பூசணி வண்டுகள்: சிவப்பு வண்டு: அல்லோக்கோஃபோரா ஃபெவிகோலிஸ், நீல நிற வண்டு: அ.இன்ட்டர்மீட்ய, சாம்பல் நிற வண்டு: அ.சிங்ட்டா
சேதத்தின் அறிகுறிகள்:
- வண்டினப் புழுக்கள் மண்ணில் இருந்துக் கொண்டு, வேர், தண்டுமற்றும் காய்களை சாப்பிட்டு சேதப்படுத்தும்
- வண்டுகள் இலை மற்றும் காய்களை சாப்பிட்டு சேதப்படுத்தும்
 |

|
அறிகுறிகள் |
பூச்சி |
பூச்சியின் விபரம்:
- வண்டினப் புழு: முட்டையிலிருந்து வெளிவந்த புழுக்கள் அழுக்கடைந்த வெண்நிறத்தில் இருக்கும்.வளர்ந்த புழுக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
அவ்லோக்கோஃபோரா ஃபெவிகோலிஸ்: சிவப்பு நிறத்தில் இருக்கும்
அ சிங்ட்டா: சாம்பல் நிற வண்டு, இறக்கையின் ஓரங்களில் பளபளப்பான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்
அ இன்ட்டர்மீடியா: நீலத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
- அறுவடைக்குப் பிறகு நிலத்தை உழுது உறக்கத்தில் இருக்கும் வண்டுகளை சேகரித்து அழிக்கவும்
- வண்டுகளை சேகரித்து அழிக்கவும்
- ஹெக்டேருக்கு மாலத்தியான் அல்லது டைமெத்தோயேட் அல்லது மிதைல் டெமிட்டான் 500 மி.லி தெளிக்கவும்
|