பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மரப்பட்டைப்புழு: இன்டார்யேலா டெரா ஒனிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:

  • பட்டை துளைப்பான் இளம் வயது மரங்களை அதிக அளவில் தாக்குகிறது.
  • புழு மரப்பட்டையை துளைத்து உள்ளே சென்று வலைப்பின்னலை உருவாக்கி உணவுக் கடத்தும் திசுவை உண்கிறது.
  • புழு இரவு நேரங்களில் மட்டும் மரப்பட்டையை உண்ணுகிறது பகல் நேரங்களில் மரத்துளைகளில் மறைந்து வாழ்கிறது.

பூச்சியின் விபரம்:

  • புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும்
  • வண்டு - மஞ்சள் நிறமுடையது முன் இறக்கையில் பழுப்பு நிற கோடும், பின் இறக்கையில் வெண்ணிற பட்டைக்கோடு இருக்கும்
  • ஆண் வண்டு சிறியதாகவும் பெண் வண்டு பெரியதாகவும் இருக்கும்.
அறிகுறி முதிர்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • மரத்தின் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்கி அழிக்க வேண்டும்.
  • நிலக்கரி தார் + மண்ணெண்ணெய் 1:2 அல்லது கார்பெரில் 50 wp 20 / 1 பகுதி தண்ணீர் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும்.
  • வண்டுகள் முட்டையிடுவதை தடுக்க தளர்வாக உள்ள மரப்பட்டைகளை நீக்கிவிட வேண்டும்.
  • மோனோகுரோடோபாஸ் 36 WSC 10 மிலி 2.5 செமீ உறிஞ்சும் பஞ்சில் தேய்த்து மரத்தில் வைக்க வேண்டும்.
  • கொக்கி கொண்டு துளையிலிருந்து பூச்சியை வெளியே எடுத்துவிட வேண்டும்.
  • பிறகு மோனோகுரோடோபாஸ் 36 WSC  10 முதல் 20 மிலி துளையில் தடவ வேண்டும்.
  • கார்போப்யூரான் 3G 5கி துளையில் வைத்து பின் மண் கொண்டு துளையை அடைக்கவும்.

Image Source:

http://www.nbair.res.in/insectpests/Indarbela-tetraonis.php


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015