அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: மா

தண்டு அழுகல் நோய்: லசியோடிப்ளாய்டியா தியோப்ரோமா

அறிகுறிகள்:

  • பழக் காம்பின் அருகே உள்ள தோல் பகுதி கருமை நிறமாக மாறிவிடும்
  • பாதிப்படைந்த பகுதி, விரிவடைந்து கரு வட்ட வடிவத்தில் தோன்றும். இவை குளிர் கால வெப்ப நிலையில் மிக அதிவேகமாக பரவி இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே முழு பழத்தினை கருமையாக்கிவிடும்
  • பழத்தின் சதைப்பகுதி பழுப்பு நிறமாகவும் மற்றும் மென்மையாகவும் காணப்படும்
தோல் பகுதி கருமையாகிவிடும் கரு வட்ட வடிவ பாதிப்பு பழுப்பு நிற சதைப்பகுதி பாதிக்கப்பட்ட பழங்கள்

கட்டுப்பாடு:

  • முதிராத பழங்களை அறுவடை செய்வதைத் தவிர்க்கவும். கார்பென்டசிம் மற்றும் சூடான நீரினால் அறுவடை நேர்த்தி செய்வதனால் தண்டு அழுகல் நோயிலிருந்து கட்டுப்படுத்தலாம். தண்டு அழுகல் நோயிலிருந்து கட்டுப்படுத்தலாம்
  • தண்டு அழுகல் நோயினைக் கட்டுப்படுத்த, கார்பென்டாசிம் மற்றும் ப்ரோக்லோரஸ் ஆகிய கரைசலை ஒன்றாக உபயோகிக்க வேண்டும்
  • பழத்தோட்டக் கிடங்கில் உள்ள பழங்கள் தண்டு அழுகுல் நோயினால் பாதித்திருந்தால் அகற்றிவிடவும்
  • முதிர்ந்த பழங்களை பழத்தோட்டத்திலிருந்து அங்கு ஒன்று இங்கு ஒன்றாக அறுவடை செய்ய வேண்டும்

Image Source:
https://www.apsnet.org/publications/imageresources/Pages/tropical087.aspx
http://www.abc.net.au/site-archive/rural/nt/content/201210/s3604875.htm

S Iram and HMI Ahmad. Major Post Harvest Disease of Mango and their Management. 2013.  Intl. J. Agron. Plant. Prod. 4 (12), pp: 3470-3484.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015