மாவுப்பூச்சி: பிளானோகாக்கஸ் லைலாசினஸ்
சேதத்தின் அறிகுறி:
- இதன் தாக்கம் இலையின் அடிப்பகுதியிலும், இளம் குருத்துக்களின் கணுக்களிலும் காணப்படும்.
- தாக்கப்பட்ட தாவரங்களில் இலைகள் உதிர்ந்துவிடும்.
பூச்சியின் விபரம்:
- உடம்பில் உள்ள வெதிலில் வெள்ளை மாவுப் போன்ற படிவம் காணப்படும்.
- சிறியதாகவும், மென்மையாகவும் காணப்படும்.
- பெண்பூச்சி இறக்கையற்றதாகும், உடம்பு வெள்ளை நூலால் மூடப்பட்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- தேவையான நிழலை பேணுதல் வேண்டும்.
- எறும்புகளில் கூடுகளை அழித்துவிட வேண்டும்.
- குயினால்பாஸ் 1.5 சதவிதம்் (அ) மாலத்தியான் 5 சதவிதம் தெளிக்கவும்.
- குயினால்பாஸ் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
- கிரிப்டோலேமஸ் மான்டுசேரி பொறிவண்டை பாதுகாக்க வேண்டும்.
- லெப்டோமேஸ்டிக்ஸ் டேக்டைலோபி ஒட்டுண்ணியை விடலாம்.
|
 |