சார்கோல் தண்டு முதல் நோய்: மேக்ரோபோமினா பேசியோலினா
- இந்நோயை ஜம்மு மற்றும் காஷ்மீர், மேற்கு வங்காளம், ஹரியானா, இராஜஸ்தான், டெல்லி, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பரவுயுள்ளது.
அறிகுறிகள்:
- செடி பூத்து 1-2 வாரங்கள் கழித்து இந்நோய் தோன்றுகிறது. வெளி இடைக்கணுவின் கீழ்பகுதி வெளில் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
- இடைக்கணுவின் முளைக்கும் பகுதி மிகவும் மோசமாக அழுகி இருக்கும்.
- நோய்க்கான காரணி நாற்றாங்கால் பயிரின் வேரினுள் நுழைந்து விடுகிறது. செடி அடையும் போது தண்டின் உள்பகுதி கருப்பு நிறமாக மாறியும் உதிர்ந்தும் காணப்படுகிறது.
- இவ்வகையான அறிகுறிகள் தண்டின் கீழ்ப்பகுதியில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தை உற்று பார்த்தால் அதில் சிறிய கருப்பு நிறமுடைய நோய்க்கான காரணியை தோற்றுவிக்கும் ஸ்கிளிரோஷியா காணப்படுகிறது.
- இந்நோய்க்கான காரணி தானியத்தின் மேல்பகுதியை பாதித்து அதை கருப்பாக்குகிறது.
- மண்ணின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மற்றும் குறைவான ஈரப்பதம்
கட்டுப்பாடு:
- பூக்கும் நேரத்தில் குறைவான தண்ணீர் கிடைப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே அதை தவிர்க்கவும்.
- டிரைக்கோடெர்மா விரிடியை தொழு உரத்துடன் 2.5 கிலோ / எக்டர் என்ற அளவில் பொடலாம். (பத்து நாட்களுக்கு முன் கலந்து வைத்து பின்னர் போடலாம்).
|
|