பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கொய்யாப்பழ ஈ: பேக்ரோசெரா டைவர்சஸ்
சேதத்தின் அறிகுறி:

  • புழுக்கள் மற்றும் ஈக்கள் பாதி கணிந்த பழங்களையே தாக்கும்.
  • பழத்தின் மீது முட்டையிட துளைகள் காணப்படும்.
  • பழத்திலிருந்து துர்நாற்றம் வீச துவங்கும்.

பூச்சியின் விபரம்:

  • பூச்சியின் கால்கள் மஞ்சள் நிறமாகவும் இறக்கைகள் பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட முறை:

  • தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட வேண்டும்.
  • கோடை உழவு செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
  • மெத்தில் யூணஜீனால் கவர்ச்சிப் பொறியை ஹெக்டர்க்கு பத்து வீதம் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
  • மெத்தில் யூஜீனால் மற்றும் மாத்தியான் 50 இ.சி 1:1 என்ற கலவையில் கலந்து கவர்ச்சிப் பொறியில் வைத்து ஈக்களை அல்லது மாலத்தின் 50 இ.சி 0.05 சதவிதம் மருந்தினை தெளிக்கலாம்.
  • மொலஸஸ் அல்லது வெல்லத்தை 10 கிராம் / லிட்டர் கீழ்வரும் ஏதாவது ஒரு பூச்சி மருந்தினை இரண்டு முறை தெளிக்கவும்.
    • மாலத்தியான் 50 இ.சி 2 மி.லி / லிட்டர்
    • டைமித்தோயேட் 30 இ.சி 1 மி.லி / லிட்டர்
  • (பழங்கள் பழுப்பதற்கு முன்னால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை)
  • ஒப்பியல் காம்பன்ஜேட்டஸ், ஸ்பாலன்ஜியா பிலிப்பைனன்ஸிஸ், டையகாஸ்மிமார்பா கிரெளசி - இவ்வொட்டுண்ணிகளை களத்தில் விட்டு பழ ஈயினை கட்டுப்படுத்தலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015