பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள் |
பின் பருவ இலைப்புள்ளி நோய்க்கு உள்ள தடுப்புமுறைகள்
அறிகுறிகள்
- குருவைப் பருவத்தில் விதைத்த 55-57 நாட்கிளல் அறிகுறிகள் தென்படும். சம்பா பருவத்தில் விதைத்த 42-46 நாட்களில் அறிகுறிகள் தென்படும்.
- வட்டவடிவ கருப்பு நிறப்புள்ளிகள் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும்.
- இப்புள்ளிகள் ஒழுங்கற்ற வடிவிலும், இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து, இலையின் காய்ந்த தோற்றத்தை கொடுக்கும். இறுதியில் இலைகள் உதிர்ந்துவிடும்.
கட்டுப்பாடு
- கம்பு மற்றும் சோளத்தை நிலக்கடலையுடன் (1:3) என்ற விகிதத்தில் போட்டால் இலைப்புள்ளி நோய் குறையும்.
- இந்நோயின் தாக்குதல், அதிகம் காணப்படும் வயல்களில் மற்றும் பயிராக கம்பு, மக்காச்சோளம், எள் ஆகியவற்றை பயிரிட்டு நோய் கிருமிகளை அடுத்த பயிருக்கு பரவாமல் தடுக்கலாம்.
- முந்தியப் பயிரின் கழிவுகளை ஆழமான உழுது, முதல் நிலை நோய்பரப்பும் காரணியைத் தடுக்கவேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் அல்லது மாங்கோசெப் 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலைகள் நன்கு நனையும்படி கைத் தெளிப்பானால் தெளித்தால் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
|
|
|