பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: பூண்டு
அடித்தாள் அழுகல் நோய்: ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் வகை கார்லிக்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • செடிகள் வளர்ச்சி குறைந்து, மஞ்சள் அல்லது பழுப்பு நிற மாற்றம் இலை நுனியில் இருந்து தோன்றும்
  • குறைந்த அளவு குமிழ்கள், சிதைந்த குமிழ்கள் மற்றும் குறைந்த அளவு பழுப்பு நிற வேர்கள் தோன்றும்
  • சேமித்துவைப்பதில் - குமிழ்களில் பஞ்சு போன்று, அமிழ்ந்த, மஞ்சள், பழுப்பு அழுகும் புண்கள் காணப்படும்
  • ஆரம்ப கட்டங்களில் பாதிக்கப்பட்ட குமிழ்களில் மென்மையாக மாறுவதுடன் வெட்டினால் தண்ணீர் கொண்டு இருக்கும்
  • வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு பூஞ்சை வளர்ச்சி, அழுகிய பகுதிகளில் காணப்படும்.
  • கிராம்பில் பெரிய விரிசல் ஏற்பட்டு பின்பு திசுக்கள் உடைந்து காயுந்து சுருங்கி  சிறிதாகி விடும்
வளர்ச்சி குறைந்து குமிழ்கள் கிராம்பில் சிறிய புண்கள் மஞ்சள் பழுப்பு அழுகிய புண்கள் ஆழமான விரிசல்
நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • பூஞ்சை  மண்ணில் நீண்ட காலத்திற்கு வாழும்
  • பரவல் - கருவிகள் அல்லது உபகரணங்களில் பாதிக்கப்பட்ட மண் மூலம், பாதிக்கப்பட்ட குப்பைகள், பாதிக்கப்பட்ட விதை அல்லது ஓடும் தண்ணீர் மூலம் பரவும்.
  • காயமடைந்த திசு மூலம் நோய் நுழைகிறது
  • நோய் குமிழின் தளத்தில் தோன்றி  முனையை நோக்கி முன்னேறுகிறது
  • அதிக ஈரப்பதம் மற்றும் 20-30°C வெப்பநிலை சாதகமான நிலைமைகளை ஆகும்
கட்டுப்படுத்தும் முறை:
  • அல்லியம் வகைகளை கொண்டு சுழற்சிமுறையை தவிர்க்க வேண்டும். (வெங்காயம் மற்றும் லீக்ஸ்)
  • குளிர்ந்த வெப்பநிலை, நல்ல காற்றோட்டம் மற்றும் குறைந்த ஈரப்பதத்தில் குமிழ்களை சேமிக்கவும்
  • சேதமடைந்த குமிழ்களை சேமிக்க  தவிர்க்கவும்
Source of Images:
http://onvegetables.com/2012/07/24/fusarium-basal-plate-rot-of-onion-and-garlic/
http://www.science.oregonstate.edu/bpp/Plant_Clinic/Garlic/Fusarium.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015