பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்

தண்டழுகல் நோய் : ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி

அறிகுறிகள்

  • வெண்மையான பூசணவித்துக்கள் பாதிக்கப்பட்ட செடியின் மேல்புறத்தில் காணப்படுகின்றன.
  • செடியின் அடிப்புறத்தில் காய்ந்தும், மஞ்சள் நிறமாக மாறியும் காணப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட செடிகள் அடிப்புறத்தில் திசுக்கள் உதிர்ந்து காணப்படும்.
  • கடுகு போன்ற சிறிய அளவு ஸ்கிலிரோசியத பாதிக்கப்பட்ட இடத்தில் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட செடியில் நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் உண்டாகின்றன.

கட்டுப்பாடு

  • மண்ணின் மேல் உள்ள கழிவுகளை, ஆழமாக உழவேண்டும்.
  • விதையை டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம் அல்லது டி.விரிடி 2-5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம். அல்லது ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.
  • விதையை 3 கிராம் திரம் + கார்பன்டாசிம் என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.

 

Oil Seeds Groundnut Infected Leaf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015