பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பச்சை செதிள் பூச்சி: காக்கஸ் விடிஸ்
சேதத்தின் அறிகுறி:

  • குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலைகளின் சாறுகளை உறிஞ்சும்.
  • இலைகள் மஞ்சலாக மாறும்.

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகள் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • பூச்சிகள் தட்டையாகவும் மேற்பாகம் லேசாக குவிந்து மஞ்சள் கலந்த பச்சை நிறமாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்குதல் ஆரம்பிக்கும் பருவத்திலேயே கிளைகளை வெட்டி அழித்துவிட வேண்டும்
  • மோனோகுரோட்டோபாஸ் 1 மி.லி / லிட்டர் (அ ) பென்தோயேட் 1 மி.லி / லிட்டர் தெளிக்கவும்.
  • இரண்டு வாரங்கள் கழித்து மரத்திற்கு 20 என்ற விகிதத்தில் கிர்டோலேமஸ் மான்ட்ரொஸரி பொரிவண்டை விடலாம்.
  • பாஸ்போமிடான் 215 மிலி ி மருந்து தண்ணீருடன் கலந்து தெளித்தால் நாற்றங்காலில் செதில் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • நடவு வயலில் - பாஸ்போமிடான் 300 மிலி மருந்தைத் தெளிக்கவும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015