பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: அன்சினுலா நெக்கேட்டர்

அறிகுறிகள்

  • சாம்பல் நோய் வளர்ச்சி அதிகமாக இலையின் மேற்புறத்தில் தோன்றும்
  • பாதிக்கப்பட்ட இலைகள் உருவமாற்றமும், நிறம்மாறியும் காணப்படும்
  • தண்டின் நிறம் மாறி ஆழ்ந்த பழுப்பு நிறத்தில்  மாறிவிடும்
  • பூக்களை தாக்குவதால் பூக்கள்  உதிர்ந்து, பழம் பிடிப்பதை குறைத்துவிடுகிறது
  • முதலில் பழங்கள் தாக்கப்படுவதால், தாக்கப்பட்ட பழங்கள் உதிர்ந்துவிடும்
  • சாம்பல் நோய் முதிர்ந்த பழங்களின் மேல் காணப்படும். நோய் தாக்கப்பட்டதால் பழங்களின் மேல் காணப்படும். நோய் தாக்கப்பட்டதால் பழங்களின் தோல்களில் வெடிப்புகள் ஏற்படும்
  • இவை காற்று வழி பூசண வித்துக்கள் மூலம் பரவும்
  • செயலற்ற பூசண இழைகள் மற்றும் பூசண வித்துக்கள் தாக்கப்பட்ட தண்டு மற்று மொட்டுகளில் தோன்றும்
  • புழுக்கமான சூடான நிலையுடன் மந்தமான மேகமூட்டத்துடன் இருக்கும் வெப்பநிலை உகந்தது

கட்டுப்பாடு

  • 0.25% கரிமமற்ற சல்பர் அல்லது 0.1% சினோமெத்யோனேட் அல்லது 0.05% டைனோகேப்பை தெளிக்கவும்


 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015