பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் நோய்கள்

மாவின் சாம்பல் நோய்: ஆய்டியம் மெஞ்சிஃபெரே
அறிகுறிகள்:

  • இது இலை, பூக்கள், தண்டு மற்றும் பழங்களைத்தாக்குகிறது.
  • நோயத்தாக்குதல் தீவிரமடையும் போது பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்கிறது.
  • பாதிக்கப்பட்ட பழங்கள் வளர்ச்சி அடைவதில்லை, பட்டாணி அளவு அடைவதற்கு முன் உதிர்கிறது.
  • பாதிக்கப்பட்ட இலைகளில் பூசணம் காணப்படுகிறது.
  • காற்று மூலம் பூசணம் இலைகளில் பரவுகிறது.
பூககளில் சாம்பல் நோய் தீவிரமடைந்த நிலை

கட்டுப்பாடு:

  • 0.5 கிலோ/ மரம் என்ற விகிதத்தில் கந்தகத் தூளைத் தூவவும்.
  • மேலே குறிப்பிட்ட முறையை பூக்கும் பருவத்திற்கு பிறகு, இரண்டாவதாக ஈரமான கந்தகம்(0.2%) (அ) கார்பென்டசிம்(0.1%) (அ) டிரைடிமார்ப்(0.1% ) (அ) கராத்தேன் தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015