பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள் |
கரிக்கோல் அழுகல் : மேக்ரோஃபோமினா பேஸியோலினா |
அறிகுறிகள் :
- இந்நோய்க் காரணி இளம் நாற்றுகளின் வேரை தாக்கக் கூடியது, நோயுற்ற பயிர் வாட்டத்துடன் காணப்படும்.
- பலவீனமான பயிரின் தண்டுப் பகுதியில் பழுப்பு நிறமான கோடுகளுடன் காணப்படும்.
- தண்டின் உட்புறம் காணப்படும் திசுவானது பழுப்பு நார் நாராக உரிந்து, சிறிய கருமையான கடுகு போன்ற ஸ்கிளிரோஷியாக்கள் ஆங்காங்கே காணப்படும்.
- திசுப் பகுதி நார் நாராக பிரிந்து விடுவதால் தலைப்பகுதியானது பலவீனமான பகுதியில் ஒடிந்து காணப்படும்.
- வேர்ப் பகுதியும் உரிந்து காணப்படும்.
 |
 |
 |
நார் நாராக உரிந்த அடித்தண்டு |
மேலாண்மை:
- பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.
- பூக்கும் தருணத்தில் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சவும்.
- ஊட்டச்சத்து அழுத்தம் தவிர்க்க வேண்டும்.
- ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் 80 கிலோ / ஹெக்டர் பொட்டாஷ் பயன்படுத்துவதால் நோய் சேதாரம் குறைகிறது.
- சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும்.
|
|