பயிர் பாதுகாப்பு :: கொய்யா பயிரைத் தாக்கும் நோய்கள்

பாசி இலைப்புள்ளி நோய்

அறிகுறிகள்:

  • நோய் பாதித்ததின் அறிகுறியாக இலையின் மேற்புறத்திலும், கீழ்புறத்திலும் துரு நிறத்தில் அடர்த்தியான புள்ளிகளுடன் காணப்படும்.
  • இப்புள்ளிகளை துண்டுகளாக்கினால், மெல்லிய வெள்ளை அல்லது கரு நிறத்தில் ஓடு போன்று இலைகளில் காணப்படும்.
  • இந்தப் புள்ளிகள் ஒருங்கிணைந்து இலைகளில் படர்ந்திருக்கும். இவை முதிர்ந்த நிலையின் போது தெளிவற்ற சாம்பல் பச்சை நிறத்தில் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • தகுந்த சாகுபடியான உரமிடுதல், நீர் பாய்ச்சல், கவாத்து செய்வதன் மூலம் காற்றோட்டமாகவும் மற்றும் சூரிய கதிர்களினாலும் களைகளை கட்டுப்படுத்தல், மரங்களுக்கு இடைவேளி அமைப்பதன் மூலம் பாசி இலைப்புள்ளி நோயினை கட்டுப்படுத்தலாம்.
  • காப்பர் ஆக்ஸிக்ளோரைட் – 0.25% அளவில் தெளிப்பதன் மூலம், பூச்சி, வண்டு, இலை உதிர்தல் மற்றும் புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

 




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015