பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள் |
முன் பருவ இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா அரசிடிகோலா
அறிகுறிகள்
- விதைத்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்நோய் தோன்றுகிறது.
- இலைகளின் இரண்டு பக்கங்களிலும் வட்டமான கரும் பழுப்பு அல்லது கருப்புப்புள்ளி இருக்கும்.
- கரும்புள்ளியைச் சுற்றி மஞ்சள் நிற வளையங்கள் காணப்படும்.
- அறிகுறிகள், காம்புகளிலும், தண்டுகளிலும் காணப்படும்.
கட்டுப்பாடு
- கம்பு மற்றும் சோளத்தை நிலக்கடலையுடன் (1:3) என்ற விகிதத்தில் போட்டால் இலைப்புள்ளி நோய் குறையும்.
- இந்நோயின் தாக்குதல், அதிகம் காணப்படும் வயல்களில் மற்றும் பயிராக கம்பு, மக்காச்சோளம், எள் ஆகியவற்றை பயிரிட்டு நோய் கிருமிகளை அடுத்த பயிருக்கு பரவாமல் தடுக்கலாம்.
- முந்தியப் பயிரின் கழிவுகளை ஆழமான உழுது, முதல் நிலை நோய்பரப்பும் காரணியைத் தடுக்கவேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் அல்லது மாங்கோசெப் 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலைகள் நன்கு நனையும்படி கைத் தெளிப்பானால் தெளித்தால் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
|
|
|