பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் நோய்கள்

மாவின் உருக்குலைவு நோய்: ஃப்யூசேரியம் மொனிலிபார்மே

அறிகுறிகள்:

  • மூன்று வகை: முடிக்கொத்து நோய். பூங்கொத்து உருக்குலைவு, தழைப்பகுதி சார்ந்த, உருக்குலைவு
  • சிறு தளிர்கள் தடித்தும், இலைகள் சுருங்கியும் தோன்றும். சிறு தளிர்கள் வளர்ச்சி குன்றியும் குறுகியும் தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட கன்றுகள் வளர்ச்சி குன்றி குறுகிய கணுவிடைப்பகுதிகளைக்கொண்டிருப்பதுடன், இடையிடையே பெருத்துக் காணப்படுகிறது மற்றும் தலைபாகம் முடிக்கொத்து போலக் கொத்தாகக் காட்சியளிக்கும்.
  • தண்டு பாகத்தில் வேறுபாடு காட்டுகிறது மற்றும் தலைபாகம் நீண்ட நேரம் கருத்து காணப்படுகிறது.
ஃப்யூசேரியம் மொனிலிபார்மே பூங்கொத்து உருக்குலைவு
கட்டுப்பாடு:
  • நோயுற்ற தாவரங்களை அளிக்கவும்.
  • நோயற்ற கன்றுகளை உபயோகிக்க வேண்டும்.
  • அக்டோபர் மாதங்களில் NAA 100 -200 PPM தெளிக்க வேண்டும்.
  • இதைத்தொடர்ந்து கார்பென்டாசிம்(0.1%) (அ) காப்டால்(0.2%) தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015