பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள் |
மொட்டுக் கருகல் நோய் : நிலக்கடலை, மொட்டுக் கருகல் வைரஸ் (பிபீஎன்வி)
அறிகுறிகள்
- இளம் இலைகளில் வெளிர் பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றி (வளையப் புள்ளிகள்) கோடுகளாக மாறுகின்றன.
- நுனியில் மொட்டுக் கருகல் ஏற்படுகின்றன. (அதிக வெப்பநிலையில்)
- செடிகள் முதிர்ச்சியடையும் போது சிறிய இடைக்கணுவுடன் மொட்டுக்கள் தோன்றி வளர்ச்சி குன்றி காணப்படும்.
- இவ்வகையான நோய்கள் இலைப்பேன் மூலம் பரவுகின்றன.
கட்டுப்பாடு
- குருவை, சம்பா பருவங்களில் முன் காலங்களில் விதைப்பு மேற்கொண்டால் இந்நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
- பயிரின் அடர்த்தியை பெருக்குதல், முன் பருவ காலங்களில் விதைத்தல், கம்புடன் சேர்த்து விதைத்தல் (கலப்புப் பயிர்) ஆகியன நோய் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தும் முறைகள்.
- நிலக்கடலை, கம்பு (7:1) என்ற விகிதத்தில் விதைக்கலாம்.
- மானோகுரோட்டாபாஸ் 1.6 மில்லி / லிட்டர் அல்லது டைமீதோயேட் 2 மில்லி / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தி நோய் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தலாம்.
|
|
|