேட் குறுணை, வேப்பம் பிண்ணாக்கு அல்லது ஆமணக்கு 400 கிராம் கலவையை சூலை அல்லது ஆகஸ்டு மாதங்களில் இடுவதன் மூலம் புழுக்களின் தாக்குதலினின்று பாதுக்கலாம். மரக்கன்று வாங்கும் போது செடியில் நிறைய சல்லி வேர்கள் உள்ளனவா என்பதனைப் பார்த்து வாங்கி நடுதல் சிறந்தது. அவ்வாறு உள்ள நாற்றுகளில் இப்புழுவினால்  உள்ள தாக்கம் அதிகம் இராது.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013