இலைப்புழு : னூர்டா பிளைட்டியாவிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழுக்கள் இலைப்பச்சையத்தை சுரண்டித் தின்பதால் இலைகள் சல்லடை போன்று காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: வெண்ணிற நீள்வட்ட வடிவ முட்டை குவியல்கள் இலைகளில் இருக்கும்
- புழு: புழுக்களில் முன்மார்பு உறை இல்லாமல் இருக்கும்
- பூச்சி: மொக்குப்புழுவை போன்றே இருக்கும் ஆனால் சற்று பெரியது
கட்டுப்படுத்தும் முறை:
- மரத்தை சுற்றி உழவுசெய்து மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை வெளிகொணர்ந்து அழிக்கவும்
- பூ மொக்குகளைப் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும்
- விளக்குப்பொறி ஹெக்டேருக்கு ஒன்று அமைக்கவும்
- கார்பரில் 50 WP@ 1 கிராம்/லிட்டர் அல்லது மாலத்தியான் 50 EC@ 2 மி.லி/லிட்டர் தெளிக்கவும்
|
 |
 |