பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பெர்ரி இறகுப்பூச்சி: ஆக்ஸிப்டிலஸ் ரெகுலஸ்
அறிகுறிகள் :

  • பூ மொட்டுக்களை ஆரம்ப நிலை புழுக்கள் பின்னியிருக்கம்.
  • வளர்ந்த புழுக்கள் பழக்கொத்தை தாக்கும்.
  • புழுக்கள் பச்சை பழங்களை துளைத்து, வலை பின்னியிருக்கும்.
  • உள்ளே இருக்கும் சதைப்பான பகுதியை உண்ணும்.
  • தாக்கப்பட்ட பழங்களை ஸ்டங் பெர்ரிஸ் என்றழைக்கப்படுகிறது

பூச்சியின் விபரம்

  • புழு : சிறியதாக, இளம் பச்சை (அ) இளஞ் சிவப்பு நிறத்தில், சிவப்பு நிற வரியுடன் காணப்படும்.
  • பூச்சி : சிறியதாக இருக்கும்.

கட்டுப்பாடு

  • சேதமடைந்த இலைகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
  • கோடை உழவு செய்தல்
  • இனக்கவர்ச்சிப் பொறியை பயன்படுத்துல்
  • பூப்ரோபெசின், அசிட்டோம்பிரிட்டை குறிப்பிட்ட இடத்தில் அளித்தல்.

 

புழுக்கள் தாக்கிய திராட்சை கொத்து  
சேதமடைந்த பழங்கள்
பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015