துரு நோய் : பக்சீனியா அரசிடிஸ்
அறிகுறிகள்
- கொப்பளங்கள் முதல் இலையின் அடிப்பாகத்தில் தோன்றுகின்றன. இந்நோய் அதிகம் ஏற்படும். இரகங்களில் கொப்பளங்களைச் சுற்றி பூசணவித்துக்கள் சூழ்ந்திருக்கும்.
- இலையின் மேல்பாகத்திலும் ஆரஞ்சு நிற கொப்பளங்கள் காணப்படும்.
- இக்கொப்பளங்கள் செடியின் மேல் பாகங்களான பூக்கள் மற்றும் காய்களில் காணப்படுகிறது.
- இந்நோயின் அறிகுறி அதிகமாகக் காணப்படும். செடிகளில் இலைகள் காய்ந்தும், ஆனால் உதிாந்துவிடாமல் செடியுடன் ஒட்டியிருக்கும்.
கட்டுப்பாடு
- முன் பருவத்தில் (ஜ¤ன் 15ல்) விதைத்தால் இந்நோய் பராமல் தடுத்திடலாம்.
- முன் பருவத்தில் வரும் நிலக்கடலையின் மூலம் இந்நோய் பரவுகிறது.
- இந்நோயைக் கட்டுப்படுத்த குளோரோதலோனில் 0.2 சதவிகிதம் அல்லது மேங்கோசெப் 0.25 சதவிகிதம் அல்லது ஹக்சகொனசோல் அல்லது புரோப்பிகொனசோல்யைப் பயன்படுத்தலாம்.
|
|